ஆராயும் பன்றி
நேரம் மாலை 9:00 முதல் 11:00 வரை, உரிய திசை மேற்குஃவடமேற்கு, உரிய காலங்கள் இலையுதிர் காலம்ஃநவம்பர் மாதம், நிலையான மூலகம் நீர், யின்ஃயாங் யின்
கடவுளர்கள் வைத்த ஆற்றைக் கடக்கும் போட்டியில் எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய் முதலியன முதல் பதினொரு இடங்களில் வந்தன. நாய் கரையைச் சேர்ந்ததும், போட்டியை முடிக்க எண்ணிய போது பன்றி மூச்சிரைக்க வருவதைக் கடவுளர்கள் பார்ததனர். பன்றி வழியில் என்ன செய்தது என்று கேட்ட போது, போட்டியின் போது பசியின் காரணமாக உணவு உண்டதாலும், உண்ட களைப்பு நீங்க சிறிது தூங்கி எழுந்த வந்த காரணத்தாலும் தாமதம் ஏற்பட்டதாகக் கூறியதாம். பின்னர் கடவுளர்கள் பன்றியை வாழ்த்தி வருடச் சக்கரத்தின் பன்னிரண்டாவதுச் சின்னமாகத் தெரிவு செய்து அறிவித்தார்கள்.
இந்தக் கதை பன்றி ஏன் பன்னிரண்டாவதாக வந்தது என்பதைக் குறித்துக் கூறப்படும் கதை.
1911, 1923, 1935, 1947, 1959, 1971, 1983, 1995, 2007, 2019, 2031, 2043, 2055 ஆகிய வருடங்களில் பிறந்தவர்கள் அனைவரும் பன்றி வருடத்தைச் சேர்ந்தவர்கள். கீழ் கண்ட தேதிகளுக்குள் பிறந்திருந்தால் அவர்கள் அனைவரும் பன்றி வருடத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஜனவரி 30, 1911 - பிப்ரவரி 17, 1912
பிப்ரவரி 16, 1923 - பிப்ரவரி 04, 1924
பிப்ரவரி 04, 1935 - ஜனவரி 23, 1936
ஜனவரி 22, 1947 - பிப்ரவரி 09, 1948
பிப்ரவரி 08, 1959 - ஜனவரி 27, 1960
ஜனவரி 27, 1971 - பிப்ரவரி 14, 1972
பிப்ரவரி 13, 1983 - பிப்ரவரி 01, 1984
ஜனவரி 31, 1995 - பிப்ரவரி 18, 1996
பிப்ரவரி 18, 2007 - பிப்ரவரி 06, 2008
இனி இந்தத் தொடரில் பன்றி வருடத்தைச் சேர்ந்தவர்களின் குணாதிசயங்களைப் பற்றி பார்ப்போம்.
செம்மைவாதிகள். புத்திசாலிகள். வீரர்கள். பொறுமைசாலிகள். நல்ல ஆசானாக இருப்பார்கள். அதிர்ஷ்டசாலிகள். கோபக்காரர்கள். அறிவைத் தேடி அலைவார்கள். படிப்பதை நேசிப்பார்கள். அறிவுத் தாகம் மிக்கவர்கள். அதிகமாக பேச மாட்டார்கள். சந்தர்பம் வாய்க்கும் போது, பிடித்த விசயங்களைப் பற்றி, ஒத்த விருப்பம் உள்ளவர்களுடன் மணிக்கணக்கில் வாதிடவும் பேசவும் தயங்க மாட்டார்கள்.
அறிவார்ந்த ஆர்வம், நேர்மை, பொறுமை ஆகிய குணங்களைக் கொண்டவர்கள் பன்றிவாசிகள். விசுவாசத்தில் நம்பிக்கை வைக்கலாம். வாழ்நாள் நண்பர்களாகக் கொள்ளத் தக்கவர்கள். பழங்காலத்திய அரசர்கள் போன்று பன்றிவாசிகள் வீரத்திற்கும், உள்ளத் தூய்மைக்கும் பெயர் போனவர்கள். பிறருக்கு உதவுவதற்காக தங்களையே பலி கொடுக்கவும் தயாராக இருப்பார்கள்.
