ஜுலை மாத ராசி பலன்கள் 2026 - மிதுனம்
மனவலிமையும், அறிவாற்றலும் கொண்டு விளங்கும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிநாதன் புதன் ராசியில் அமர்வதும் தனஸ்தானத்தில் குரு உச்சம் பெற்று தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது சிறப்பான முன்னேற்றம் தொழிலிலும், உத்தியோகத்திலும் அமையும். உண்மை நேர்மை சத்தியம் கொள்கையாக கொண்டு விளங்குவீர்கள். எடுத்த காரியம் முடிக்காமல் ஓயமாட்டீர்கள். பொறுப்புடன் தானும் தன்னுடன் இருப்பவர்களும் இருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். புதிய சரித்திரத்தை உருவாக்க வேண்டுமென்று முனைப்புடன் செயல்படுவீர்கள்.
ராசிநாதன் புதன் பலம் பெற்று இருப்பதால் எடுத்த காரியம் வெற்றியை தரும். புத்தியுடன் சிரத்தையுடன் செயல்படுவது இன்னும் நல்ல பலனை பெற்று தரும். மூன்றாம் அதிபதி சூரியன் புதனுடன் இணைவது காரிய அனுகூலமும், விடாமுயற்சி எதிலும் எடுத்து வைத்த காலை பின் வைக்காமல் முன்னேக்கி செல்லுவது உங்களின் செயலாக அமையும். விருப்பமான எந்த செயலையும் தள்ளி போட மாட்டீர்கள். வான் உயர பறந்தாலும் தான் வந்த பாதையை மறக்க மாட்டீர்கள். எழுத்து உரிமை, பேச்சுரிமையை என்று கடைபிடித்து வாழ்வில் வளம் பெறுவீர்கள்.
அரசியலில் நல்ல ஆலோசகராக இருப்பீர்கள். சட்ட வல்லுநர்கள் பலவித வழக்குகளில் தீர்வு காண்பீர்கள். பொது விடயங்களில் அதிகமான ஈடுபாடு இல்லை என்றாலும் பிறருக்கு ஒத்துழைப்பு தருவீர்கள். தனஸ்தானத்தில் குரு உச்சமாக அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சுக்கிரனுடன் இணைவு பெறுவது பொருளாதாரத்தில் மேன்மை அடைவீர்கள். எதற்கு துணிந்து செயல்பட்டு வாழ்வில் சாதிக்க வேண்டுமென்று ஒரு செயலையும் பார்த்து பார்த்து செயல்படுவீர்கள். சித்த மருத்துவம், கணணி பிரிவுகள், மீடியா, புதிய தொழில் நுட்ப நுணுக்கங்களில் கைதேர்ந்து சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
முயற்சி ஸ்தானத்தில் கேது அமர்ந்து சில நேரம் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனை பெற்று தருவார். பாக்கிய ஸ்தானத்தில் ராசி அமர்ந்து செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். தனாதிபதி சந்திரன் ராசியை பார்ப்பது பொருளாதார பணபுழக்கம் குறைவின்றி தொழில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பிடித்த தொழிலை செய்வீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். சகோதரர்களின் மூலம் புதிய செலவு உண்டாகும். எதையும் முன் கூட்டியே முடிவு செய்து செயல்படுவது நல்லது. அதிக நேரம் பணி செய்தாலும் ஓய்வு எடுத்து கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
01-07-2026 புதன் பகல் 02.09 முதல் 03.07.2026 வெள்ளி இரவு 11.59 மணி வரையும்.
28-07-2026 செவ்வாய் இரவு 09.36 முதல் 31-07-2026 வெள்ளி காலை 07.37 மணி வரையும்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணிய சுவாமி வணங்கி இரண்டு இலுப்பெண்ணெய் தீபம் ஏற்றி சிவப்பு நிற பூ வைத்து வேண்டிக் கொள்ள உங்களின் சகல காரியமும் வெற்றி கரமாக அமையும். பொருளாதார தடை நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
















