செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - கன்னி

கனவுகளை நனவாக்கி கொள்ள விரும்பி செயல்படும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் புதன் சூரியனுடன் இணைந்து விரையஸ்தானத்தில் அமர்வது உங்களின் வெளியூர் பயணம் பயனுள்ளதாக அமையும். சிலருக்கு வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் அமையும். காலத்தையும், நேரத்தையும் அறிந்து செயல்படுவீர்கள். குறிப்பிட்ட இலக்குகளை தெளிவு செய்து உறுதியை பெறுவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டு இருக்காமல் உங்களை முழுமையாக நம்பி செயல்படுவீர்கள்.
தனாதிபதி சுக்கிரன் லாபஸ்தானத்தில் அமர்ந்து பூர்வ புண்ணியஸ்தானத்தை பார்ப்பது சிறப்பான பலனையும், வாழ்க்கையின் உறுதி தன்மையும், வளமும் பெறுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் குரு அமர்ந்து தனஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும், சத்ருஸ்தானத்தையும் பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதுவரை பட்ட கடுமையான கஷ்டங்களையும், இனி படவேண்டிய அவசியம் இருக்காது தனிப்பட்ட பகை கொண்டவர்கூட இனி உங்களிடம் இணக்கமாக இருப்பார்கள்.
வாகனம் வாங்குதல் வாகனத்தை புதுப்பித்து கொள்தல் போன்ற நற்பலன்களை பெறுவீர்கள். நல்ல காலமாக அமையும். சுருக்கமாக அனைவரிடமும் பேசுவீர்கள். லாபாதிபதி சந்திரன் மூன்றாமிடத்தில் அமர்ந்து உங்களின் முயற்சிகளுக்கு பக்கபலமாக அமைவார். பணபுழக்கம் நன்றாக இருக்கும். குடும்ப கவலைகள் மறைந்து, குடும்ப ஒற்றுமையும், எதிர்கால நற்பலனும் பெறும் வகையில் அனைத்து விடயங்களும் அமையும். கணிணித்துறையிலும், பாதுகாப்பு பணியிலும் இருப்பவர்களுக்கு தனது பணியினை சிறப்பாக செய்து பாராட்டு பெறுவீர்கள்.
கலைத்துறையினர் கலை ஆர்வம் நன்றாக இருக்கும் இரவு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களின் அன்பை பெறுவீர்கள். கல்வியின் வளர்ச்சியை பெறுவீர்கள். தனக்கு எது தேவையோ அதனை பெற உங்களின் முயற்சிகளின் பலன் கிடைக்கும். திட்டமிட்ட சில காரியம் தாமதபட்டாலும் நடக்கும். பணபுழக்கத்த்திற்கு இருந்த தடைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிலும் மன வலிமையுடனும் தெளிவுடனும் செயல்பட்டு வளம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி, சனி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
10-09-2025 புதன் இரவு 07.42 முதல் 12-09-2025 வெள்ளி இரவு 10.04 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை 04.30 - 06.00 மணிக்குள் ராகு காலத்தில் நவகிரக வழிபாடு செய்து ஒன்பது தீபம் ஏற்றி, புளி சாதம் நைவேத்தியம் வைத்து, பக்தர்களுக்கு தானம் செய்து வர, சகல காரியமும் வெற்றியை தரும்.