பைரவர் வழிபாடும் தோஷ நிவர்த்தியும்!
ஏழரையாண்டுச்சனி. அஷ்டமத்துச்சனி. சனீசுவரனால் ஏற்படும் கஷ்டங்கள, மக்கள் பயப்படக்4டிய கிரக நாயகர்களின் முன்னணியில் இருப்பவர் சனிபகவான்.
சூரியன் மகனான சனிசுவரன் தன்னுடைய அண்ணன் யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு கௌரவக் குறைவை அடைந்தார். அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். பைரவர் சனீசுவரனுக்கு குருவாக விளங்கி அருள் பாலிக்கின்றார். பைரவ பக்தர்களை கொடுமைப்படுத்துவதில் விருப்பமில்லாதவர் சனிபகவான். விதிப்பயன் காரணமாக கடுமையை காட்டும் பொழுது பைரவர் அருள்புரிந்து காப்பாற்றி விடுவார். பைரவருக்குச் செய்ய வேண்டிய பூசையின்மூலம் உரிய பரிகாரங்களைச் செய்து சனியின் கொடூரப் பிடியிலிருந்து விடுபடலாம்.
அர்த்தாஷ்டம சனி தரும் தொல்லைகள் விலக
வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு வெண்தாமரை மலர் மாலை அணிவித்து புனுகு பூசி சாம்பல் பூசணி (வெண்பூசனி) சாம்பார் கலந்த சாதம், அதிரசம் படையலிட்டு அர்ச்சனை செய்துவந்தால் அர்த்தாஷ்டம சனியால் ஏற்படக் கூடிய தொல்லைகள் விலகும்.
அஷ்டமச் சனியின் கொடுமை விடுபட
சனிக்கிழமை நாளில் இரவு 7.30 மணியலிருந்து 9.00 மணிக்குள் பைரவருக்கு கறுப்ப பட்டு அணிவித்து வடைமாலை அணிவித்து புனுகு பூசி கறிவேப்பிலை சாதம் படையலிட்டு இரும்பு அகல்விளக்கில் நல்லெண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்து வந்தால் அஷ்டமச் சனியால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.
ஏழரையாண்டுச் சனியின் ஆதிக்கம் குறைய
ராசிக்கு 12-ஆம் இடத்தில் இரண்டரை வருடம், ராசியில் இரண்டரை வருடம் என ஏழரையாண்டுகள் தன் கட்டுப்பாட்டிற்குள் மனிதனை சிக்கவைத்து ஆட்டிப் படைக்கும் சனிபகவான் பிடியிலிருந்ததப்பிக்க ஊர்விட்டு ஊர்போவது, மனையாள் மதிக்காதது. பிள்ளைகள் சொன்னபடி கேட்காதது. தொழில் நஷ்டம், பணக்கஷ்டம், அவமானம் போன்ற அனைத்து இன்னல்களிலிருந்தும் தப்பிக்க சனிக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை அணவித்து புனுகு பூசி கறிவேப்பிலை சாதம், பாகற்காய் கூட்ட, பால் பாயசம் படையலிட்டு, இரும்பு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்துவர ஏழரைச் சனியின் பிடியிலிருந்து விடுபடலாம்.
ராசிக்கு 12-லில் சனியிருக்கும் போது தேங்காயில் நெய் தீபம் ஏற்றவும். ராசியில் சனி இருக்கும் போத எலுமிச்சை பழத்தில் நல்லெண்ணை தீபம் ஏற்றவும். ராசிக்கு 2-ல் சனி இருக்கும் போது சாம்பல் பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றவும்.
ஒவ்வொரு கிழமையன்றும் பைரவரை வழிபடுவதால் ஏற்படும் தோஷ நிவர்த்திகள்.
திங்கட்கிழமை
திங்கட்கிழமை - வில்வ அர்ச்சனை செய்திட சிவனருள் கிட்டும் திங்கட்கிழமை அல்லது சங்கட ஹர சதுர்த்தியன்று பைரவருக்கு மஞ்சள் நிற பூக்களாலான மலர் மாலை அணிவித்து ஜவ்வரிசிப் பாயசம் அன்னப்படையல் இட்டு அர்ச்சிக்க தாயாரின் உடல் நலனில் முன்னேற்றம் உண்டாகும்.
