கூத்தனூர் அருள்மிகு மகாசரஸ்வதி ஆலயம்!

தன்பால் மனமுருகித் தாள் பணியும் அடியவர்க்கே
அன்பால் மனம் நிறைய அருள் பொழியும் வாணியன்னை
அம்பாள் புரி யென்னும் ஆதி கூத்தனூரின் கண்
பொன்போல் அமர்ந்துள்ளாள் புகலடைவோம் புறப்படுங்கள்
இச்சா சக்தி, கிரிய சக்தி, ஞான சக்தி என்று முப்பெரும் தேவியர், கொல்கத்தாவில் மலைமகளாகவும் (துர்கை), மும்பையில் அலைமகளாகவும் (ஸ்ரீ லக்ஷ்மி) (சரஸ்வதி), கோயில் கொண்டு அருளாசி வழங்கி வருவது தனிச்சிறப்பாகும். ஸ்ரீ சரஸ்வதி தேவிக்குத் தமிழகத்தில் கூத்தனூரில் தான் தனிக்கோயில் மைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூத்தனூர் திருத்தலம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. இத்தலம் “முக்கால அம்பாள்புரி” என்று அழைக்கப்பட்டதாகத் திலதைப்பது புராணம் கூறுகிறது.
ஸ்ரீ சரஸ்வதி தேவி இத்தலத்தில் கோயில் கொண்டிருப்பது மட்டுமின்றி அரிசொல் ஆறு (தற்போது அரசலாறு என்று மருவி அழைக்கப்படுகிறது) நதியிலும் கங்கை, யமுனையுடன் சேர்ந்து தட்சிணை திரிவேணி சங்கமமாகப் பரிணமிக்கிறாள் என்று பிரமாண்ட புராணத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.
பர்வதராஜன் புத்திரியாக அவதரித்து வளர்ந்து வந்த பார்வதிதேவியை மணம் முடிக்க வந்த பரமன், தமது சிரசில் இருந்த கங்கையை ஒரு பெண்ணாக உருமாற்றி, முன்பு கௌரிவனம், வில்வ வனம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த பாஸ்கர முனிவரிடம் ஒப்படைத்து, பெண் நதி நீரில் இறங்கி விடாமல் பார்த்துக் கொள்ளும்படியும் எச்சரித்துவிட்டுப் போகிறார். ஆசிரமத்தைப்படுத்த அரிசொல் ஆற்றில் ஒரு நாள் நீராடிக்கொண்டிருந்த முனிவர் மறதியாகப் பாத்திரம் எடுத்து வருமாறு பணிக்க, பாத்திரத்தோடு நதிக்கு வந்த கங்கை தன் பூர்வ குணம் காரணமாக நீராக மாறி ஆற்றில் கலந்துவிடுகிறாள். பிறகுதான் நீரில் கலந்தவள் கங்கையென்பதும் அவளைத் தன்னிடம் ஒப்படைத்தவர் இறைவன் என்பதும் முனிவருக்குத் தெரிய வருகிறது. அரிசொல் ஆற்றில் கங்கை சேர்ந்த இடம் ருத்ர கங்கை ஆயிற்று.
ஒரு சமயம் பிரம்மலோகத்தில் படைப்புக் கடவுளான பிரம்ம தேவருக்கும், கல்வி மற்றும் கலைமகளின் அரசியான சரஸ்வதி தேவிக்கும் வாதம் ஏற்பட்டு அதன் காரணமாக இருவரும் பூவுலகில் மானிடராக அவதரிக்க நேரிடுகிறது. பகுகாந்தன், சிரத்தை என்ற பெயர்களில் மானிடர்களாக அவதரித்து வாழ்ந்து வந்த காலத்தில் அவர்கள் தந்தை புண்ணிய கீர்த்தி சிரத்தைக்குத் திருமண ஏற்பாடு செய்கிறார். சிரத்தை இறைவனை மனம் கசிந்து வேண்ட, இறைவன் மனம் கசிந்து வேண்ட, இறைவன் அருளாசிப்படி கூத்தனூரில் ருத்ர கங்கையில் கங்கையோடு சரஸ்வதியும் ஒரு அம்சமாகியதுடன் அரிசொல் நதிக்கரையில் கோயில் கொள்கிறாள்.
