பிரபஞ்ச சக்தியால் நோய்களை குணப்படுத்தும் “ரெய்கி”

பிரபஞ்ச சக்தியால் நோய்களை குணப்படுத்தும் “ரெய்கி”

ரெய்கியைப் பொறுத்தவரை அது அற்புதமானது. ஆச்சரியமானது என்று சொல்லலாம். பிரபஞ்ச சக்திகளைப் பயன்படுத்தி, நோய்களைக் குணமாக்கும் கலை என்பதால் இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்றும் கேட்கலாம்.
 

உலகம் இயங்கக் காரணமாக இருப்பதே இந்த சக்திதான். சக்திதான் உலகை இயக்கிக் கொண்டிருக்கிறது. உலகில் வாழும் எல்லா உயிரினங்களும், இந்த சக்தியால்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உயிரினங்கள் வாழ்வதற்கும். தாவரங்கள் உயிர்ப்புடன் இருப்பதற்கும் காரணம், சக்திதான்.
 
உயிரினங்கள், தாவரங்கள் மட்டுமன்றி, நதிகள் ஓடுவது, காற்று வீசுவது, நெருப்பு, எரிவது, அலைகள் எழுவது போன்ற இயற்கையின் எல்லா இயக்கங்களுக்கும் காரணமே சக்திதான். பஞ்சபூதங்களும், அவற்றுக்குரிய விதிப்படி செயல்படக் காரணம் சக்திதான். இந்த சக்தி, பிரபஞ்சம் எங்கும் வியாபித்திருக்கிறது. எல்லா இடத்திலும் இருக்கிறது.
 
இந்த சக்தியை, “பிரபஞ்ச சக்தி” என்று குறிப்பிடலாம்.
 
“உயிர்ச் சக்தி” என்று அழைக்கலாம்.
 
“ஜீவ சக்தி” என்றும் சொல்லலாம்.
 
ஏன், “பிராண சக்தி” என்று கூட சொல்லலாம்.
 
ஆங்கிலத்திலும் இதைப் பலவகையாகச் சொல்கிறார்கள். Cosmic Energy, Bio Cosmic Energy, Universal Power என்கிறார்கள்.
 
எகிப்தியர்கள் “கா” என்றும், கிரேக்கர்கள் “நியூமா” என்றும் சொல்கிறார்கள். ஜப்பானில், “கீ” என்கிறார்கள். இந்த கீக்கு முன்னால், “ரெ” (Rei) சேர்ந்து “ரெய்கி” (Reiki) என்று ஆகிவிட்டது. இதில், “ரெ” என்பதற்கு, தூய, புனிதமான தெய்வீகமான என்று பல அர்த்தங்கள் உண்டு.
 
Holly Spirit என்று சொல்கிறோமே (தூய ஆவி அல்லது பரிசுத்த ஆவி), இந்தத் தூய அல்லது தெய்வீக அல்லது பரிசுத்த பிரபஞ்ச சக்தியைப் பயன்படுத்தி, நோய்களைக் குணமாக்கும் முறைக்குத்தான் “ரெய்கி” என்று பெயர்.
 
ரெய்கி சிகிச்சை தருபவர் எங்கும் நிறைந்திருக்கும், பிரபஞ்ச சக்தியைத் தனக்குள் கிரகித்துத் தனதுகைகளின் மூலம் அதை மற்றவர்களுடைய உடலுக்குள் செலுத்துகிறார். சிகிச்சை பெற்றுக் கொள்கிறவர். வெறுமனே கண்களை மூடி, இந்த ரெய்கி சிகிச்சையை நான் பெற்றுக் கொண்டிருக்கிறேன் என்ற நினைப்புடன் உட்கார்ந்திருந்தாலேயே எப்போதும். அந்த சக்தி அவரது உடலுக்குள் ஊடுருவி எந்தெந்த இடங்களுக்குச் செல்ல வேண்டுமோ அங்கெல்லாம் சென்று, என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து, உடலின் உள்ள நோயைக் குணப்படுத்திஜ விடுகிறது. இது அத்தனையும், தன்னிச்சையாகவே நடைபெறுகிறது.
 
உடலுக்குள் செல்லும் மூச்சுக் காற்று, உடலுக்குள்ளே ஓடும் ரத்தம் போன்றவை எப்படி தன்னிச்சையாகச் செயல்படுகின்றனவோ, அது போல்தான், ரெய்கி சக்தியும் தன்னுடைய தனிப்பட்ட இயல்புடன் செயல்பட்டு நோயைக் குணப்படுத்துகிறது. மேலும், உடலுக்கு மட்டுமல்லாமல் மனத்துக்கும் அமைதியையும் சாந்தத்தையும் தருகிறது, ரெய்கி.
 
