கிரகதோஷம் நீங்கும் கேதார விரதம்!

புரட்டாசி மாதத்தில் கேதார விரதம் என்ற ஒரு தொடர் விரதம் உண்டு. இது தீபாவளியை ஒட்டி முடியும் கேதார கவுரி விதத்திலிருந்து மாறுபட்ட விரதமாகும். கேதாரநாதர் ஜோதிர் லிங்கங்களிலி ஒருவர். இமயமலையில் உள்ள சிகரங்களில் ஒன்று கேதரம். இங்குள்ள கேதாரநாததரை ஆறு மாதம் தேவர்களும், ஆறு மாதம் மனிதர்களும் பூஜிக்கிறார்கள். கோடைகாலங்களில் தான் அந்தக் கோயிலுக்குச் சென்று தரிசிக்க வேண்டும். முப்பத்து முக்கோடித் தேவர்களாலும் வழிபடப்பட்டவர் கேதாரநாதர். நவக்கிரகங்கள் அனைத்தும் வழிபட்ட சிவபெருமான் இவர். நவக்கிரகங்கள் தன்னை வழிபட்ட போது, நீங்கள் என்னை இங்கு வழிபட வேண்டாம். தெற்கே காவிரிக்கரைக்குச் சென்று அங்கே என்னை வழிபடுக என்று அருள் செய்தார். அதன்படி நவக்கிரகங்கள் சூரியனார் கோயிலில் தவமிருந்து சிவனை வழிபட்டன என்பது ஒரு புராண தகவல்.
கேதாரநாதரை வழிபட்டால் எல்லா வகையான கிரக தோஷங்களும் நீங்கும், கேதார விரத நாட்களில் விரதமிருந்து சிவபூஜை செய்வது கிரக தோஷ நிவர்த்திக்கு வழி செய்யும். அந்நாட்களில் கோயில்களுக்குச் சென்று சிவனை வழிபடுவது சிறப்புகள் பலவற்றைப் பெற்றுத் தரும்.