பிரம்மனுக்குத் தனி ஆலயம், ஆலய பூஜை இல்லாத காரணத்தால் தர்ப்பணம் முதலிய அனைத்து பிதுர்கர்மாக்களிலும் பிரம்ம பூஜை விசேஷமாக இருக்கும் என்றும் இறைவன் அருளாசி வழங்க, பித்ரு காரியங்களில் பிரம்ம பூஜைக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது.
இப்போதும் இத்தலத்தில், அதாவது கோயில் பத்து கூத்தனூரில் துவங்கி ருத்ர கங்கை வரையிலான (சுமார் இரண்டரை கிலோ மீட்டர்) அரிசொல் ஆற்றங்கரையில் தர்ப்பணம், தானம் முதலிய பித்ரு கர்மங்கள் செய்வது மிகவும் விசேஷமாகக் கருதப்பட்டு வருகிறது. கிருஷ்ணாவதாரக் காலத்தில் பகவான் கிருஷ்ணரின் ஆக்ஞைப்படி யமுனை இத்தலத்தில் ருத்ர கங்கையில் கலந்து தன் மீது ஏற்பட்ட ஒரு பழியைப் போக்கிக் கொள்கிறாள்.
இவ்வாறு கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்றும் சங்கமமாகி இத்தலம் தட்சிணத் திரிவேணியானதாக பிரமாண்ட புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அம்பாள்புரி, ஹரிநாகேஸ்வரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்த இத்தலத்தை மாமன்னன் இரண்டாம் இராஜராஜன் தன் காலத்தில் அவைப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தருக்குப் பரிசாக வழங்கினான். அதனால் கூத்த + ஊர் = கூத்தனூர் என்றாயிற்று.
கூத்தனூர் ஸ்ரீ மஹா சரஸ்வதி அம்மன் ஆலயத்தின் விமான கோபுரத்தில் ஐந்து கலசங்கள் அமைக்கப்பட்டிருப்பது தனி விசேஷம். இங்கு ஸ்ரீ மாதா சரஸ்வதி ஞான தவம் பூண்டிருப்பதால் ஞானத்தின் இருப்பிடத்தை உலகுக்கு உணர்த்துவதாய் ஐந்து கலசங்கள் அமைந்துள்ளன என்று விளக்கம் அளித்தார் முத்துக் குருக்கள். கருவறையில் தேவி ஞானதவம் இயற்ற அர்த்த மண்டபத்துள் உற்சவ விக்கிரகங்கள் இடம் பெற்றுள்ளன.
நமது கண்ணையும், கருத்தையும் கவரும் நடராஜர் திருவுருவச் சிலையில் முயலகன் பக்கவாட்டில் இல்லாமல் நேர்முகமாக அமைக்கப்பட்டிருக்கிறான்.
மகாமண்டபத்தில் இடப்பக்கம் நின்ற திருக்கோலத்தில் நான்கு திருமுகங்களுடன் வேதம் ஓதும் பிரம்மாவைப் பார்க்கலாம். பிரம்மாவிற்கு நேராக பிரம்மபூரீஸ்வரர், விநாயகர், முருகக்கடவுள் சூழ கோயில் கொண்டிருக்கிறாள்.
இந்த மண்டபத்திற்கு வெளியே இடப்புறம் கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரின் உருவச்சிலை அமைத்திருக்கிறார்கள். எப்போதும் கம்பிக் கதவுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் ஒட்டக்கூத்தர் ஏதோ சிறைப்பட்டிருப்பது போல் காட்சியளிக்கிறார்.
கோயிலின் நுழைவிடத்தில் பலி பீடத்திற்கருகில் வலம்புரி விநாயகரின் அற்புதத் திருஉருவமும் காணப்படுகிறது.
