சர்வ தோஷப் பரிகாரத்தலமாய் திருப்பாம்புரம்!

சர்வ தோஷப் பரிகாரத்தலமாய் திருப்பாம்புரம்!

கைலாயத்தில் ஒரு முறை விநாயகர் சிவனை வழிபட்ட போது, அவர் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதான எண்ணி கர்வம் கொண்டது. அதனால் சினமுற்ற சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தியனைத்தும் இழக்க சாபமிட்டார். பின்பு அஷ்டமகா நாகங்களின் வேண்டுதலின் பேரில் மனமிரங்கிய இறைவன் பூலோகத்தில் “திருப்பாம்புரம்” தவத்தில் தன்னை வழிபட்டால், சாபம் தீரும் எனக் கூறினார்.

அவ்வாறே நாகங்களின் அரசனான ஆதிசேசன் மகாசிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் ஆலய எதிலுள்ள தீர்த்தத்தில் நீராடி இறைவனை ஆலம் விழுதால் தொடுக்கப்பட்ட அகத்திப் பூமாலை சூட்டி வழிபட்டு சாப விமோசனம் பெற்றார். எனவே, இத்தலம் ஸ்ரீ காளஹஸ்திக்கு சமமானது. பஞ்சலிங்க தலம். சர்வ தோசப் பரிகார ஸ்தலமும் ஆகும். 

சிறப்பு: 
இத்தலம் இராகுவும் கேதுவும் ஏக சரீரமாக ஈசனை இதயத்தில் வைத்து பூஜை செய்து சாப விமோசனம் பெற்ற ஸ்தலம். இவ்வுருவம் கற்சிலையாக உள்ளது. இந்த அமைப்பு வேறு ஆலயங்களில் காண இயலாத ஒன்று. இங்கு வந்து பரிகாரம் செய்ய கால சர்ப்ப தோசம் இராகு - கேதுதசை பாதிப்பு, சர்ப்ப தோசப் பாதிப்பு நீங்கும். பரிகாரம் செய்ய செவ்வாய், வெள்ளி ஞாயிறு இராகு காலம் உகந்தவை.

ஆலய சிறப்பு நேரம் காலை 07.00 மணி முதல் 12.00 மணி. மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி.

- K. துரைராஜ்