தியானம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்!!
முதலில் நாம் தியானம் செய்வதற்கு சரியான நேரத்தை ஒதுக்க வேண்டும். பெரும்பாலும் அதிகாலை நேரமே தியானத்திற்கு உகந்த நேரமாகும். அப்போதுதான் இந்த உலகமே அமைதியாக இருக்கும்! அமைதியான தென்றல் அப்போது வீசுவதும் இதமாக இருக்கும். காலையில் முடியாதவர்கள், மாலை அல்லது இரவு உறங்கப் போகும் முன் தியானம் செய்யலாம். தினமும் ஒரே நேரத்தில் தியானத்தை மேற்கொள்வது நல்லது.
அடுத்து, தியானம் செய்வதற்கான பொருத்தமான இடத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அமைதியான சூழ்நிலையில் தியானத்திற்கான வசதியுடன் அவ்விடம் இருக்க வேண்டும். பெட்ரூம், தோட்டம், மொட்டை மாடி உள்ளிட்ட இடங்கள் சிறந்தவை. பொதுவாக, சத்தம் குறைந்த இடமாக இருக்க வேண்டும்.
தியானம் செய்யும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும். மூக்கு முட்ட சாப்பிட்டு விட்டு தியானம் செய்தல் சரிப்படாது; சில சமயம் தூங்கி விடுவீர்கள்! அப்படியே சாப்பிட்டாலும், இரண்டு மணி நேரம் கழித்து தியானம் செய்யலாம்.