அவர்கள் திகைப்பூட்டுபவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களை நம்புவது மிகவும் எளிது. அமைதியான உணர்வுகளை வெளிக்காட்டுவர். நம்பகமான பழக்க வழக்கங்களை கொண்டவர்கள். திடமான மார்க்கத்தை மேற்கொள்ள வரமளிக்கப்பட்டவர்கள். மிகுந்த பொறுமையுடன் காரியத்தை முடிக்கும் வரை வேலையை நிதானமாகச் செய்ய அவர்களால் முடியும்.
மிகவும் அமைதியானவர்கள். அமைதியை என்றும் நாடுபவர்கள். அதைப் பெறத் தேவையானவற்றை எப்போதும் செய்த கொண்டே இருப்பார்கள். அவர்களது அந்தக் குணத்தினால் மற்றவர்கள் அவர்களைப் பயன்படுத்திக் கொண்டு, எளிதாக சிக்கல்களில் மாட்டி விட முயல்வார்கள். பன்றிவாசிகள் தங்களைப் போன்றே எல்லோரையும் விசுவாசிகளாகவும், பாதுகாவலர்களாகவும் எண்ணுவார்கள் என்பதால் சிக்கல்களில் சிக்கிக் கொள்வது சாதாரணமாக நடக்கும். அவர்களின் மிகுந்த அமைதியும், கபடமற்ற தன்மை மட்டுமே, அவர்களது குறையாகக் கூடக் கொள்ளலாம். நேர்மையும் நம்பகமும் குணங்களாகக் கொண்டதால், ஏமாற்ற நினைப்பவர்களின் சூதுகளைப் புரிந்து கொள்வது அவர்களுக்குக் கடினமான காரியமாக இருக்கும்.
நன்மையே நடக்கும் என்று திடமாக நம்புபவர்கள். சண்டைகளை விரும்பாதவர்கள். அவர்களது கோபம் வேகமாகத் தணிந்து விடும். அறிவுரைகளை ஏற்க விரும்ப மாட்டார்கள். சமயம் கிடைக்கும் போதெல்லாம், தங்களது நற்குணற்களைப் பிறர் அறியுமாறு நடந்து கொள்வார்கள். பிறருக்கு உதவுவதையே தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டவர்கள். எவ்வளவு கஷ்டமான சூழ்நிலை ஏற்பட்ட போதும், எடுத்தக் காரியத்தை, முயற்சியை விட்டுச் செல்ல விரும்ப மாட்டார்கள். எல்லாம் நன்மைக்கே என்று முடிவு செய்து கொண்டு மேன்மேலும் முயற்சியைத் தொடரத் துணிவார்கள்.
பன்றிவாசிகள் பழகுதற்கு ஏற்ற, நம்பகமான, தீவிரக் கொள்கை உடையவர்கள். அமைதியை விரும்புபவர்கள். உட்பகை கொள்ள மாட்டார்கள். விவாதங்களை வெறுப்பவர்கள். முனைகளைச் சேர்க்க முயல்வார்கள். வாழ்க்கையில் ஆழமான நீண்ட நட்பினை ஏற்படுத்திக் கொள்வார்கள். பன்றிவாசிகள் எல்லா விதமான சமூகக் கூட்டங்களுக்குச் சென்று மகிழ்ச்சியுடன் அனுபவிப்பார்கள். கூட்டங்களை எதிர் நோக்கிக் காத்திருப்பார்கள். பன்றிவாசிகள் எப்போதும் தங்கள் செயல்களின் மேல் கவனம் செலுத்துவது நலம். அனுபவிக்கும் போக்கின் காரணமாக, மற்ற வேலைகளைச் செய்யாமல் விட அதிக வாய்ப்புகள் ஏற்படும்.
