பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2026 - விருச்சிகம்
எப்பொழுதும் சுறுசுறுப்புடனும், துடிப்புடனும் இருக்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் மூன்றில் உச்சம் பெற்று பாக்கிய, தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது உங்களின் தொழிலின் மறைமுகமான எதிரிகள் விலகுவர். துணிச்சலுடன் செயல்படும் மனவலிமையை பெற்று தரும். எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலனையும் தருவார். உங்களின் தொழில் ஸ்தானாதிபதியான சூரியனுடன் ராசிநாதன் இணைவு பெறுவதால் எதிலும் பின்வாங்கும் சூழ்நிலை ஏற்படுத்தமாட்டீர்கள். இரக்க குணமும், முன் கோபமும் சில நேரம் ஏதாவது பிரச்சனையில் ஆட்படுத்திவிடும் என்பதால்.. அதனை கட்டுபாட்டுக்குள் வைப்பது மிகவும் அவசியம்.
உங்களின் ராசிக்கு எட்டாமிடத்தில் குரு அமர்ந்து விரையஸ்தானத்தை பார்ப்பதால் தேவையற்ற செலவுகள் குறையும். வரவு வந்தாலும் உடனே செலவு செய்யும் படியான சூழ்நிலை அமையும். உடனுக்குடன் வேறு வழியில் சேமித்து வைத்து கொள்வது நல்லது. சுகஸ்தானத்தில் சனி ஆட்சி பெற்று இருப்பதால் சில உடல் உபாதைகளை பெற்று வந்தீர்கள். இனி அந்த நிலை குரு பார்வையால் மறையும். கொடுத்த இடத்தில் இருந்து பணம் படிப்படியாக வந்து சேரும். மனதில் பல குழப்பத்திற்கு ஆளாகி இருந்த நிலை மறைந்து, இனி தெளிவான சிந்தனைக்கு உட்படுவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் பாதி நேரம் அதில் அர்பணிக்கபடும் இனி சொந்த தொழில் செய்யலாம் என்ற எண்ணம் உண்டாகும். சில மாதம் கழித்து அதற்கான வழி உங்களுக்கு கிடைக்கும். ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய ஆர்வம் உண்டாகும்.
வலிமையான கிரகங்களான சூரியனும், உச்சம் பெற்ற செல்வாயும் மூன்றாமிடத்தி இணைவு பெறுவதால் உங்களின் முயற்சி நல்ல பலனை பெற்று தரும். உங்களின் யோகாதிபதி சந்திரன் ஆட்சி பெற்று மூன்றாமிடத்தை பார்ப்பதால் எல்லா காரியங்களும் நீங்கள் பலனை பெற்று தரும். உங்களின் முயற்சியால் வெளியிடங்களுக்கு சென்று வருவாய்க்கு உரிய பலன்களை பெறுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் கேது அமர்ந்து இருப்பது வெளிநாடுகளில் தொழில் வாய்ப்பையும், அதற்கான செயல்களையும் இனி தொடர்வீர்கள். தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை காண அதற்கான பலத்தை பெறுவீர்கள். தொழிலாளர்களின் பிரதிநிதியாக செயல்படுவீர்கள். அனைத்து வித காரியங்களையும் தானே செய்வதும், விட்டு கொடுக்காமல் மாற்று வழியை பின்பற்றி செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் புதிய அனுபவத்தை பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகம் உங்களுக்கு கடுமையான பல சோதனைகளை தரும் என்பதால் தவிர்ப்பது நல்லது. கொடுத்த இடத்தில் பலமுறை அலைந்து பின்னர் பெறும் சூழ்நிலை அமையும். பிடிவாத குணத்தை மறந்து, அன்பு செலுத்தி அனைவரையும் தன் வசமாக்கி கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஓரஞ்சு, வெண்மை, மெரூன் கலர்.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வெள்ளி, திங்கள்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
25-02-2026 புதன் இரவு 01.23 முதல் 28-02-2026 சனி அதிகாலை 04.09 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்து ராம நாமம் சொல்லி நெய் தீபமிட்டு செந்தூரம் பூசி வேண்டிக் கொள்வது நல்ல பலனை பெற்று தரும். செய்யும் தொழிலில் விருத்தியை உண்டாக்கும்.
