புராண காலம் தொட்டு, பிரபஞ்ச சக்தியைக் கொண்டு தம்மைத் தாமே குணப்படுத்திக் கொள்வதுடன், பிறரையும் குணப்படுத்தும் கலையை நம் முன்னோர்கள் செய்து வந்திருக்கிறார்கள். ரிஷிகளும் முனிவர்களும், பல ஆன்மிகப் பெயரியவர்களும், கையைத் தூக்கி ஆசிர்வாதம் செய்ததிலேயே பலருக்குப் பல்வேறு விதமான நோய்கள் குணமாகியிருக்கின்றன.
 
பிரபஞ்ச சக்தியை குறிப்பிட்ட ஒரு பழிமுறை மூலம் கிரகித்து, உள்ளங்கைகளின் மூலம் பிறருக்குச் செலுத்தும் ஒரு கலையை, ஜப்பானைச் சேர்ந்த மிக்காவோஉசூயி என்பவர் 19-ம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார். அதற்குப் பெயர் தான் “ரெய்கி”.
 
பல்வேறு நோய்களை ரெய்கி குணப்படுத்துகிறது. நரம்பு சம்பந்தமான நோய்களை, மற்ற மருத்துவ முறைகளை விடவும் விரைவாகக் குணப்படுத்துகிறது. நீண்ட காலமாக, தூக்கமின்மையால் வாடும் நோயாளிகள், ரெய்கி மூலம் விரைவில் குணம் காண்கிறார்கள். பிரமை, மனக் குழப்பம், தவிப்பு, படபடப்பு, பயம் போன்ற மூளையும் மனமு்ம் கலந்த பிரச்னைகள், மற்ற மருத்துவ முறைகளைக் காட்டிலும் ரெய்கி மூலம் மிக வேகமாகவே தீர்த்து வைக்கப்படுகின்றன.
 
சாதாரண தலைவலி, சாதாரண உடம்பு வலி, சில வகையான வயிற்று வலிகள் போன்றவற்றுக்கு, ஒரே ஒரு முறை செய்யும் சிகிச்சையிலேயே கூட நிவாரணம் கிடைத்துவி்டக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.
 
நம்முடைய உடம்பே பஞ்சபூதங்களால் ஆனதுதான். மனிதன் உயிர்வாழவும், உடல் வளர்க்கவும், பஞ்சபூதங்களின் சக்தி அவசியம். எந்த ஒரு பஞ்சபூதத்தின் சக்தி குறைந்தாலும், உடல் நோய்வாய்ப்பட்டுவிடும்.
 
ஒரு சாதாரண சிறிய அசைவுக்குக்கூட, ஓர் உந்துதலும் கொஞ்சம் சக்தியும் தேவைப்படுகிறது. அந்த உந்துதலும் சக்தியும் இல்லையென்றால், சின்னஞ்சிறு அசைவுகூட சாத்தியமில்லை. இந்த உந்துதலும், விசைக்கான சக்தியும் எங்கும் வியாபித்திருக்கும் பிரபஞ்ச சக்தியில் இருக்கிறது. அப்படிப்பட்ட பிரபஞ்ச சக்தியைப் பயன்படுத்தி பல்வேறு ஆற்றல்களை நிகழ்த்தலாம். நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகளை எல்லாம் செய்யலாம்.
 
மனித குலத்துக்கு நல்லமுறையில் பயன்படுவது போல், உடலில் வரும் நோய்களைக் குணப்படுத்த வழிவகை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, அதற்கான ஒரு முடிவைக் கண்டுபிடித்து, அதற்கேற்ப பிரபஞ்ச சக்தியைப் பெற்று, உடலின் சக்கரங்களுக்குச் செலுத்துவது என்று ரெய்கி முன்னோர்கள் வடிவமைத்திருக்கிறார்கள்.
 
ரெய்கியின் மூலம், நோயாளிகளின் உடல் மீது கை வைத்து நோயைத் தீர்க்க முடியும். வெகு தூரத்தில் இருக்கும் நோயாளிக்கு, இங்கிருந்தபடியேயும் ரெய்கி சக்தியை அனுப்ப முடியும். அப்படி அனுப்பப்படும். சக்தி அக்கணமே குறிப்பிட்ட நபரைச் சென்றடைந்து தேவையான பலனை அவருக்கு தரும்.
 
பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் நோயாளியை இங்கிருந்தபடியே தொடர்பு கொண்டு குணமாக்கலாம். இந்த முறைக்கு, Distant healing (தொலைதூர சிகிச்சை) என்று பெயர்.
 
எந்த ஒரு நல்ல விஷயத்துக்கும் ரெய்கியைப் பிரயோகிக்கலாம். ஏதாவது ஆபத்தான நேரங்களில், அசௌகரியமான சூழ்நிலைகளில் ரெய்கியைத் துணைக்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு - 0755674227.