காவல் தெய்வமாய் பாதாள பேச்சியம்மன்!

காவல் தெய்வமாய் பாதாள பேச்சியம்மன்!

அமைவிடம்:

விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரி லிருந்து செண்பகத்தோப்பு செல்லும் வழியில் சுமார் மூன்று கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இக்கோயில். பாதாள பேச்சியம்மன் பெருமையை பின்வருமாறு இருவர் பேசிக் கொள்ளும் உரையாடலின் மூலம் அறியலாம்.
 
“நம்ம ஐயரு வீட்டுல ஒரு வழக்கு, கோர்ட், கேஸ்ஸுன்னு வழக்கு இழுத்துக்கிட்டே இருந்தது. ஐயரு வீட்டம்மா இன்னிக்கு நம்ம வீட்டுக்கு வந்து பாதாள பேச்சியம்மன் கோயில்லேயிருந்து மை வாங்கி வெச்சிருந்ததை வந்து இட்டுக்கிட்டுப் போனாங்க. கேஸு இவங்களுக்குச் சாதகமாயி, சொத்தெல்லாம் கெடச்சுடுச்சே. இந்த வெள்ளிக் கிழமை போயி மைக்குட்டி மருந்து வாங்கிட்டு வருவோம். உன் நாத்தனா கல்யாணம் சீக்கிரம் முடிஞ்சுடும். கல்யாணம் பேசப் போற எல்லா ரையும் மை இட்டுக்கச் சொல்லு” என்று பேசிய படியே முற்றத்தில் மிளகாயைக் காய வைத்தாள் செல்லி.
 
“ஜயருக கூடவா பாதாளப் பேச்சியைக் கும்பி டறாக? என்று தேனாட்சி இழுத்தாள்.
 
“நாம் பேச்சியாத்தான்னு கும்பிடற தெய் வத்தை அவுஹ பார்வதியம்மன்னு வழிபடறாக. வேறுபாடு எதுவும் இல்லாம பிராமணாளுங்க உட்
 
பட பத்தொம்பது சாதிக்காரங்களுக்கு அவ குல தெய்வமா இருந்து காப்பாத்தறா. சிவராத்திரியன் னிக்கு சாதிக்கு ஒருத்தரா பத்தொம்பது மருளா டிங்க கோயில் வாசல்லே சலங்கை கட்டி ஆடி அருள்வாக்குச் சொல்றதைப் பார்க்க வர்ற கூட்டத் திலே எள்ளுப் போட்டா கீழ விளுகாது.”
 
“பாதாள பேச்சி தான் பார்வதியம்மன்னு எப்படிச் சொல்றே?” என்று புண்ணாக்கை ஊற வைத்தபடி கேட்டாள் தேனாட்சி.
 
“அடியே! ஆண்டாளம்மா பொறந்த ஸ்ரீவில்லிப் புத்தூரைச் சுத்தின எடமெல்லாம் ஒரு காலத்துல காடாயிருந்திச்சி. அங்காள வேட்டையாட இருளப் பன், மாயாண்டி, வீரபத்திரன்னு மூணுபேரு அடிக் கடி வருவாங்களாம். அப்பாவி சனங்களைப் பல விதத்திலேயும் இது பாதிச்சிருச்சி. ஊர் மக்களெல் லாம் ஒண்ணு கூடி ஆத்தாகிட்டச் சொல்ல, அடுத்த மொற அவுக வந்தப்போ, பார்வதியம்மா நிறை மாசச் சூலியா ஊர் எல்லையிலே படுத்துக்கிடந்தா.
 
“கர்ப்பிணிப் பெண்ணைத் தாண்ட வேணா மின்னு கால்பக்கம் குதிரைகளைத் தட்டி விட் டாங்க அம்மனோட கால் நீளமாகிக் கிட்டே போச்சு. அவங்க அம்மா கால்லே விழுந்து மன்னிப்புக் கேட்டாக. ஆத்தா சிலையா மலை ஏறிச்சு, வேட்டையாட வந்தவுக அதுல ஜோதியாக் கலந்தார்களாம். சில சாதிக்கு ஆத்தா பார்வதி அம்மன், நமக்குப் பாதாளப் பேச்சி” என்றாள் செல்லி. “எங்க மாமியா வேற விதமாச் சொன்னா” என்றாள் தேனாட்சி.
 
