பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - கும்பம்

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - கும்பம்

விரும்பியதை அடைய தெளிவாகச் செயல்படும் கும்ப ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியிலே அமர்ந்திருப்பதும், மூன்றாமிடமான முயற்சி ஸ்தானத்தில் குரு அமர்ந்திருப்பதும் நீங்கள் எடுக்கும் அனைத்துவித காரியங்களை வளம் பெற செய்வார்கள். தன ஸ்தானத்தில் ராகு அமர்ந்து தொழிலிலும், உத்தியோகத்திலும் பொருளாதார வளம் பெற செய்வார்கள். உங்களின் வளர்ச்சி பணிகளில் இருந்து வந்த சில தடைகள் நீங்கி மேன்மை அடைவீர்கள். புதிய நல்ல திட்டங்களுக்கு உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். காரியத்தில் குதிரை வேகத்தில் சென்று செயல்பாடுகளை துரிதபடுத்துவீர்கள். அரசியலில் உங்களின் செல்வாக்கு உயரும். அதிகார பலம் உங்களுக்கு கிட்டும். விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவீர்கள். சிலருக்கு கலைதுறையில் முன்னேற்றமும், புதிய வாய்ப்புகளும் உண்டாகும். சகோதரர் மூலம் சிலருக்கு ஆதாயம் கிடைக்கும். எதிலும் கவனமுடன் செயல்பட்டு வளம் பெறுவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:
 
26-02-2024 திங்கள் காலை 08.20 முதல் 28-02-2024 புதன் இரவு 07.34 மணி வரை.
 
நட்சத்திர பலன்கள்:-

அவிட்டம் 3, 4 ஆம் பாதங்கள்:
 
சாதாரண காரியத்தை கூட கவனித்து செய்வீர்கள். விளையாட்டு துறையில் பாராட்டு பெறும் வகையில் உங்களின் செயல்பாடு அமையும். தொழிலில் முன்பைவிட சிறப்பாக இருக்கும்.

சதயம் 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
வெளிநாடுகள் செல்ல விரும்பும் சிலருக்கு அதற்கு முயற்சி செய்தால் விரைவில் உங்களுக்கு விசாவும், பணியும் கிடைக்கும். தொழில் முன்பை விட சிறப்பாக அமையும்.

பூரட்டாதி 1, 2, 3 ஆம் பாதங்கள்:
 
திருமண காரியம் சிறப்பாக அமையும். இனி உங்களுக்கு தேவையான அனைத்தும் எளிதில் கிடைக்கும். சுயதொழிலில் வளம் பெறுவீர்கள். பணபுழக்கம் இருக்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
நீலம், பச்சை, வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
புதன், வெள்ளி, சனி.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
சனிக்கிழமை வைரவருக்கு, ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு மஞ்சள் நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள அனைத்து தடைகளும் நீங்கி மேன்மை அடைவீர்கள்.