செவ்வாய் கிழமை
மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் இழந்த பொருளை திரும்பப் பெறலாம்.
செவ்வாய்க் கிழமை இராகு வேளையில் (மலை 3 to 4.30) பைரவருக்குச் செவ்வரளி மாலை சாத்தி துவரம் பருப்புப் பொடி சாதம் செம்மாதுளம்பழம் படையலிட்டால் சகோதரப் பகை நீங்கி ஒற்றுமை நிலைக்கும்.
எதிர்ப்புகள் அகலவும், வெற்றிகள் குவியவும்
செவ்வாய்க கிழமை நாளில் பைரவருக்கு சிவப்பு குங்குமம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து, எலுமிச்சம் பழமாலை அணிவித்து புனுகு பூசி எலுமிச்ச பழத்தில் நெய் தீபமிட்டு வேக வைத்த பீட்ரூட் கலந்த சாதம், மாதுளம் பழம், ஜிலேபி படையலிட்டு அர்ச்சனை செய்து வர எதிர்ப்புக்கள் அகன்று வெற்றிகள் குவியும்.
புதன்கிழமை
மாலை பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை சாத்தி புனுகு பூசி பாசிப்பருப்புப் பொடி கலந்த அன்னம் பாசிப் பருப்புப் பாயசம் படையல் செய்ய மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவர்.
புதன்கிழமை காலை 10.30 முதல் 12க்குள் பைரவருக்குச் சந்தன காப்பு செய்து மரிக்கொழுந்து மாலை சூட்டி பாசிப்பயறு பாயசம், கொய்யாப்பழம், பாசிப்பருப்புப் பொடி சாதம் படைக்க வியாபாரத்தில் அமோக வளர்ச்சி உண்டாகும்.
புதன்கிழமை நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் பூமி லாபம் கிட்டும்.
வியாழக்கிழமை
வியாழக்கிழமை நாளில் காலை 7.30 மணிக்குள் பைரவருக்கு சந்தனக் காப்பு செய்து மூடி மந்திரவித்து எனப்படும். முந்திரியால் மாலை அணிவித்து புனுகு பூசி முந்திரிப் பருப்பு, கொண்டைக் கடலை சுண்டல், அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து அன்னதானம் வழங்கினால், பைரவர் திருவருளால் விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும்.
சந்தான பாக்கியம் பெற
குழந்தை பாக்கியம் இல்லாத கணவன் மனைவியர் ஆறுதேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு சகிப்பு அரளியால் பைரவ சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரங்களில் வில்வ இலைகளினாலும், வாசனை மலர்களாலும், பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வறுமை நீங்கி, செல்வம் பெருகும்.
வெள்ளிக்கிழமை ராகு வேளையில் பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து, தாமரை மலர் மாலைசூட்டி அவல் கேசரி, பானகம், சர்க்கரை பொங்கல் படைத்து, அர்ச்சனை செய்தால் மனதிற்குப் பிடித்த வகையிலும் தடையின்றியும் திருமணம் கைகூடும்.
வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு சந்தனகாப்பு செய்து புனுகு பூசி, ரோஜா மாலை சூட்டி, வெள்ளி ஆபரணங்களை அணிவித்த. சர்க்கரை பொங்கல் படைத்து, அர்ச்சனை செய்தால் கலைத்துறையில் சாதனை படைக்கலாம்.
சனிக்கிழமை
சனிக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப் பூமாலை அணிவித்து புனுகு பூசி. எள் கலந்த சாதம், பால் பாயாசம் கருநிற திராட்சை நைவேத்தியமாக படைதது அர்ச்சனை செய்தால் விஷபயம் நீங்கும்.
ஞாயிற்றுக்கிழமை
ஞாயிற்றுக்கிழமையில் ராகு காலத்தில் பைரவருக்கு உருத்திராபிஷேகமோ அல்லது விபூதி அபிஷேகமோ செய்து வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபடுவதால் திருமணமாகாத ஆண், பெண் இருபாலாருக்கும் விரைவில் திருமணம் நடைபெறும்.
- SLS பழனியப்பன்