சப்தங்களுக்கே உரிய மந்திரசக்தி!

சப்தங்களுக்கே உரிய மந்திரசக்தி!

தமிழில் அநேக உத்தமமான ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. அவற்றைப் படித்தால் மனஸ் உருகுகிறது. ஆனாலும் குறிப்பிட்ட பிரயோஜனம் வேண்டுமென்றால், அதில் சிலதை மட்டும்தான் உருவேற்றுவது என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். திருமுருகாற்றுப்படை வியாதி திருவதற்கென்று ஒரு திருப்புகழ் (இருமலுரோக) தேவாரத்தில் மழை வேட்டல் பதிகம் என்றிப்படி சிலதை நக்கீரரும், அருணகிரிநாதரும், சம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளும் செய்திருக்கிறார்கள். இவற்றைவிட நெஞ்சை உருக்கும்படியான வேறு ஸ்தோத்திரங்கள் பண்ணியிருக்கக்கூடும். ஆனால் அவற்றைவிட்டு இவற்றை மட்டும் ஏன் எடுத்துக் கொள்கிறோமென்றால் சப்த விசேஷந்தான். இந்தப் பாடல்களில் உள்ள சப்தங்களக்கு மந்திர சக்தி இருக்கிறது. ஆசார்யானேதான் “சௌந்தர்ய லஹரி” “சிவானந்த லஹரி” இரண்டு செய்திருக்கிறார். ஆனால் “ஸௌந்தர்ய லஹரியில் ஒவ்வொரு சுலோகத்தை ஜபிப்பதற்கும் ஒவ்வொரு விதமான பலன் சொல்லியிருக்கிற மாதிரி, சிவானந்த லாஹரிக்குச் சொல்லவில்லை. காரணம் என்னவென்றால் சப்தங்களுக்கே உள்ள மந்திர சக்திதான்.
 
- கவிஞர் கண்ணதாசன்