“எப்படியாம்?”
 
“இப்பப் பேச்சியம்மா இருக்கிற எடத்திலே ஒரு கெணறு இருந்திச்சாம். நெற மாசக் கர்ப் பிணி ஒருத்தி தண்ணி எடுக்க வந்தப்போ, ஏதோ காத்து-கருப்பு அடிச்சுக் கிணத்துக்குள்ளே விழுந்தா தூரத்திலே இருந்து பாத்த மாயாண்டி, இருளப் பன், வீரபத்திரன் மூணு பேரும் அவளைக் காப் பாத்தினாங்க.
 
“நீங்க மூணுபேரும் என்னைப் போல உள்ளங்களைக் காப்பாத்த இங்கியே தங்கனும்னு அவ காலைப் பிடிச்சுக் கெஞ்சியும் கேக்காத அவுகளைத் தடுக்க, ஊர் எல்லையிலேயே அவமல்லாக்கப் படுத்துட்டாளாம். அவளைத் தாண்ட முடியாம மூணு பேரும் செலையாயிட்டாங்களாம். காத்து, கருப்பு அண்டாம அந்த ஊரைக் காப்பாத்தற அந்தப் பொண்ணைத்தான் பாதாளப் பேச்சின்னு நாம கும்பிடறோம்னு என் மாமியார்க்காரி சொல்லது” என்று அம்மனின் வித்தியாசமான வரலாற் றைக் கூறினாள் தேனாட்சி.
 
“இருக்கட்டுமே! எப்படியிருந்தா என்ன? ஊருக்கு நல்லது நடக்கக் காரணம் எதுவா இருந்தாலும் தப்பில்ல! ஆனா அம்மாவை வெட்ட வெளியிலேயே விட்டு வெச்சுருக்காங்களே! ஒரு கூரையாச்சும் போடக்கூடாதா?”
 
“எத்தனையோ தடவை உத்தரவு கேட்டும் ஆத்தாகிட்டயிருந்து சம்மதம் கெடக்கிவியாம்! கோயிலைச் சுத்தி சுவர் எழு்பியிருக்காக. அதுல பதினெட்டு விளக்கு மாடங்க இருக்கு ஒவ்வொண்ணும் ஒரு சாமி.”
 
“அதெல்லாம் சரி. மைக்குட்டி மருந்து எப்படித் தயாரிக்கிறாங்க?” ஆவலோடு கேட்டாள் தங்கை.
 
“எல்லாம் நாம கண்மை தயாரிக்கிற மாதிரிதான்! ஆத்தா சன்னதியிலே நெய் தீபம் போட்டு புது மண் சட்டியை கழுவிட்டு? அடிப்பாகத்திலே நெய் யைத் தடவி சுடர்மேலே பிடிச்சுக்கணும். பூசாரி சாங்கியமெல்லாம் படிப்பாங்க! மை தயாரானதும் ஆத்தா கண்ணிலே கொஞ்சம் இட்டுட்டு டப்பாவுல அடைச்சுக் கொடுப்பாங்க... ஆத்தாடீ... பேச்சு வாக்குல மேகம் கூடினதையே கவனிக்கலையே. தேனு! மிளகாயை அள்ளு தூறல் போடுதே! வெரசா அள்ளு.”
 
ஆத்தாவைப் பத்தி மனங்குளிரப் பேசினமில் லையா? பூமிகுளிர இறங்கிட்டா. எனக்கு நம் பிக்கை வந்திருச்சு. இனிமே என் நாத்தனா கல்யா ணம் தடைபடாது” என்றபடி உள்ளே விரைந்தாள் தேனாட்சி.
 
ஆர். பொன்னம்மாள்