புகையிரதம் - கனவுகளும் பலன்களும்

புகையிரதம் - கனவுகளும் பலன்களும்

புகையிரத என்ஜினை மட்டும் கனவில் கண்டால் நீங்கள் நெடுங்காலமாகப் பிரிந்திருந்த ஒரு பழைய காதலியை அல்லது காதலரை மீண்டும் சந்திக்கப் போகிறீர்கள். நீங்கள் அந்தப் பழைய உறவுகளை இப்போது நினைவுப்படுத்திக் கொள்வதற்கோ, செயல் ஆற்றுவதற்கோ முயலாதீர்கள். 

அதனால் உங்களுக்குத் துன்பவங்கள் தாம் ஏற்படும். ஆகையால், வெறும் நண்பர்களாகவே இருந்து விடுங்கள்.
 
புகையிரத தண்டவாளத்தைக் கனவில் கண்டால் உங்களுக்கு எல்லா வசதிகளும் இருந்தும். மனத்தில் உற்சாகம் இல்லை. காரணம், நீங்கள் எப்போது பார்த்தாலும் உங்கள் அன்றாட அலுவல்களிலேயே மூழ்கிக்கிடக்றீர்கள். இனி அந்த நிலைமை மாறப்போகிறது. சில உற்சாகமான பொழுது போக்குகளில் நீங்கள் ஈடுபடப் போகிறீர்கள். அந்தப் பொழுது போக்குகள் மிகவும் பயன் உடையவையாகவும் அமையப் போகின்றன.
 
புகையிரத வண்டித் தொடரைக் கனவில் கண்டால் உங்கள் குடும்பத்தில் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். 
 
ஆனால், அதற்கு உரிய தருணம் இதுஅல்ல. இன்னும் சிறிது காலம் வரையில், இப்போது போலவே எல்லாம் நடந்து கொண்டு இருக்கட்டும். பிறகு எல்லாம் தாமாகவே சீர்பட்டு விடும். 
 
தமிழ்வாணன்