தேவியின் வாகனமான ராஜஹம்ஸம் அன்னையை நோக்கி கம்பீரமாக நிற்கிறது. கோயிலைச் சுற்றி ஒரு பிராகாரம் மட்டும்தான் உள்ளது. பிராகாரத்தின் தென்மூலையில் நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருவறையில் ஸ்ரீ ஞானசரஸ்வதி நான்கு கைகளுடன் காட்சி தீகன்றாள். வலப்பக்கம் மேல் கையில் அட்சர மாலையும், கீழ்க்கையில் சின் முத்திரையோடும் அதேபோல் இடப்பக்கம் மேல் கையில் அமிர்த கலசமும், கீழ்க்கையில் புத்தகமும் வைத்துக் கொண்டு, வெண்ணிற ஆடை அணிந்து வெண்தாமரை மீது பத்மாசனத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள்.
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் பிரத்யட்ச தெய்வம் இந்த அன்னையே. தன் பக்தன் கம்பனுக்காக தேவி கிழங்குவிற்கும் ஆயாவாகவும், இடையர் பெண்ணாகவும் வந்து சங்கடங்கள் தீர்த்தாள் என்பார்கள்.
தன்பால் மனமுருகித் தாள் பணியும் அடியவர்க்கே
அன்பால் மனம் நிறைய அருள் பொழியும் வாணியன்னை
அம்பாள் புரி யென்னும் ஆதி கூத்தனூரின் கண்
பொன்போல் அமர்ந்துள்ளாள் புகலடைவோம் புறப்படுங்கள்
இச்சா சக்தி, கிரிய சக்தி, ஞான சக்தி என்று முப்பெரும் தேவியர், கொல்கத்தாவில் மலைமகளாகவும் (துர்கை), மும்பையில் அலைமகளாகவும் (ஸ்ரீ லக்ஷ்மி) (சரஸ்வதி), கோயில் கொண்டு அருளாசி வழங்கி வருவது தனிச்சிறப்பாகும். ஸ்ரீ சரஸ்வதி தேவிக்குத் தமிழகத்தில் கூத்தனூரில்தான் தனிக்கோயில் மைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கூத்தனூர் திருத்தலம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகில் அரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. இத்தலம் “முக்கால அம்பாள்புரி” என்று அழைக்கப்பட்டதாகத் திலதைப்பது புராணம் கூறுகிறது.
ஸ்ரீ சரஸ்வதி தேவி இத்தலத்தில் கோயில் கொண்டிருப்பது மட்டுமின்றி அரிசொல் ஆறு (தற்போது அரசலாறு என்று மருவி அழைக்கப்படுகிறது) நதியிலும் கங்கை, யமுனையுடன் சேர்ந்து தட்சிணை திரிவேணி சங்கமமாகப் பரிணமிக்கிறாள் என்று பிரமாண்ட புராணத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.
பர்வதராஜன் புத்திரியாக அவதரித்து வளர்ந்து வந்த பார்வதிதேவியை மணம் முடிக்க வந்த பரமன், தமது சிரசில் இருந்த கங்கையை ஒரு பெண்ணாக உருமாற்றி, முன்பு கௌரிவனம், வில்வ வனம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் தவம் செய்து கொண்டிருந்த பாஸ்கர முனிவரிடம் ஒப்படைத்து, பெண் நதி நீரில் இறங்கி விடாமல் பார்த்துக் கொள்ளும்படியும் எச்சரித்துவிட்டுப் போகிறார். ஆசிரமத்தைப்படுத்த அரிசொல் ஆற்றில் ஒரு நாள் நீராடிக்கொண்டிருந்த முனிவர் மறதியாகப் பாத்திரம் எடுத்து வருமாறு பணிக்க, பாத்திரத்தோடு நதிக்கு வந்த கங்கை தன் பூர்வ குணம் காரணமாக நீராக மாறி ஆற்றில் கலந்துவிடுகிறாள். பிறகுதான் நீரில் கலந்தவள் கங்கையென்பதும் அவளைத் தன்னிடம் ஒப்படைத்தவர் இறைவன் என்பதும் முனிவருக்குத் தெரிய வருகிறது. அரிசொல் ஆற்றில் கங்கை சேர்ந்த இடம் ருத்ர கங்கை ஆயிற்று.
