2025 - 2026 ராகு / கேது பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

2025 - 2026 ராகு / கேது  பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

காலத்தையும், நேரத்தையும் அவதானித்து செயல்படும் மிதுன ராசி வாசகர்களே!
 
உங்களின் ராசிக்கு வரும் 26-04-2025 அன்று மாலை 04.20 மணிக்கு பாக்கியஸ்தானத்தில் ராகுவும், மூன்றாமிடத்தில் கேதுவும் அமர்ந்து பலன் தருகிறார்கள்.
 
இதுவரை சுகஸ்தானத்தில் இருந்து வந்த கேது இனி முயற்சி ஸ்தானத்தில் யோக கேதுவாக அமர்கிறார். இதனால் அவர்களின் அனைத்து வித முயற்சிகளும் வெற்றியை தரும். நல்ல நிலைகளில் எதிர்பார்த்து வந்த உங்களின் செயல்கள் மேலும் சிறப்பாக அமையும். எதையும் சாதிக்க வேண்டுமென்ற உங்களின் எண்ணம் மெருகூட்டும் வகையில் அமையும். எடுத்த காரியம் வெற்றியையும், நற்பலனையும் பெற்று தர உதவி செய்வார். அரசு சார்ந்த நல்ல காரியம் சிறப்பாக செயல்படதுவங்கும். பொது விடயங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். தனி திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். குருவின் பெயர்ச்சிக்கு பின்பு இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.
 
பாக்கியஸ்தானத்தில் ராகு அமர்ந்து லாபஸ்தானத்தையும், களத்திரஸ்தானத்தையும் பார்ப்பது கூட்டுத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குரு பெயர்ச்சிக்கு பின்பு ஆன்லைன் வர்த்தகம் சிறப்பாக அமையும். எதையும் முன் கூட்டியே யோசித்து செயல்படுவது அவசியம் என்பதால் சுற்று எச்சரிக்கையுடனும் அதே வேளையில் காற்றுள்ள போதே கற்றுக்கொள்வது நல்லது. பாக்கியஸ்தானத்தில் அமரும் கிரகங்கள் பெரும்பாலும் எந்த கெடுபலனும் தருவதில்லை என்றாலும் எதிலும் விவேகமுடன் செயல்படுவதன் மூலம் நல்ல ஆதாயமும் பெற முடியும். எதை சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தீர்களோ... அது உங்களுக்கு சாதகமாக அமையும். நல்ல காரியத்தை உடனே செய்து பலன் பெறுங்கள்.
 
பரிகாரங்கள்:
 
திங்கள் கிழமைகளில் மாலை வேளையில் சிவன் ஆலயம் சென்று சிவ தரிசனமும், பைரவர் தரிசனமும் செய்து தீபமேற்றி வணங்கி வர உங்களின் முயற்சியும் காரிய சித்தியும் கைகூடும்.