ஆண்டவனை அசைத்துப் பார்க்கும் விதியின் வலிமை!

ஆண்டவனை அசைத்துப் பார்க்கும் விதியின் வலிமை!

திருமால், கிருஷ்ணன் என்னும் மனிதனாக அவதரித்து உலகில் தர்மத்தை நிலைநாட்டினார். மனிதனாகப் பிறந்து விட்டால் தவறு செய்வது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. ஆனால், கிருஷ்ணன் செய்த தவறுகள் நல்லவர்களைக் காப்பதற்காக செய்யப்பட்டவை. 

முந்தைய பிறவியில் ராமானாகப் பிறந்த திருமால், வாலி என்னும் வானர அரசனை மறைந்திருந்து கொன்றார். அந்த வாலி, கிருஷ்ணாவதார காலத்தில் உலுபதன் என்னும் வேடனாகப் பிறந்தான். 

ஒரு நாள் கிருஷ்ணர் ஒரு புதர் மறைவில் படுத்திருந்தார். ஏதோ மான் தான் படுத்திருக்கிறது என்று தவறாகக் கருதி விட்ட உலுபதன் அம்பை எய்தான். அது கிருஷ்ணரின் காலை பதம் பார்த்தது கிருஷ்ணர் உயிர் விட்டார். 

நாம் இந்தப் பிறவியில் பிறருக்கு என்ன செய்கிறோமோ, அது இந்தப் பிறிவயிலோ மறுபிறவியிலோ நம்மையே வந்து சேர்ந்து விடும். தெய்வமாகவே இருந்தாலும் இந்த விதிமுறை பொய்க்காது.