ஒரு சமயம் பிரம்மலோகத்தில் படைப்புக் கடவுளான பிரம்ம தேவருக்கும், கல்வி மற்றும் கலைமகளின் அரசியான சரஸ்வதி தேவிக்கும் வாதம் ஏற்பட்டு அதன் காரணமாக இருவரும் பூவுலகில் மானிடராக அவதரிக்க நேரிடுகிறது. பகுகாந்தன், சிரத்தை என்ற பெயர்களில் மானிடர்களாக அவதரித்து வாழ்ந்து வந்த காலத்தில் அவர்கள் தந்தை புண்ணிய கீர்த்தி சிரத்தைக்குத் திருமண ஏற்பாடு செய்கிறார். சிரத்தை இறைவனை மனம் கசிந்து வேண்ட, இறைவன் மனம் கசிந்து வேண்ட, இறைவன் அருளாசிப்படி கூத்தனூரில் ருத்ர கங்கையில் கங்கையோடு சரஸ்வதியும் ஒரு அம்சமாகியதுடன் அரிசொல் நதிக்கரையில் கோயில் கொள்கிறாள்.
பிரம்மனுக்குத் தனி ஆலயம், ஆலய பூஜை இல்லாத காரணத்தால் தர்ப்பணம் முதலிய அனைத்து பிதுர்கர்மாக்களிலும் பிரம்ம பூஜை விசேஷமாக இருக்கும் என்றும் இறைவன் அருளாசி வழங்க, பித்ரு காரியங்களில் பிரம்ம பூஜைக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது.
இப்போதும் இத்தலத்தில், அதாவது கோயில் பத்து கூத்தனூரில் துவங்கி ருத்ர கங்கை வரையிலான (சுமார் இரண்டரை கிலோ மீட்டர்) அரிசொல் ஆற்றங்கரையில் தர்ப்பணம், தானம் முதலிய பித்ரு கர்மங்கள் செய்வது மிகவும் விசேஷமாகக் கருதப்பட்டு வருகிறது. கிருஷ்ணாவதாரக் காலத்தில் பகவான் கிருஷ்ணரின் ஆக்ஞைப்படி யமுனை இத்தலத்தில் ருத்ர கங்கையில் கலந்து தன் மீது ஏற்பட்ட ஒரு பழியைப் போக்கிக் கொள்கிறாள்.
இவ்வாறு கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்றும் சங்கமமாகி இத்தலம் தட்சிணத் திரிவேணியானதாக பிரமாண்ட புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அம்பாள்புரி, ஹரிநாகேஸ்வரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டு வந்த இத்தலத்தை மாமன்னன் இரண்டாம் இராஜராஜன் தன் காலத்தில் அவைப் புலவராக விளங்கிய ஒட்டக்கூத்தருக்குப் பரிசாக வழங்கினான். அதனால் கூத்த + ஊர் = கூத்தனூர் என்றாயிற்று.
கூத்தனூர் ஸ்ரீ மஹா சரஸ்வதி அம்மன் ஆலயத்தின் விமான கோபுரத்தில் ஐந்து கலசங்கள் அமைக்கப்பட்டிருப்பது தனி விசேஷம். இங்கு ஸ்ரீ மாதா சரஸ்வதி ஞான தவம் பூண்டிருப்பதால் ஞானத்தின் இருப்பிடத்தை உலகுக்கு உணர்த்துவதாய் ஐந்து கலசங்கள் அமைந்துள்ளன என்று விளக்கம் அளித்தார் முத்துக் குருக்கள். கருவறையில் தேவி ஞானதவம் இயற்ற அர்த்த மண்டபத்துள் உற்சவ விக்கிரகங்கள் இடம் பெற்றுள்ளன.