கழகத்தில் உறுப்பினர்களாக இருப்பர். நிதி சேர்ப்பதில் தேர்ந்தவர்கள். அவர்கள் சமூகப் பணிச் செய்வதிலும் தருமம் செய்வதிலும் தனி வழியைக் கடைபிடிப்பார்கள். பிரச்சினைகளைக் காது கொடுத்துக் கேட்பர். பிரச்சினைகளில் புகுந்து தீர்வு காண வேண்டுமென்றால் எந்த அச்சமும் கவலையுமின்றி நுழைவார்கள். பெரிய மனம் படைத்தவர்கள்.
பன்றிவாசிகள் ஒரு முடிவுக்கு வந்து விட்டால், அதன் பிறகு அவர்களை நிறுத்த முடியாது. அந்த முடிவுக்கு வரும் முன்னர் நல்லது கெட்டது அனைத்தையுமே ஆராய்வது அவர்களது இரத்தத்தில் ஊறிய பண்பு. பிரச்சினைகளை தவிர்க்க விரும்புவார்கள். சில சமயங்களில் வெகுவாக ஆய்ந்து பார்த்து சந்தர்பங்களைத் தவற விடும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் அதற்குக் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் எப்போதும் அற்புதங்களை நம்புவார்கள். அவர்களது வாழ்க்கையில் அற்புதங்கள் நடப்பதும் உண்டு. விதி அவர்களுக்கு நன்மையே விளைவிக்கும். கேட்காமலேயே அவர்களுக்கு மற்றவர்கள் தேவைப்படும் போது உதவி செய்ய முன் வருவார்கள்.
மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். எல்லோரையும் நம்புவார்கள். கேட்பதனைத்தையும் நம்புவார்கள். அவர்கள் சுயநலமற்றவர்கள். பிறருக்கு உதவி செய்து இன்புறுவர். எளிதில் ஏமாறக் கூடியவர்களாக இருந்தாலும், அவர்கள் உண்மையில் புத்திசாலிகள். தங்களைக் காத்துக் கொள்ள அறிந்தவர்கள். அவர்களை மன வருந்தச் செய்தால், அந்த வலியை காலத்திற்கும் மறக்க மாட்டார்கள். அன்பானவர்களிடம் இல்லை என்று சொல்ல வருந்துவார்கள்.
அவர்களுக்குத் தேவையானவற்றை அவர்களின் வாழ்க்கைப் பாதை அமைத்துக் கொடுத்து விடும். சீனர்கள் பன்றிவாசிகளை ஏராளமாக எல்லாமும் கிடைக்கும் ராசி உள்ளவர்களாகக் கருதுகிறார்கள். பண விசயங்களில் பன்றிவாசிகள் சேமித்து வைப்பதை விடவும் செலவு செய்வதில் மகிழ்ச்சி காண்பர். அவர்கள் பெயர் பெற்ற பிரபலமான பொருட்களை வாங்கிப் பயன்படுத்தவே எண்ணுவர். கஞ்சத்தனம் காட்டுவது மிகக் குறைவே.
நன்னடத்தையும், இரசனையும் உள்ளவர்கள். பிரச்சினைகளைச் சீக்கிரம் தாண்டக் கூடியவர்கள். பிறர் முழுவதுமாக தவறு செய்கிறார்கள் என்று தெரிந்த போதும், அவர்கள் கருத்துக்களையும் கவனித்துக் கேட்பார்கள். எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். எந்தச் சூழ்நிலையிலும், பின்னின்று பணியாற்றுவார்கள். அவரிடம் கேட்டுப் பார்க்க வேண்டும்' என்ற ஒருவர் சொன்னால், நண்பர் 'அவரை எளிதில் சம்மதிக்க வைத்து விடலாம்' என்று சொல்லும் வகையில் பிறர் அவர்களை ஏற்றுக் கொள்வர்.
