செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - துலாம்

செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - துலாம்

காலத்தையும், சூழ்நிலையும் கருதி செயல்படும் துலாம் ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சுகஸ்தானத்தை பார்வை இடுவதும் தொழில் சிறப்பாக அமையும். எதை நோக்கிய பயணமோ அதை செயல்படுத்தும் வலிமை பெறுவீர்கள். மக்களின் அன்றாட பிரச்சனைகளில் ஈடுபாடு கொண்டு செயல்படுவீர்கள்.
 
உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதி சந்திரன் தனஸ்தானத்தில் அமர்வது உங்களின் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கலை ஆர்வத்துடன் சிலர் சின்னத்திரை தொடர், நடிப்பு துறையில் சென்று, கல்லூரியில் உடன் படித்தவர் களுடன் வாய்ப்பு தேடும் பணியில் இருப்பீர்கள். லாபஸ்தானத்தில் சூரியன் ஆட்சி பெற்று இருப்பதும் உங்களின் வருமான வாய்ப்புகள் சிறப்பாக அமையும். வாழும் வரையிலும் போராடிக் கொண்டிருக்காமல் அதனை எப்படி நிவர்த்தி செய்து வெளியில் வருவது என்று அறிந்து, அதனை செயல்படுத்துவது நல்லது. அரசியலில் ஈடுபாடு இருந்தாலும் அதில் கவனம் செலுத்துவதை குறைத்து கொள்வீர்கள். நண்பர் தொடர்பு இருந்தால் உங்களுக்கு செலவு தானே அமையும்.
 
வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து வரும். அன்பர்களுக்கு வெளிநாட்டு வேலை உறுதி செய்யபடும். மேலும் விசா கிடைக்க சற்று தாமதமாகும். எனினும் வெளிநாட்டு பயணம் சிலருக்கு உறுதியாகும். நல்ல தொழில் வாய்ப்புகள் வந்தால் அதனை பயன்படுத்தி கொள்வது நல்லது. யாரையும் நம்பி கொண்டிருக்காமல் களத்தில் இறங்கி வேலை செய்வது சால சிறந்தது. தொண்டு நிறுவனத்தில் உங்களின் பங்கு பயனுள்ளதாக அமையும். 
 
உங்களின் யோகாதிபதி சனி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பார்வை இடுவது உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பிறருக்கு உதவி செய்வதை பெரும் பாக்கியமாக கருதி செயல்படுவீர்கள். மன வலிமையே உங்களின் அனைத்து காரியத்திற்கும் வெற்றியை பெற்று தரும். சாதுர்யமாக எதையும் பேசி சாதித்துக் கொள்வீர்கள். மாற்று ஏற்பாடுகளை செய்து உடனே எதையும் சரி செய்து கொள்வீர்கள்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
வெண்மை, மஞ்சள், சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வெள்ளி, ஞாயிறு, திங்கள்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
12-09-2025 வெள்ளி இரவு 10.05 முதல் 14-09-2025 ஞாயிறு இரவு 12.36 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியரை வணங்கி சிவப்பு நிற பூ வைத்து துவரை கலந்த உணவு தயாரித்து நைவேத்தியம் செய்து நெய் தீபமேற்றி வணங்கி வேண்டிக் கொள்ள தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.