2023 - 2025 சனி பெயர்ச்சி சிறப்பு பலன்கள் - மகரம்
மன துணிச்சலுடன் எதையும் செயல்படுத்தி வளம் பெறும் மகர ராசி வாசகர்களே!
இதுவரை ஜென்ம சனியாக இருந்த ராசிநாதன் சனி பகவான், இனி பாத சனியாக அமர்கிறார். விரைய சனியில் பல்வேறு பண இழப்பு, உடல் நல குறைவுகளால் பாதிப்பைப் பெற்று, ஜென்ம சனியில் எதையும் செயல்படுத்த முடியாமல் தவித்து வந்த உங்களுக்கு, இனி பாத சனி கடைசியில் நல்ல தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் பதவியும், இடமாற்றமும் உண்டாகும். குடும்ப ஒற்றுமை விளங்கும். அரசியலில் புதிய நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுய செல்வாக்கு மேலும் உயரும்.
குடும்பத்தில் அடிக்கடி சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இதுவரை புதிய அனுபவங்களைப் பெற்ற உங்களுக்கு மென்மேலும் நல்ல விடயங்களை செயல்படுத்தும் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பும். அவர்களின் உதவியும் உங்களுக்கு கிடைக்கும். மருத்துவ துறையில் வளமான வளர்ச்சியை பெறுவீர்கள். காலத்தை அறிந்து அதற்கு தகுந்தபடி உங்களின் செயல்களை அமைத்துக் கொள்வீர்கள். குடும்ப நலன் கருதி பல விடயங்களில் விட்டுக் கொடுத்து வளம் பெறுவீர்கள்.
முடியாது என்று இருந்த காரியத்தைகூட முடியும் என்று நிருபித்துக் காட்டுவீர்கள். பல வேறு துறைகளில் சிறந்து விளங்குவீர்கள். கலைத்துறையினர் நல்ல பிரபலமாகி விடுவார்கள். அட்டம ஸ்தானத்தை சனி பார்ப்பதால் உடல் நலனின் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடல் நல குறைபாடுகளால் இருந்து வந்தவர்களுக்கு முறையான மருத்துவத்தால் நல்ல மாற்றம் உண்டாகும். பொருளாதாரம் மேம்படும். பெண்களுக்கு நல்ல வரன் அமையப் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். பெண்களுக்கு வளமான வாழ்வுகள் அமைய, அரசாங்க உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். விளையாட்டு துறையில் வீட்டுக்கும், நாட்டுக்கு நற்பெயரைத் தேடி தருவீர்கள்.
பரிகாரம்:
சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவர் வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, அரளி பூ மாலை, எள் கலந்த அன்னம் நைவேத்தியம் செய்து வர, சகல காரியமும் ஜெயம் உண்டாகும்.

