தொழில்
எந்தத் துறையில் இருந்தாலும், நம்பகம் மிக்கத் துணையாக அவர்களைக் கொள்ளலாம். அவர்கள் சமூக நலப் பணியாளராவும், அரசியல்வாதியாகவும்., கேளிக்கை நிகழ்ச்சி நடத்துபவராகவும் பிரகாசிப்பார்கள்.
தங்களிடமிருக்கும் அபரிமிதமான சக்தியை எப்போதும் வேலையில் ஈடுபடுத்த முயன்ற வண்ணம் இருப்பார்கள். வழிகளைத் தேடிப் பார்த்த வண்ணம் இருப்பார்கள். அவர்கள் கடின உழைப்பாளிகள். எல்லாவற்றையும் இழக்க நேர்ந்தாலும், சோர்ந்து போகாமல், அதிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கும் சக்தி பெற்றவர்கள். நல்ல வருமானம் பெறும் வழியை அவர்கள் அறிந்திருப்பார்கள்.
வேலையில் உதவி செய்வதை விரும்புவர். அவர்களை பெரிதும் நம்பலாம். அவர்களது படைக்கும் ஆற்றலை வெளிக்காட்டும் சந்தர்பங்களை நன்முறையில் பயன்படுத்தி இன்புறுவர். வுpசயங்களை ஆயும் அறிவு அதிகம். மேலதிகாரிகள் அதைப் பெரிதும் பாராட்டும் நிலையில் இருப்பார்கள். பொறுப்புகளை ஏற்பதற்கு அஞ்ச மாட்டார்கள். அவர்களுக்கு பொழுதுபோக்காளர், உணவக நிபுணர், மருத்துவர், விலங்கு மருத்துவர், வீட்டை அலங்கரிப்பவர் போன்ற தொழில்கள் உகந்தவை. விருந்தோம்பல் அவர்கள் கூடப் பிறந்த பண்பு. அதனால் அதற்கேற்ற வேலைகளில் நல்ல எதிர்காலம் இருக்கும்.
உறவு
எப்போதும் பிறருக்கு உதவுவதையே குறிக்கோளாகக் கொண்டதால், எந்த வகையிலேனும் உதவ முயல்வார்கள். ஆனால் தங்களுக்காக பிறரிடம் உதவி கேட்பது அரிது. இது அவர்களைத் தளரச் செய்தாலும், அதைப் பற்றி சிறிதும் கவலைப்பட மாட்டார்கள். இந்த பாராட்டத்தக்க குணம், பல சமயங்களில் பிறரால் எளிதில் பயன்படுத்திக் கொள்ளப்படும். அதன் காரணமாக உறவினர்கள் நண்பர்கள் அவர்களைச் சுற்றி எப்போதும் இருப்பார்கள்;.
பன்றிவாசிகள் வாழ்க்கையை இன்பமாகக் கழிப்பர். அதற்குக் காரணம் அவர்கள் பிறருடன் இருக்கும் போது இன்புறுவதும், மற்றவர்கள் ரசிக்கத் தக்க வகையில் பொழுதுபோக வைப்பதும் தான். பிறருக்கு உதவி செய்வதில் அதிக இன்பம் பெறுவதன் காரணமாக, ஆத்மார்த்தமாக உதவிகளைச் செய்வர். சமயத்தில் அதிகமாகக் கூடச் செய்வார்கள். நேர்மையாக மற்றவர்களிடம் நடந்து கொண்டு, அதையே பிறரிடமிருந்தும் எதிர் பார்ப்பார்கள்.
காதல் விவகாரங்களில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், பன்றிவாசிகள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படலாம். ஆதரிப்பது, கொடுதவுவது போன்ற குணங்கள் காரணமாக பன்றிவாசிகளை தோழமை கொள்வது சிறந்தது. அன்பானவர்கள். வெளியே செல்வதை விடவும் வீட்டில் இருப்பதையே அதிகம் விரும்புவார்கள். இருப்பதைக் கொண்டு இன்புறுவர். வீடு, குடும்பம் இரண்டில் இன்பம் காண்பர். சரியான கூட்டாளிகளைப் பெற்று விட்டால், நீண்ட நெடுங்காலம் அந்த உறவு தொடரும்.
