துடைப்பான்களை மறைத்து வைக்கவும்
ஒவ்வொரு வீட்டிலும் வீட்டைச் சுத்தப்படுத்தவும், துய்மையாக்கவும், துடைப்பான்களையும், துடைக்கும் துணிகளையும் பயன்படுத்துகிறோம். இவை வீட்டுக்குள் நுழையும் தீய, எதிர்மறை சக்திகளைச் சுத்தப்படுத்தி வெளியேற்றுவதைக் குறிக்கின்றன. துடைப்பான்களை கண்ணில்படுமாறு வைப்பது அமங்கலமாகக் கருதப்படுவதால் அவற்றை மறைத்து வைக்க வேண்டும். சாப்பாட்டு அறையில் துடைப்பான்களைக் கண்களில் தெரியுமாறு வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை உணவையும் வருமானத் தையும் அகற்றிவிடுமெனக் கருதப்படுகின்றன.
வீட்டின் வெளியே வாசலைப் பார்த்துத் துடைப்பானைத் தலைகீழாக வைத்தால், வீட்டில் விரும்பத்தகாதவர்கள் நுழையாதவாறு வீட்டைக்காக்கும். இதை இரவு நேரத்தில் செய்யலாம். ஆனால் பகலில் துடைப்பான்களை யார் பார்வையிலும் படாதவாறு வைத்தல் வேண்டும்.