காஞ்சியின் அற்புதமாய் நந்திவாகனரின் தக்கத்திருமேனி!

காஞ்சியின் அற்புதமாய் நந்திவாகனரின் தக்கத்திருமேனி!

சித்தர்கள் யோகிகள் காந்தர்வர் பட்சர் முதலியோர் பூச்செண்டுகளைக் கொண்டு வந்து ஏகாம்பரேஸ்வரரைப் பூஜித்துத் தங்கும் இடம் செண்டனை வெளி என்று பெயர் பெற்றது. காஞ்சிபுரத்து அற்புதங்களில் ஒன்று நந்திவாகனரின் தங்கத் திருமேனி. இவரை வழிபடுகின்றவர்கள் பிறவி நீங்கி முக்தி பெறுவர். பரம்பொருளை உணர்ந்து வழிபடும் மெய்யன்பர்கள் சில நினைவுடன் இவரைத் தீண்டினால் அவர்கள் கையில் இருக்கும் பொருள் எதுவாயினும் தங்கமாக மாறிவிடும்.
 

இத்தகைய அதிசய மூர்த்தி மட்டுமன்று அதிசய தீர்த்தங்களும் காஞ்சிபுரத்தில் உள்ளன. புண்ணிய தீர்த்தம் என்ற குளத்தில் சிவநாமம் ஓதி ஈசன் நினைவுடன் முழுகி எழுந்தால் தீமையெல்லாம் நன்மையாக மாறுகின்றன. மற்றொரு தீர்த்தம் இஷ்ட சித்தி தீர்த்தம் என்னும் பொய்கை. இப்பொய்கையில் பரமனைப் போற்றி ஈஸ்வரனை உள்ளத்தில் நினைந்து நீராடுபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுகின்றன. இதனாலேயே இந்தப் பொய்கைக்கு இஷ்ட சித்தி தீர்த்தம் என்னும் பொய்கை. இப்பொய்கையில் பரமனைப் போற்றி ஈஸ்வரனை உள்ளத்தில் நினைந்து நீராடுபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுகின்றன. .தனாலேயே இந்தப் பொய்கைக்கு இஷ்ட சித்தி தீர்த்தம் அதாவது வேண்டியதை அளிக்கும் நீர்நிலை என்று பெயர் உண்டாயிற்று. மற்றொரு அற்புதக் குளத்திற்கு சுந்தரக்குளம் என்று பெயர். இக்குளத்தில் அழகேசனைத் துதித்து நீராடினால் மிக அழகிய தோற்றத்துடன் வெளிவருகின்றனர். தில்லையில் திருநீலகண்டத் தம்பதியரை இளமையாக்கிய திருக்குளம் போன்று காஞ்சியில் அழுகில்லாதவர்களையும் அழகாக்கும் சுந்தரக் குளம் உள்ளது.  இவையேயல்லாமல் பைம்புனல் கிணறு, உலகாணி, சந்திர மாதிரம், காப்புடைத் தீர்த்தம், சாருவதீர்த்தம் எனப் பலப்பல புனித நீர்நிலைகள் காணப்படுகின்றன.
 
காஞ்சிபுரத்தில் இருந்த மிக விந்தையான ஒரு இடம் மாய மண்டபம். இந்த மண்டபத்திற்குள் நுழைந்தவர்கள் மற்றவர்களின் கண்களுக்குப் புலனாக மாட்டார்கள். அவர்களால் மற்றவர்களைப் பார்க்க முடியும். வாலிக்குப் பயந்து வந்த சுக்கிரீவன் இந்த மண்டபத்தில் தங்கியிருந்தான். காஞ்சியின் மற்றொரு அற்புதம் இன்பக் குகை. முழுமுதற் பொருளின் நினைவோடு இந்தக் குகையில் நுழைந்து அங்குள்ள லிங்கப் பரம்பொருளைத் தரிசனம் செய்து வலம் வந்து தொழுபவர்களின் துன்பம். கவலையெல்லாம் காற்றாகப் பறந்து போக மிகுந்த இன்பம் பெறுகின்றனர். எல்லோருக்கும் இன்பம் அளிக்கும் இன்பக் குகையே அல்லாமல் சுக்கிரீவன் தங்கியிருந்த குரங்கு வடிவம் கொண்ட மற்றொரு குகையும் உள்ளது. இவ்வாறு எண்ணற்ற கோயில்களையும் தீர்த்தங்களையும் அற்புதங்களையும் குகைகளையும் கொண்டு காஞ்சித் திருநகரம் பதினான்கு உலகங்களிலும் உள்ள வளங்களையெல்லாம் உடைய கொள்கலம் என்று கூறும்படிப் பொலிவுற்றுப் புகழ் பெற்றுச் சிறந்ததிருந்தது.
 