சுகாதாரம்
இன்பத்தையே என்றும் தேடிக் கொண்டிருப்பதால், அளவிற்கு அதிகமாகவே அனுபவிப்பார்கள். அதிக உணவு, குடிப் பழக்கம், புகை பிடித்தல் உடல்நலக் குறைவை ஏற்படுத்தும். சுறுசுறுப்பாக இல்லாத பன்றிவாசிகள், அவர்களது நடத்தையின் காரணமாக அதிக எடை போடும் வாய்ப்பு அதிகம். பழகுவதற்கு விருப்பம் கொண்ட காரணத்தால், தனிமையில் கவலை கொள்வர். நல்ல ஆரோக்கியாமான வாழ்க்கை முறை அவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.
பன்றி வருடத்தைய பிரபலங்கள் கணித மேதை சீனிவாச இராமானுஜம், பாடகர்கள் பி.சுசிலா, டி. எம். சௌந்தரராஜன், தமிழக முதல்வர் ஜானகி ராமசந்திரன், தொழிலதிபர் அனில் அம்பானி, நடிகர் அஜீத், வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன், கிரிக்கெட் வீரர் கிருஷ்ணம்மாச்சாரி ஸ்ரீகாந்த், எழுத்தாளர்கள் சுஜாதா இரங்கராஜன், எர்னெஸ்ட் ஹெம்மிங்வே, நடிகர் ஆர்னால்ட் சுவார்செனிகர், இயக்குநர் ஆல்பிரட் ஹிட்ச்காக், அமெரிக்க தொலைகாட்சி நிகழ்ச்சி அமைப்பாளர் டேவிட் லெட்டர்மேன்;
அதிர்ஷ்ட எண்கள் 1, 3, 4, 5, 8,16, 18, 34, 41, 48
ஒத்துப் போகும் விலங்குகள் : முயல், ஆடு
ஒத்துப் போகாத விலங்குகள் : பாம்பு, குரங்கு, பன்றி
பன்றிவாசிகள் ஐந்து மூலகங்களுடன் சேரும் போது வௌ;வேறு குணங்களைப் பெறுவதாகச் சீன ஜோதிடம் நம்புகிறது.
நெருப்பு பன்றி
(ஜனவரி 22,1947 - பிப்ரவரி 09,1948
பிப்ரவரி 18,2007 - பிப்ரவரி 06, 2008)
குணங்கள் ஆழமானவர்கள். பிடிவாதக்காரர்கள். அன்பினால் ஊக்கம் கொண்டு உழைப்பர். உணர்வுப்பூர்வமானவர்கள். பொறுப்பற்றவர்கள். செய்யும் செயல்கள் அனைத்திலும், ஜூவலை தெரியும். எந்தச் செயலையும் பயமின்றிச் செய்யத் துணிவார்கள். ஏதாவது பணியில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். அவர்கள் நல்ல தலைவர்களாகவும், எஜமானர்களாகவும் இருப்பார்கள். வேலை, காதல், குறிக்கோள் எதுவானாலும் பயமின்றி முழுச் சக்தியையும் பயன்படுத்திச் செயல்படுவர்.
மர பன்றி
(பிப்ரவரி 04,1935 - ஜனவரி 23,1936
ஜனவரி 31,1995 - பிப்ரவரி 18,1996)
குணங்கள் இளகிய மனம் படைத்தவர்கள். மிகுந்த உதவி செய்பவர்கள். திட்டமிட்டு செயல்படுவார்கள். குறிகோளினால் ஊக்கம் பெறுவர். துறுதுறுப்பானவர்கள். மற்றவர்களுடன் இணைந்து பணி செய்ய வழி பார்த்துக் கொண்டு இருப்பார்கள். தேவையில்லை என்று சொன்ன போதும், பிறருக்கு உதவி செய்வார்கள். பரந்த மனம், உறுதி இவர்களின் பிறவிக் குணங்கள். ஏமாற்றுக்காரர்கள்.