நமது கண்ணையும், கருத்தையும் கவரும் நடராஜர் திருவுருவச் சிலையில் முயலகன் பக்கவாட்டில் இல்லாமல் நேர்முகமாக அமைக்கப்பட்டிருக்கிறான்.
மகாமண்டபத்தில் இடப்பக்கம் நின்ற திருக்கோலத்தில் நான்கு திருமுகங்களுடன் வேதம் ஓதும் பிரம்மாவைப் பார்க்கலாம். பிரம்மாவிற்கு நேராக பிரம்மபூரீஸ்வரர், விநாயகர், முருகக்கடவுள் சூழ கோயில் கொண்டிருக்கிறாள்.
இந்த மண்டபத்திற்கு வெளியே இடப்புறம் கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரின் உருவச்சிலை அமைத்திருக்கிறார்கள். எப்போதும் கம்பிக் கதவுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் ஒட்டக்கூத்தர் ஏதோ சிறைப்பட்டிருப்பது போல் காட்சியளிக்கிறார்.
கோயிலின் நுழைவிடத்தில் பலி பீடத்திற்கருகில் வலம்புரி விநாயகரின் அற்புதத் திருஉருவமும் காணப்படுகிறது.
தேவியின் வாகனமான ராஜஹம்ஸம் அன்னையை நோக்கி கம்பீரமாக நிற்கிறது. கோயிலைச் சுற்றி ஒரு பிராகாரம் மட்டும்தான் உள்ளது. பிராகாரத்தின் தென்மூலையில் நர்த்தன விநாயகர் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருவறையில் ஸ்ரீ ஞானசரஸ்வதி நான்கு கைகளுடன் காட்சி தீகன்றாள். வலப்பக்கம் மேல் கையில் அட்சர மாலையும், கீழ்க்கையில் சின் முத்திரையோடும் அதேபோல் இடப்பக்கம் மேல் கையில் அமிர்த கலசமும், கீழ்க்கையில் புத்தகமும் வைத்துக் கொண்டு, வெண்ணிற ஆடை அணிந்து வெண்தாமரை மீது பத்மாசனத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள்.
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் பிரத்யட்ச தெய்வம் இந்த அன்னையே. தன் பக்தன் கம்பனுக்காக தேவி கிழங்குவிற்கும் ஆயாவாகவும், இடையர் பெண்ணாகவும் வந்து சங்கடங்கள் தீர்த்தாள் என்பார்கள்.
சரஸ்வதி பூஜையன்று பக்தர்கள் தேவிக்குத் தாங்களே பாதபூஜை செய்யலாம். அதற்கு வசதியாகக் கருவறை தேவியின் பாதத்திலிருந்து புடவை நீளமாக வெளியே எடுத்து வரப்பட்டு பக்தர்கள் அதில் பூஜை செய்வது கண் கொள்ளாக் காட்சியாகும். விஜயதசமியன்று கலைஞர்களும், வித்துவான்களும் இங்கு வந்து கலை நிகழ்ச்சி நடத்தி தேவிக்கு ஆராதனை செய்வது வழக்கம்.
மாணவ-மாணவிகள் தேர்வுக்குச் செல்லும் முன் தங்கள் எழுதுகருவிகளைத் தேவியின் முன் சமர்ப்பித்து பயபக்தியுடன் தேவியை வழிபட்டுச் செல்வது வாடிக்கை. குடும்பத்தோடு கூத்தனூர் சென்று ஞான சரஸ்வதிக்குத் தேனாபிஷேகம் செய்து வழிபடுங்கள். கல்வி கேள்விகளிலும், கலை ஆற்றல்களிலும் பாராட்டும்படியான முன்னேற்றம் கிடைப்பது உறுதி.
- K. குருமூர்த்தி
Featured Video
மாத பலன்கள்
Newsletter Sign Up
Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!