பேஷியல் யோகா – முக அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான்!

பேஷியல் யோகா – முக அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் தான்!

பொலிவு குன்றும் முகம்
நம் உடலுக்குள் ஏற்படும் நோய்களை முகம் காட்டிக் கொடுத்து விடும். ஈரலில் ஏதாவது பிரச்சினை என்றால் முகத்தில் கருமையான திட்டுக்கள் ஏற்படும். மண்ணீரலில் பிரச்சினை என்றால் உதடுகள் வெடித்து காய்ந்த புண்ணாகிப் போகும். வாயைச்சுற்றியும் புண்கள் ஏற்படும். இப்படி பல்வேறு நோய்களுக்கான அறிகுறிகளை முகத்தைக் கொண்டு தான் நாம் அறிந்து கொள்கிறோம் நோய்கள் வந்தவுடன் முகம் வாடி பொலிவிழந்துபோய் விடும். அதனால்தான் மருத்துவரிடம் சென்றவுடன் அவர் வாயை நன்றாக திறந்து நாக்கை நீட்ட கூறுகிறார். எனவே பொலிவிழந்த முகத்தை பளிச்சென்று மாற்ற பேஷியல் யோகா கைகொடுக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். அழகுக்கும் யோகாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நிருபித்துள்ளனர் யோகா நிபுணர்கள்.
 
கண்களுக்கான பயிற்சி
 
வலது கையை நீட்டி கட்டை விரலை உயர்த்தி இரண்டு கண்களுக்கும் இடையில் பிடித்துக் கொள்ளவும்.வலது பக்கமாக கட்டை விரலை முடிந்த அளவுக்கு திருப்பவும். தலை திரும்பக் கூடாது. கண்கள் மட்டுமே கட்டை விரல் செல்லும் திசை நோக்க வேண்டும். அதே மாதிரி இடது கை பெரு விரலை வைத்துக் கொண்டு இடது பக்கமாக பார்வையை முடிந்த அளவுக்கு கொண்டு செல்லவும். முடிந்ததும் மேலிருந்து கீழும் கீழிருந்து மேலும் பிறகு கண்களுக்கு நெருக்கமாக வும் , தள்ளி வைத்துக் கொண்டும் அதோ மாதிரி பார்வையை சுழற்றவும். இது கண்களுக்கான அற்புதப் பயிற்சி. கண்களை சுற்றியுள்ள கரு வளையங்கள் சுருக்கங்கள் மறையும்,கண் பார்வை தெளிவாகும். கழுத்துக்கு விரல் சிகிச்சை தைராய்டு பிரச்சினை உள்ளவர்களின் முகம் எப்போதும் சோகமாக காணப்படும் பொலிவற்ற அவர்களின் முகத்தை பளபளப்பாக மாற்ற விரல் யோகா சிகிச்சை மிகவும் பயன்தரும். பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்த வைத்துக் கொண்டு சம்மணமிட்டபடி அமரவும். பின் கண்களை மூடிக் கொண்டு மேலும் கீழும் ஆட்டவும். கண்களை மூடிக் கொண்டு செய்வது தான் நல்லது.