சுக்கிர தோசப் பரிகாரத் தளமாய் ஸ்ரீரங்கம்!

சுக்கிர தோசப் பரிகாரத் தளமாய் ஸ்ரீரங்கம்!

சுக்கிர தோசம், பலஹீனம் ஆகியவற்றிற்குப் பரிகார ஸ்தலங்களில் முதன்மையானது ஸ்ரீ ரங்கம். வேத சாஸ்திரங்கள் மந்திரம், தவம் அனைத்திலும் ஈடு இணையற்று விளங்கியும், தேவகுரவான பிரகஸ்பதிக்கும் சமமான அந்தஸ்தும் மதிப்பும் ஒளியும் தனக்குக் கிடைக்கவில்லை என வேதனையால், சுக்கிரன் இமயத்தில் மானஸத்தடாகக் கரையில் நிஷ்டையில் அமர்ந்து இறைவனைத் தியானிக்க வானிலிருந்து அசரீரி வாக்கு எழுந்தது. பார்க்கவரே! அதர்மத்தில் ஈடுபட்ட அசுரர்களுக்கும், தீயவர்களுக்கும் தாங்கள் தங்கள் சக்திகளை அளித்து உதவியதால் தங்களது ஒளி குன்றியது. ஆதலால் மனம் திருந்தி பரம்பொருள், பூவுலகில் எழுந்தருளியுள்ள திவ்ய ஸ்தலம் சென்று, அவனை வழிபடுங்கள் என்றது அசரீரி. அந்தத் திருத்தலத்தை நான் எவ்விதம் கண்டு கொள்வது என்று அசரீரி. உடனே ஒவ்வொரு ஸ்தலமாகக் சுக்கிரன் தரிசித்து வரும் போது ஸ்ரீ ரங்கத்தை அடைந்து, காவிரியில் நீராடி எழுந்ததுமே மூவுலங்களையம் ஈர்க்கும் ஒளி மயமான பிரகாசத்தை அடைந்தார். தான் தேடி வந்த திருத்தலம் இந்த தவிய் தேசமே என மகிழுவுடன் உணர்ந்து அரங்களையும், அரங்கநாச்சியாரையும் தரிசித்து வான மண்டலம் சேர்ந்து வியாழனுக்கு ஈடான ஒளியுடன் விளங்கி வரலானார். அரங்கனின் உட்பிரகாரமான திருவண்ணாழிபிரதாட்சிணத்தில் நவகிரகங்களும் உள்ளன. கீழே சுக்கிர நிவர்த்திக்குரிய சாளக்கிராமங்கள் உள்ளதால், சுக்ர தோசப் பாதிப்பு சயன சுகப் பாதிப்பு உள்ளவர்கள். இந்த கோயிலின் கிழக்கு கோபுரம் வழி வந்து, ஸ்ரீ ரங்கநாதழைர வழிபட, சக்கிர தோசம் நீங்கும்.
 
வழித்தடம் - திருச்சி மத்தியபேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நரகப் பேருந்து வசதிகள் அதிகம் உண்டு.
 
- K. துரைராஜ்