செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - தனுசு

செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - தனுசு

அனைத்து விடயங்களிலும் தன்னால் முடிந்ததை செய்யும் தனுசு ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு பார்வை பெற்று பலம் பெறுவதும். உங்களின் யோகாதிபதியான சூரியன் ஆட்சி பெறுவதும் வளமான வலிமை பெற்று விளங்குவீர்கள். உங்களின் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் அமர்வது தொழிலில் முன்னேற்றம் பெற செய்வார்.
 
உங்களின் முயற்சிகளுக்கு பக்கபலமான உங்களின் செயல்பாடுகள் அமையும். எதையும் உறுதியுடன் செய்து வளம் பெறுவீர்கள். யாரையும் நம்பி எதிலும் செயல்படாமல் உங்களை மட்டும் நம்பி இருப்பீர்கள். கருத்து வேறுபாடுகளுடன் இருந்தவர்கள் இணைவார்கள். முன் பின் முரண்பாடுகளுடன் இருந்தவர்கள் கூட உங்களிடம் இனி இணக்கமாக இருப்பார்கள். நல்ல விடயங்களை செய்வதற்கு முன் அனுபவசாலிகளிடம் சில ஆலோசனைகளை கேட்டு பெறுவீர்கள். உடல் நலன் பற்றி சற்று கவனம் செலுத்துவீர்கள். முக்கியமான சில காரியங்களை செய்வதற்கு தயக்கம் காட்டி காலம் தாழ்த்துவீர்கள்.
 
தொழில் ஸ்தானாதிபதி புதன், சூரியனுடன் இணைவு பெறுவதும், தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்து சுகஸ்தானத்தையும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்வை இடுவது, உங்களின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். நல்ல காலம் துவங்கிவிட்டதால் இனி துணிவுடன் எதையும் செய்யலாம். பொது நல சேவைகளில் ஆர்வம் கொண்டு செயல்படுவீர்கள். 
 
கலைத்துறையினருக்கு சுய முயற்சிகளால் வாய்ப்பு அமையும். எதிலும்  கருத்து ஒற்றுமையுடன் செயல்படுவது நல்லது. யாருக்கும் எந்த தீங்கும் செய்ய கூடாது என்று சபதம் எடுத்து செயல்படுவீர்கள். கருத்துகளுக்கு முக்கியத்துவம் தந்து எதையும் வெளிபடையாக பேசுவீர்கள். நல்ல முடிவு எடுத்து வளம் பெறுவீர்கள். சுப முகூர்த்த காலம் என்பதால் நல்ல வரன் சிலருக்கு அமையும். தன்னுடைய தேவைகளுக்கு தகு்நத பண வரவு இருக்கும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
மஞ்சள், சிவப்பு, பச்சை.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
வியாழன், ஞாயிறு. செவ்வாய்.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
17-09-2025 புதன் அதிகாலை 04.08 முதல் 19-09-2025 வெள்ளி காலை 09.32 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வெள்ளை வண்ண பூ வைத்து இரண்டு நெய் தீபம் ஏற்றி கற்கண்டு வைத்து வேண்டிக் கொள்ள உங்களின் எண்ணம் போல அனைத்து காரியமும் வெற்றியை தரும்.