இத்தகைய சிறப்புகள் மிகுந்து பொன்னால் மிளிரும் பொன்னகரமான காஞ்சிபுரத்தை மாணிக்கவாசகப் பெருமாள் மதுரையிலிருந்து தில்லை செல்லும் போது கண்டு தொழுதார். கச்சிக்கம்பன் மாணிக்கவாசகப் பெருமானுக்கு முப்புரம் எரித்த வில்லாளியாக ஒற்றை அம்புடன் காட்சி தந்ததால் ஏகம்பர் (ஏக+அம்பர்) என்று திருப்பெயர் உண்டாயிற்று. திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகரைத் தடுத்து நிறுத்தி தட்சிணாமூர்த்தி வடிவைக் காட்டி ஓங்காரப் பொருள் உபதேசித்து ஆட்கொண்டருளிய பரமசிவம் அவருக்கு அருளிச் செய்ததற்கு ஏற்ப தலந்தோறும் திருக்காட்சி தந்தருளினார். மாணிக்கவாசகர் ஏகாம்பரேஸ்வரரைத் தொழுதபோது முப்புரம் எரித்த வில்லாளியாக ஒற்றை அம்புடன் பரமன் வெளிப்பட்டுக் காட்சி கொடுத்தார்.
 
மதுரையில் கொற்றாளாகவும் வேடுவனாகவும் போர்ச் சேவகனாகவும் பரிப்பாகனாகவும் திருவாதவூரில் நடராஜப் பெருமானாகவும் அடியவராகவும் திருவத்தரகோச மங்கையின் ஜோதியாகவும் மாணிக்கவாசகருக்குத் திருக்காட்சி தந்தருளிய மூலப்பொருள் காஞ்சிபுரத்தில் ஒற்றை அம்புடன் கூடிய வில்லாளியாக திரிபுராரியாக வெளிப்பட்டுத் திருக்காட்சி தந்தார். ஏகாம்பரேஸ்வரர் ஏக அம்பராகக் காட்சி கொடுத்த கருணையை
 
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர்
தன் கையில் ஓரம்பே முப்புரம் உந்தீபற
ஒன்றும் பெருமிகை உந்தீபற
தாம் அடியிட்டலும் அச்சு முறிந்தது என்று உந்தீபற
அழிந்தன முப்புரம் உந்தீபற
உய்யவல்லார் ஒரு மூவரைக் காவல் கொண்டு எய்யவல்லார்
 
என்று ஓங்கார வாசகர் பாடியுள்ளார். ஏகம்பனது திருக்காட்சி பெற்ற மாணிக்க வாசகர் திருவுந்தியார் என்ற பதிகம் பாடித் தொழுதார்.
 
பரமேஸ்வரன் முப்பரம் அழிப்பதற்காக இமயமலையை (கல்) வில்லாக வளைத்த போது மகாவிஷ்ணு அம்பாகிப் பணிபுரிந்தார். வாயு அம்பின் இறகாகவும் அக்கினி முனையாகவும் இருந்தனர். பூமி தேரானது. சூரியனும் சந்திரனும் சக்கரங்களாயினர். பிரம்மன் தேரோட்டியானான். எல்லோரும் தாங்கள்தாம் இறைவனுக்குத் துணை. நாம் ஒன்று சேர முப்புரம் அழியப்போகின்றது என்று அகந்தையுடன் இருந்தனர். அப்பொழுது எல்லாம் வல்ல முழுமுதல் சிறிதே புன்னகை பூத்து தேரின் மீது திருவடியை வைத்தார். புன்னகை புரிந்த பரமன் திருவடிப்பட்ட அளவிலே தேர் அச்சு முறிந்து விழுந்தது. புன்னகையிலிருந்து புறப்பட்ட தீயால் முப்புரம் எரிந்து சாம்பலாயின. இவ்வாறு முப்புரங்களோடு எல்லோருடைய ஆணவம் முதலிய மூன்று மலங்களும் எரிந்து சாம்பலாகிப் போனதை.
 
- டொக்டர் சிவப்பிரியா