பூமி பன்றி
(பிப்ரவரி 08,1959 - ஜனவரி 27,1960)
குணங்கள் அமைதியானவர்கள். சுறுசுறுப்பானவர்கள். சமன்பாடுடையவர்கள். விருந்தோம்பல் பண்பு உடையவர்கள். எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். வீடு, குடும்பம் அவர்களை திருப்திப்படுத்தும் விசயங்கள். திட்டமில்லாமல் எந்த ஒரு வேலையையும் தொடங்க மாட்டார்கள். தலைவராக இருப்பதை விடவும் வழி நடத்தப்படும் மனிதராகவே இருக்க விரும்புவர்.
உலோகப் பன்றி
(ஜனவரி 30,1911 - பிப்ரவரி 17,1912
ஜனவரி 27,1971 - பிப்ரவரி 14,1972)
குணங்கள் அதிகாரத்தைக் காட்டுபவர்கள். பொறுமையுடையவர்கள். பெருமிதம் கொள்பவர்கள். வெளிப்படையானவர்கள். உற்சாகமானவர்கள். மிகுந்த திடகாத்திரமான உருவம் கொண்டவர்கள். அவர்களது வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளிலும் அவர்களது பலத்தை அறிந்து கொள்ளலாம். கடினமான உழைப்பாளிகள். தாங்கள் பெற்ற அனைத்தையும் விரும்புவர். அதிகமாக பேசும் தன்மை உடையவர்கள். எல்லோரையும் ஒரேயடியாக நம்பி விடுவார்கள்.
நீர் பன்றி
(பிப்ரவரி 16,1923 - பிப்ரவரி 04,1924
பிப்ரவரி 13,1983 - பிப்ரவரி 01,1984)
குணங்கள் வசீகரிப்பவர்கள். ஆழ்ந்த அறிவுடையவர்கள். நம்பிக்கையினால் ஊக்கம் பெறுவர். எந்தத் தவறும் கூற முடியாத அளவிற்கு நம்பகமானவர்கள். பிறர் அவர்களை எளிதில் மயக்கி விடுவார்கள். ஆனால் இவர்கள் தங்களுக்கு வேண்டியதைப் பெற பிறரை மயக்கவும் செய்வார்கள். அவர்கள் மிகுந்த சமுதாய நோக்குடையவர்கள். நேரத்தை வீணாக்காமல் அனுபவிக்க எண்ணுவார்கள்.
நீங்கள் பன்றி வருடத்தில் பிறந்திருந்தால், மேற் சொன்ன குணங்களைக் கொண்டிருப்பீர்கள் என்று சீனர்கள் கணிக்கின்றனர்.
பன்றி வருடப் பலன்கள் : கருணை நிறைந்த வருடம். நல்லவை நடக்கும். ஏராளமாக எல்லாமே கிடைக்கும் வருடம். தொழில் சிறக்கும். வாழ்க்கையை முழுமையாக வாழலாம். எதிர்பாராத விசயங்கள் நடப்பது மிகக் குறைவாகவே இருக்கும். செல்வச் செழிப்பு மிக்க வருடம். பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. மிகுந்த வீரமும், ஒற்றுமையும் பன்றிக்கான குறிகள் என்பதால் ஒற்றுமை முக்கிய பங்கு வகிக்கும் வருடமாக இருக்கும்.
முடிவு :
இந்தத் தொடரை படித்து வந்த வாசகர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இதில் வருங்காலத்தைப் பற்றி அதிகம் கூறப்படாவிட்டாலும், சீன ஜோதிடத்தின் ஒரு அங்கமான அந்த விலங்குக் குறி பற்றிய செய்திகள் பிறரிடம் பழகும் போது அவர்களின் குணநலன்களை உணர உதவும். நல்லனவற்றை ஏற்று அல்லனவற்றை விடுத்து வாழ்க்கையில் வெற்றி பெற என் உளமார்ந்த வாழ்த்துக்கள்.