விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - துலாம்

வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய இலக்குகளை தெரிவு செய்து, அதனை நோக்கி பயணிக்கும் துலாம் ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு துவக்கத்தில் ராகு / கேது பெயர்ச்சியும் அடுத்து குரு பெயர்ச்சி வருவது உங்களின் ராசிக்கு மிகப்பெரிய நன்மைகள் உண்டாகும். ராகு ஐந்தாமிடத்திலும் கேது லாபஸ்தானத்தில் அமர்கிறார்கள். குரு பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்வை இடுவது சகல காரியங்களிலும் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும்.
இந்த ஆண்டு 26-04-2025 முதல் ராகு பஞ்சம ஸ்தானத்திலும் கேது லாபஸ்தானத்தில் அமர்வது ஒன்றரை ஆண்டு பலன்கள் தொடரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு அமர்வது, பூர்வீக சொத்துகள், குல தெய்வ வழிபாடுகள் சிறப்பாக அமையும். எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. அன்னியர் அறிமுக இல்லாத நபர்களை நம்பி முதலீடு செய்தல் தவிர்ப்பது நல்லது. கேது லாபஸ்தானத்தில் அமர்வது நீங்கள் செய்யும் தொழிலில் சிறப்பான வளர்ச்சியை பெற்று தருவார். உத்தியோகத்தில் பதவி உயர்வுகள், கூடுதல் மரியாதையும் பெறுவீர்கள்.
குரு பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து ராசியையும் முயற்சி ஸ்தானத்தையும் பார்வை இடுவதும். உங்களின் யோகாதிபதி சனி / ராகுவும் சம்மந்தபடுவதை ஒன்பதாம் பார்வையாக பார்ப்பதால் நீங்கள் நினைத்ததை அடையும் வாய்ப்புகள் அமையும். எந்த தொழில் செய்தாலும் அதில் முழு ஈடுபாடுகளுடன் செயல்படுவீர்கள். நீண்ட நாட்கள் வராமல் இருந்த தொகை விரைவில் உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் அமையும். சொந்த காலில் நின்று தொழில் செய்வீர்கள். அடுத்த வரை நம்பிக்கொண்டு இருக்காமல் வளம் பெறும் வழியை கண்டு, அதில் கவனம் செலுத்தி நலம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, வியாழன்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, நீலம், மஞ்சள்.
அதிர்ஷ்ட எண்கள்:
3, 6, 8.
பரிகாரங்கள்:
ஞாயிறு மாலை ராகு காலத்தில் (04.30 - 06.00) பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி முந்திரி பருப்பு மாலை கட்டி போட்டு வேண்டிக் கொள்ள சகல காரியமும் சிறப்பாக நடக்கும்.