ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் - 2026 - கடகம்
சிந்தித்து செயல்படும் திறமை வாய்ந்த கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் அட்டம ஸ்தானத்தில் தனஸ்தானத்தை பார்ப்பது இன்னும் சிறப்பான பலனை பெறுவீர்கள். ராசியில் குரு உச்சம் பெற்று பார்க்குமிடங்கள் சிறப்பான பலனை பெற்றுத் தரும். உங்களின் ராசியில் அமர்ந்த சூரியனும், புதனும் அறிவாற்றல் பெறும் வகையில் பல சாதனைகளை ஏற்படுத்தி கொடுப்பார்கள். நினைத்த காரியத்தை உடனே செய்து கொடுக்கும் வலிமையையும் பெறுவீர்கள். அரசியலில் பெரிய மாற்றத்தை கொடுப்பீர்கள்.
உங்களின் ராசிக்கு குரு உச்சம் பெறுவது ஆறாமிடமும் எதிரிகளிடம் எப்படி பேசினால் சரியாக இருக்கும் என்று நன்கு தீர்மானித்த பின்பு செயல்படுவீர்கள். பாக்கியாபதி குரு உச்சம் பெற அனைத்து பாக்கியங்களையும் முழுமையாக பெறுவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சகடயோகமாக இருந்து ஒரு இடத்தில் இல்லாமல் பல வகையில் விரைவாக செயல்பட்டு காரியங்களை துரிதபடுத்துவீர்கள். பாராத முகமாக இருந்தவர்கள் தேடி வருவார்கள்.
அரசியல்வாதிகள் ஆதரவுடன் இருப்பார்கள். சூரியனும், புதனும் ராசியில் இணைவது அதிகார பலம் பெறுவீர்கள். வேலை இல்லாதவருக்கு நல்ல வேலை கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதற்கு துணிந்து செயல்படுவீர்கள். முக்கிய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். படிப்பில் மேலும் படிக்கவே ஆசைபடுவீர்கள். இடம்விட்டு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை சிலருக்கு உண்டாகும்.
லாபாதிபதி சுக்கிரன் தனஸ்தானத்தில் அமர்ந்து ராசிநாதன் பார்வையிடுவது மிக சிறப்பு கிடைக்க வேண்டிய பலாபலன்களை பெறும் நல்ல வாய்ப்பை பெறுவீர்கள். கேது கிடைக்க கூடிய நல்ல பலன்களை தடுக்கும். முயற்சி செய்தாலும் அதில் பெரிதாக எந்த பாதிப்பை பெற மாட்டீர்கள். நினைத்தபடி காரியங்களை செய்து கொண்டே அடுத்த நிலைக்கு செல்லும் யோசனைகளை பெறுவீர்கள். எட்டாமிட ராகு கெடுபலன்களை தந்தாலும் ராசிநாதனின் அருள்பட்டு ராகு கேதுகளால் பாதிப்பு இல்லை அதே வேளையில் தாமதம் செய்யும் காரியம் உங்களை பலவீனப்படுத்தும்.
பாக்கிய ஸ்தானத்தில் சனியின் பார்வை மூன்றில் அமைய எடுக்கும் முயற்சிக்கு பக்கபலமாக செயல்கள் அமையும். சுய முயற்கியால் முன்னேற்றம் காண்பீர்கள். லாபாதிபதி வீட்டில் தொழில் ஸ்தானாதிபதி அமர்ந்த செய்யும் தொழிலில் வெற்றியையும், பொருளாதார வளத்தையும் பெறுவீர்கள். சொந்தமாக தொழில் துவங்க இது நல்ல காலமாக அமையும். உடல் நலன் சற்று கவனிக்க வேண்டி வந்தாலும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். மூத்த சகோதரின் மூலம் சில காரியம் சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், ஆரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வியாழன்,
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
27-08-2026 வியாழன் மாலை 03.05 முதல் 29-08-2026 சனி இரவு 10.58 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் அம்மன் வழிபாடு ராகு காலத்தில் செய்து அரளி பூ வைத்து நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள தடைப்பட்ட சகல காரியம் செயல்பட துவங்கும். கொடுத்த வாக்குறுதியை முழுவதும் நிறைவேற்றுவீர்கள்.
















