குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - கன்னி

குரு பெயர்ச்சி பலன்கள் - 2025 - கன்னி

.கண்ணியமாக எந்த செயலை செய்து முடிக்கும் கன்னி ராசி வாசகர்களே!
 
இதுவரை உங்களின் ராசியை பார்த்து வந்த குரு இனிவரும் 11-05-2025 முதல் உங்களின் தனஸ்தானத்தையும், சுகஸ்தானத்தையும், சத்ருஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் வாழ்வில் பொன்னான நாளில் அமையும்.
 
உங்களின் தொழில்ஸ்தானத்தில் குரு அமர்ந்து தனஸ்தானத்தை பார்வை இடுவது பொதுவாக குரு பத்தில் அமர்ந்தால் பதவி பறிபோகும், தொழில் கெடும் என்று சொல்வார்கள். உங்களின் ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதியும், ராசிநாதனும் ஒருவரே என்பதால் குரு பாதி பலன்களை குறைத்து கொள்வார் தொழிலில் லாபமும் நஷ்டமும் கலந்தே உண்டாகும். எளிமையான வாழ்க்கையை விரும்பும் உங்களுக்கு பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீர்கள்.
 
சுகஸ்தானத்தை குரு பார்ப்பதால் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். கடனில் இருந்து மீள்வீர்கள். உடல்நலனில் இருந்த குறைபாடுகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். காலத்தையும், நேரத்தையும் வீண் செய்யாமல் காரியத்தில் இறங்கி வேலை பார்ப்பீர்கள். தேவைகளை உணர்ந்து அதற்கு தகுந்தபடி நல்ல பலன்களை பெறுவீர்கள். 08.06.2025 முதல் 08-07-2025 வரை சற்று கவனமாக இருப்பது நல்லது.
 
உங்களின் சத்ரு ஸ்தானத்தில் சனியுடன் ராகு இணைவு பெறுவதும் குரு பார்வை இருவருக்கும் அமைவதால் குரு பார்வையால் மறைமுகமான சில எதிரிகள் உங்களின் செயல்களை தகுந்த வந்த நிலை மாறி உங்களுக்கு சாதகமாக செயல்பாடுகள் அமையும். சிலருக்கு வாங்கிய கடன் தீரும். வரவேண்டிய இடத்தில் பணம் வந்து சேரும். நினைத்த காரியம் கைகூடும்.
 
08-10-2025 முதல் குரு கடகத்தில் அதிசாரமாக அமர்வது உங்களின் முயற்சிகளுக்கு நல்ல வழி கிடைக்கும். கூட்டுத் தொழில் சிறப்பாக அமையும். வெளிநாடு வேலை தொடர்புகள் உண்டாகும்.
 
பரிகாரங்கள்:
 
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைகடலை மாலை இட்டு தயிர் அன்னம் நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ள சிறப்பான நற்பலன்கள் உண்டாகும்.