மணவாழ்வு தரும் மணக்குள விநாயகர்!

மணவாழ்வு தரும் மணக்குள விநாயகர்!

விநாயகர் திருமணமாகாதவர். ஆனால் திருமணம் ஆகாதவர்களுக்கு மணப்பேறு தரும் கடவுளாக இவர் ஓர் இடத்தில் அருள் பாலிக்கிறார். எங்கே? புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் பாண்டிச் சேரியை ஆட்சி புரிந்த போது அங்கிருந்த ஒரு பிள்ளையார் கோயிலை இடையூறாகக் கருதி பிரஞ்சு கவர்னர் உத்தரவின் பேரில் அந்தப் பிள்ளையாரைக் கொண்டு போய் கடலில் போட உத்தரவிட்டார். மறுநாள் பிள்ளையார் பூட்டிய கோயிலுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டிருந்தாராம். கவர்னர் மனம் மாறி பிள்ளையார் கோயில் இருந்த இடத்தை அவருக்கே சாசனம் செய்து கொடுத்ததுடன் நித்ய பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்தார். 
 
இதனால் இவருக்கு கொள்ளைக்காரன் பிள்ளையார் என்றும் பெயர். “மணக்குள விநாயகர்” என்ற இவரது பெயருக்கும் காரணம் உண்டு. கடற்கரை மணலும் அருகில் உள்ள குளமும் சேர அமைந்ததால் மணல் குளம் மணக்குள் விநாயகர் என்ற பெயர் ஆயிற்று. 
 
கல்யாணமாகாமல் தடங்கல் ஏற்பட்டு தள்ளிப் போய்க் கொண்டே இருப்பவர்கள் இவரை வேண்டிக் கொண்டு கல்யாண உற்சவ வழிபாடு செய்தால் திருமணம் விரைவில் முடியும் என்கிறார்கள்.