ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் - 2026 - மிதுனம்

வாழ்க்கையை மேம்படுத்த தன்னை தயார்படுத்திக்கொள்ளும் மிதுன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஸ்தானத்தில் அமர்ந்து அட்டம ஸ்தானத்தை பார்வை இடுவது கொடுத்த வாக்குறுதியை சீக்கிரம் நிறைவேற்றி தருவீர்கள். எதிலும் உங்களின் செயல்கள் நீங்களே ஆச்சரியபடும்படியாக அமையும். தொழில் ஸ்தானத்தையும் குரு பார்வை இருப்பதால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். உழைப்பிற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். எப்பொழுது சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். பணபுழக்கம் நன்றாக இருக்கும்.
 
ராசிநாதன் புதனுடன் குருவும், சூரியனும் இணைவு பெற்று இருப்பது ஆதித்ய யோகமும் குரு ஆதித்ய யோகமும் உண்டாகும். பொருளாதாரம் சார்ந்த தொழில் செய்து வரும் ஆடிட்டராக/ பட்டயக்கணக்காளராக செயல்படுபவர்கள் நல்ல வருமானத்தை பெறுவீர்கள். முதலீடு இல்லாத தொழில் செய்து வருபவருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். அரசியலில் நன்மதிப்பையும் வளர்ச்சியும் பெறுவீர்கள். சிலர் தனக்கு பிடித்த தொழிலை செய்வீர்கள். பாக்கியாதிபதி சனி கர்ம தானத்தில் அமர தர்ம கர்மாதிபதி யோகம் பெறுவீர்கள். இதனால் இம்மாதம் முழுவதும் சிறப்பாக இருப்பீர்கள். கலைத்துறையினருக்கு தன் சொந்த முயற்சி மூலம் நன்மை அடைவீர்கள். அரங்கேற்ற நிகழ்ச்சியில் அனுபவமிக்க கலைஞர்களின் பாராட்டை பெறுவீர்கள். கடன் பட்டவரை அதிக வட்டி கட்டுவதை மாற்றி, கூடுதல் வட்டியை குறைத்து, குறைந்த வட்டியை கட்டும்படி சில உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். 
 
வீடு கட்டும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள சிலருக்கு சந்தர்ப்பம் அமையும். மூன்றாமிட கேது ராசியை பார்ப்பது தொடர்ந்து நல்ல முன்னேற்றம் அமையும் படி வாழ்க்கை சூழ்நிலை அமையும். தனாதிபதியான சந்திரன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்வது பணதட்டு பாடுகளின்றி கூடுதல் பணி செய்து வருமானம் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பை பெறுவீர்கள். லாபாதிபதி செவ்வாய் விரயத்தில் மறைவது வந்த வருமானம் சில நேரம் உடனே செலவாகும் என்பதால் உங்களின் வங்கி கணக்கை ஆய்வு செய்து அதற்கு தகுந்தபடி பராமரிப்பது நல்லது. தொழில் ஸ்தானத்தில் சனி அமர்ந்து நான்காமிடத்தை பார்வை இடுவது புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பை பெறுவீர்கள். மிருகங்களை வளர்க்க ஆசைபடுவீர்கள். இனி பாக்கிய ஸ்தானத்தில் இருக்கும் ராகு தொழிலிலும் உத்தியோகத்திலும் முன்னேற்றம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிக் கொள்ள சந்தர்ப்பம் அமையும். விவசாய பொருட்களின் விளைச்சல் மலிந்து, பொருட்கள் விலை குறையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:  
 
பச்சை, மஞ்சள், சிவப்பு.
 
அதிர்ஷ்ட திசைகள்: 
 
மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு,
 
அதிர்ஷ்ட கிழமைகள்: 
 
புதன், வியாழன், சனி.
 
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
 
25-08-2026 செவ்வாய் அதிகாலை 04.55 முதல் 27-08-2026 வியாழன் மாலை 03.04 மணி வரை.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரை வணங்கி சிவப்பு பூ சாற்றி, நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரவும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்மன் வழிபாடு செய்வது உங்களின் லட்சியத்திற்கு வரும். தடையை நீக்கி சுபிட்சம் பெறுவீர்கள்.