விஸ்வரூப தரிசனம்!

விஸ்வரூப தரிசனம்!

இறைவனை எங்கும் நிறைந்திருப்பவராகக் காண்பது விஸ்வரூப தரிசனம் எனப்படும். 
 

“விஸ்வரூபம்” என்பது பகவானின் சர்வ வியாபகத்துவம் (All Pervasiveness or immanence) என்பதைக் காட்டுகிறது. எனவே விஸ்வரூப தரிசனம்” என்றால், “இறைவனின் சர்வவியாபகக் காட்சி” என்று பொருள்.
 
கீதை 10-ஆவது அத்தியாயமாக “விபூதி யோகம்” அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் அர்ஜுனன் கேட்கக் கூறுகிறான். 10-ஆவது அத்தியாயத்தில், இறைவனின் எல்லையற்ற ஏற்றங்கள் அர்ஜுனனால் “சிரவணம்” செய்யப்படுகிறது. 11-ஆவது அத்தியாயமான “விஸ்வரூப தரிசனம்” என்ற பகுதியில், ஸர்வ வியாபகத்துவம் என்ற இறைவனின் தனிப்பெருமை காட்சியாக (தரிசனமாக) அர்ஜுனனுக்குக் காண்பிக்கப்படுகிறது. 
 
முதலில் சிரவணம், பின்பு சிரவணம் செய்த கருத்துக்கள் நன்கு வேரூன்ற தரிசனம் என்ற கீதையின் அற்புதமான இந்த அமைப்பு சிந்தனைக்கும், பாராட்டுவதற்கும் உரியது.
 
அதிகாலையில் நோயில் திறந்ததும் தெய்வத்தைத் தரிசனம் செய்வதும் விஸ்வரூப தரிசனம் எனப்படும்.
 
அர்ஜுனன் பெற்ற விஸ்வரூப தரிசனம் நமக்கு எங்கே கிடைக்கப் போகிறது? இரண்டாவது சொல்லப்பட்ட கோயில் அல்லது பூஜையறையில், விடியற்காலை விஸ்வரூப தரிசனத்தை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து நாம் பெற்றாலே பெரிய பாக்கியம்.