குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - விருச்சிகம்

குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - விருச்சிகம்

மனவலிமையுடன் எதையும் முழு முயற்சியுடன் செய்யும் விருச்சிக ராசி வாசகர்களே!
 
இதுவரை உங்களின் ராசியை பார்த்து வந்த குரு இனிவரும் 11-05-2025 முதல் தனஸ்தானத்தையும், முயற்சி ஸ்தானத்தையும் விரையஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். அட்டம குருவாக இருப்பது சில நேரம் பணதட்டுப்பாடுகளை தருவதும் ஆவணங்கள் மூலம் சிக்கலும் வரலாம் என்பதால் அடுத்தவருக்கு பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது.
 
தனஸ்தானத்தை குரு பார்ப்பது தொழிலில் முழு கவனம் செலுத்த வேண்டிவரும். அடுத்தவரை நம்பி செயல்படும் எந்த காரியமும் சிறப்பாகவோ, நல்லதாகவோ அமையாது என்பதால் அடிக்கடி அதில் கவனம் செலுத்துவது நல்லது. வரக்கூடிய வருமான வாய்ப்புகளை சேமிக்க முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். ஏதாவது செலவீனம் வந்து மறையும். புதிய தொழில் வாய்ப்புகள் வந்தாலும் அதனை தவிர்த்து நல்ல முயற்சிகளை ஊக்கபடுத்தி செயல்படுவதன் மூலம் தன்மை பெறுவீர்கள்.
 
உங்களின் அர்த்தாஸ்டம சனியுடன் ராகு இணைவதால் பல உடல்நல குறைபாடுகளும் தூக்கமின்மை, பல எண்ண அலைகளால் வரும் துன்பங்களுக்கு குரு பார்வையால் அதிலிருந்து விடுதலை பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற பெறும் கஷ்டத்தை அனுபவித்து தீர்த்து விடுவீர்கள். தொழிலாளர்களின் கஷ்டங்களை தன் கஷ்டம் போல் நினைத்து அவர்களுக்கு உங்களால் உண்டான உதவிகளை செய்வீர்கள்.
 
விரையஸ்தானத்தை குரு பார்ப்பதால் ஒரு புறம் செலவுகள் வந்தாலும் அதனை சரி செய்ய ஏதாவது வழியில் பண புழக்கம் வந்து உங்களுக்கு எதிலும் சிரமமின்றி உறுதுணை கிடைக்க பெறுவீர்கள். கடனாக இருந்தாலும் கடமையாக இருந்தாலும். 
அதை சமாளிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். காலத்தையும், நேரத்தையும் வீண் செய்யாமல் உடனே செய்துவிட வேண்டுமென்று செயல்பட்டு வெற்றியை பெறுவீர்கள்.
 
பரிகாரங்கள்:
 
வியாழக்கிழமைகளில் மஞ்சள் வண்ண பட்டு வஸ்திரத்தை பைரவருக்கு கொடுத்து உளுந்து வடை மாலை போட்டு தேங்காய் முடியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள சகல காரியமும் நற்பலன் தரும்.