சூரியன் - செவ்வாய் சேர்க்கையால் ஏற்படும் களத்திர தோஷம் நீங்கிட வீரபத்திரர் வழிபாடு!

சூரியன் - செவ்வாய் சேர்க்கையால் ஏற்படும் களத்திர தோஷம் நீங்கிட வீரபத்திரர் வழிபாடு!

ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் இணைந்து இருந்தால் தொழில் ரீதியாக கஷ்டங்களும், தொழிலில் ஸ்திரமற்ற தன்மையும், அலைச்சலும், எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் எடுக்க முடியாத நிலை ஏற்படும்.

 
ஜாதக அலங்கார ஆசிரியர் பெண்கள் ஜாதகத்தில் 12 இராசிகளில் சூரியனம், செவ்வாயும் எந்த இராசியில் சேர்ந்திருந்தாலும், வாலிப வயதில் விதவையாகும் நிலை ஏற்படும் எனக் கூறியுள்ளார். மாங்கல்யம் பறிபோகும் நிலை பிரிவு விவாகரத்து போன்றிநலை கூட ஏற்படலாம். திருமணத் தடை ஏற்படலாம். சூரியன் செவ்வாய் சேர்ந்து நிற்கும் ஸ்தானம் பாதிக்கப்படலாம்.
 
இது போன்ற ஜாதக அமைப்புக் கொண்டவர்கள். தட்சனின் கர்வத்தை அடக்க சிவபெருமானால் படைக்கப்பட்ட சிவனின் அம்சமான வீரபத்திரர் சன்னதியில் செவ்வாய்க்கிழமை நெய் தீபம் ஏற்றி வெற்றிலை மாலை சாற்றி, செவ்வரவளி பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட பாதிப்பு நீங்கும். நாகப்பட்டினம், கும்பகோணம், தாராசுரம் முதலிய இடங்களில் வீரபத்திரரருக்குத்தனிக் கோயில்கள் அமைந்துள்ளன. கும்பகோணம், ஆவுடையார் கோயில், தாரமங்கலாம், தாடிக் கொம்பு, மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் கோயில் தூண்களில் அகோர வீரபத்திரர், சில இடங்களில் அக்னி வீரபத்திரர் என்று ஓர் உருவ வேறுபாட்டுடன் விளங்குகிறார். திருவானைக்காவல் ஆலய மேற்கே மேல விபூதிப் பிரகாரத்தில் சாந்த வீரபத்திரராகக் காட்சி தருகிறார். வீரபத்திரரை மன ஈடுபாட்டுடன் விளங்கினால், இத்தகைய ஜாதகர்களின் துன்பமயமான பலன்களின் தாக்கம் வெகுவாகக் குறைந்திருக்கும். 
 
- K. துரைராஜ்