வைகாசி மாதம் ரிஷப ராசிகாரர்களுக்கான பலன்கள்!

ஹேவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 15.05.2017 முதல் 14.06.2017 வரை!
விடாபிடியாக எதையும் சாதித்துக் காட்டும் ரிசப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும் சனி பார்வை பெறுவதும் எடுத்த காரியத்தில் வெற்றியும் தொழிலில் ஓரளவு வளர்ச்சியும் பெறுவீர்கள். லாப ஸ்தானத்தில் ராசி நாதன் உச்சம் பெறுவது பணபுழக்கம் இருந்து வரும்.
பணியாளர்களுக்கு
பணியின் முன்பைவிட சிறப்பாக செயல்படுவீர்கள். உயர் அதி காரிகளின் அன்பை பெறுவீர்கள். எதையும் பலமுறை யோசனை செய்த பின்பு செயல்படுத்துவீர்கள். தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு உறுதுணையாக இருப்பீர்கள். எதை செய்தாலும் நமக்கு என்ன பலன் என்பதை அறிந்த பின்பே அதில் ஈடுபாடு கொள்வீர்கள்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு
பொது வாழ்வில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் நலனில் கவனம் செலுத்தி வேண்டிய உதவிகளை செய்து தருவீர்கள். நிறைந்த வளமும் செயல்பாடுகளின் மேன்மையும் உங்களின் வளர்ச்சிக்கும் புகழுக்கும் உறுதுணையாக அமையும்.
வியாபாரிகளுக்கு
தொழிலில் வெளிநாட்டு தொழிலதிபர்களின் நட்பு உங்களுக்கு உதவியாக அமையும். வரவுக்கு மீறிய செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்வீர்கள். பொது சொத்துகளில் உரிமை கொண்டாடுவீர்கள். அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு பண்டங்களின் விற்பனையின் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.
கலைஞர்களுக்கு
கலைதுறையினர் தொடர்ந்து நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். தனித்திறமையுடன் எல்லோரிடமும் ஆதரவுகளை பெறுவீர்கள். சினிமா தொலைகாட்சி நடிகர்களுக்கு தொடர் வாய்ப்பு அமையும். குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். கலைஞர்களின் மேன்மைக்கு உதவியாக இருப்பீர்கள்.
பெண்களுக்கு
பெண்களின் ஒற்றுமையும், உரிமைகளையும் நிலைக்க உதவிகளை செய்வீர்கள். பொது விடயங்களில் ஆர்வம் கொண்டு செயல்படுவீர்கள். பெண்களின் வேலை வாய்ப்புக்கு விரைவில் வாய்ப்பு அமையும்.
மாணவர்களுக்கு
கல்வியில் கவனம் செலுத்துவீர்கள். விஞ்ஞானம் மோட்டார் மெக்கானிசம், விமான கல்விகளினால் சிறந்து விளங்குவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவு பயனுள்ளதாக அமையும்.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்
10.06.2017 சனி அதிகாலை 05.52 முதல் 12.06.2017 திங்கள் மாலை 04.57 மணி வரை
நட்சத்திர பலன்கள்
கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள்
குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். தொழிலில் நல்ல வளர்ச்சியை காண்பீர்கள்.
ரோஹிணி 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்
எந்த கருத்தாக இருந்தாலும் செயலாக இருந்தாலும் அதில் முழுமையான ஈடுபாடு கொள்வீர்கள். நினைத்த காரியத்தை உடனே நடத்தி கொடுப்பீர்கள்.
மிருகசீரிடம் 1, 2 ஆம் பாதங்கள்
வாகனம் வாங்கும் வாய்ப்பு அமையும். சிலர் குல தெய்வ வழிபாடுகளை செய்வது நல்ல பலனை தரும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்: பழுத்த வெண்மை, நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடமேற்கு
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, திங்கள், வியாழன்
இம்மாதம் நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் ராகு காலத்தில் அம்மன் வழிபாடு, மாரியம்மன் வழிபாடு செய்து வருவது தொழிலிலும் செயலிலும் இடையூறுகள் இன்றி சிறப்பாக இருக்கும்.