கப்பல் - கனவுகளும் பலன்களும்

கப்பல் - கனவுகளும் பலன்களும்

நீங்கள் ஒரு கப்பலைக் கனவில் கண்டால் இப்போது இருப்பதைவிட உங்கள் வாழ்வு பல மடங்கு கூடுதலாக வளம் அடையப் போகிறது. அதற்கு முதற்படியாக நீங்கள் சிறிது உங்கள் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து இருக்க நேரலாம். இதற்கு முன் நீங்கள் போட்டிருந்த திட்டங்களிலும் சில மாறுதல்கள் ஏற்படலாம்.

 
நீங்கள் ஒரு கப்பலில் பயணம் செய்வது போல் கனவு கண்டால் நீங்கள் இப்போது செய்ய நினைத்திருக்கும் காரியத்தை சிறிது சிந்தித்துச் செய்யுங்கள். ஏனென்றால் அது நடுவிழியில் தடைப்பட்டுப் போவதற்கான வாய்ப்பு இருக்கிறது 
 
நீங்கள் ஒரு கப்பலைவிட்டு நீந்திக் கரையேறுவது போல் கனவு கண்டால் உங்களுடைய தொழில் அல்லது வியாபாரத்தில் ஒரு பெரிய மாறுதல் ஏற்படப்போகிறது அந்த மாறுதலால், நீங்கள் பல சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் சிறிதும் எதிர்பாராத அளவு இலாபமும் அடைவீர்கள். 
 
நீங்கள் கடலில் நீந்திச் சென்று ஒரு கப்பலை அல்லது படகை அடைவதுபோல் கனவைக் கண்டால் நீங்கள் உள்ளூர எதற்கோ பயந்து கொண் டிருக்கிறீர்கள். அந்தப் பயத்தின் காரணமாக நீங்கள் வாழும் சூழ்நிலையையே (அதாவது நீங்கள் வசிக்கும் வீட்டை அல்லது உத்தியோ கத்தை) மாற்றிக் கொண்டு விடலாமா என்று யோசிக்கிறீர்கள்.ஆனால் இன்னும் சில நாள்களில் எல்லாம் சரியாகி விடக்கூடும்.
 
நீங்கள் ஒரு கப்பலின் மேல்தளத்தில் இருப்பது போல கனவு கண்டால் வாழ்க்கையில் நீங்கள் ஓர் உயரிய நிலையை அடையப் போகிறீர்கள். அதே சமயத்தில் சில சாதுக்களுடைய பழக்கமும் உங்களுக்கு ஏற்படப்போகிறது. அவர்களுடைய உறவினால், உங்களுக்கு ஆன்மீகத் துறையில் நாட்டம் உண்டாகலாம்.
 
நீங்கள் ஒரு போர்க்கப்பலைக் கனவில் கண்டால் இன்னும் சில நாள்கள் வரையில் உங்களுக்கு எரிச்சல் ஊட்டக்கூடிய ஒரு சூழ்நிலையில் நடுவே நீங்கள் வாழ வேண்டியதிருக்கும். ஆனால் அதற்கு ஈடுசெய்யும் வகையில் உங்களுக்கு மிகவும் பிரியமான ஒரு நபரும் உங்கள் கூடவே இருப்பார். முடிவில் நீங்கள் இருவருமே கணவன் மனைவி ஆகிவிடக்கூடும்.
 
நீங்கள் ஒரு துறைமுகத்தைக் கனவில் கண்டால் உங்கள் வாழ்க்கையின் தலையாய குறிக்கோளாக நீங்கள் எதைக் கொண்டிருந்தீர்களோ அதை விரைவில் அடையப் போகிறீர்கள். அதன் பிறகு உங்களுடைய வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வது என்கின்ற பிரச்னை ஏற்படும். அதைப் பற்றி இப்போதே சிந்தித்து ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கள்.
 
நீங்கள் ஒரு கப்பல் கவிழ்வது போல் கனவு கண்டால் உங்கள் குடும்பத்தில் அல்லது வியாபாரத்தில் மிகவும் குழப்பமான ஒரு சூழ்நிலை உருவாகப்போகிறது. அந்தக் குழப்பத்தினால், உங்கள் எதிர்காலமே இருள் அடைந்துவிடுமோ என்று கூட அஞ்சும்படியாய் இருக்கும். 
 
நீங்கள் சிறிதும் கலங்காத நெஞ்சத்துடனும் நிதானத்துடனும் நடந்துகொண்டால் சமாளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிடாது. சமாளித்துக் கொள்ளலாம். கொஞ்சம் தியாகம் செய்வதற்குக் தயாராய் இருங்கள் எல்லாம் சரியாகிவிடும்.
 
தமிழ்வாணன்