விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - மகரம்

விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - மகரம்

சிந்தனைகளை தொடர்ந்து செயல்படுத்தும் மகர ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு துவக்கத்தில் மூன்றாமிட ராகு தனஸ்தானத்திலும் பாக்கிய ஸ்தானத்தில் கேது அட்டம ஸ்தானத்திலும் அமர்வதுடன் அடுத்து குரு பார்வையிலிருந்து ஆறாமிடத்தில் மறைவு பெறுவதும் உங்களுக்கு சிறுசங்கடங்கள் இருந்தாலும் சனி ஆண்டின் இறுதியில் பெயர்ச்சியாகி மூன்றாமிடத்திற்கு செல்லும் போது இதுவரை ஏழரை சனியாக இருந்த நிலை விடுபட்டு யோக சனியாக வருவது சிறப்பான பலன் தரும்.
 
இந்த ஆண்டு மூன்றாமிடத்தில் இருந்த ராகு தனஸ்தானத்தில் அமர்வது பேச்சில் மிகபெரிய மாற்றம் உண்டாகும். எதையும் செய்தே தீரவேண்டும் என்ற நினைவுகளை மாற்றிக்கொள்ளாமல் பிடிவாதமாகவே இருப்பீர்கள். சொன்ன சொல்படி நடக்க வேண்டுமென்று பிறரை எதிர்பார்ப்பீர்கள். கேது அட்டம ஸ்தானத்தில் இருப்பதால்... தேவையற்ற விடயங்களில் தலையிடுவதைக் குறைத்து கொள்வது நல்லது. அரசியலிலும், அதிகாரத்திலும் இருப்பவர்களிடம் சற்று கவனமாக இருப்பதும் நல்லது. ஒரு வார்த்தையை ஒன்பதாக திரித்து விடுவார்கள். இதனால் தர்ம சங்கடமான நிலை உண்டாகும்.
 
இதுவரை குரு ராசியை பார்த்து கொண்டு இருந்தார். காரியங்கள் தடையின்றி நடந்து வந்தது. குரு ஆறாமிடத்தில் மறைவு பெறுகிறார். மறைவுஸ்தானாதிபதி மறைவு பெறுவது உங்களுக்கு நற்பலன்களை தரும். குரு தொழில் ஸ்தானத்தினை பார்வை இடுவதால் தொழிலில் நற்பலன்களும் செய்யும் தொழிலில் வளர்ச்சியும் உண்டாகும். குருவின் அருளால் உங்களின் செயல்களில் ஊக்கமும், தெளிவும் உண்டாகும். மறைமுக எதிரிகளின் செயல்பாடுகள் சற்று தாழ்ந்து இருக்கும். குடும்பத்தில் சிலருக்கு சுபகாரிய வாய்ப்புகள் அமையும். சனி பெயர்ச்சிக்கு பின்பு நல்ல தொழில் வளம் மேன்மை பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:  
 
சனி, செவ்வாய், வெள்ளி.
 
அதிர்ஷ்ட நிறங்கள்: 
 
நீலம், வெண்மை, ஆரஞ்சு.
 
அதிர்ஷ்ட எண்கள்: 
 
6, 8, 9.
 
பரிகாரங்கள்:
 
ஞாயிறு மாலை ராகு காலத்தில் (04.30 - 06.00) பைரவருக்கும், நவ கிரகங்களுக்கும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பைரவருக்கு தயிர் அன்மை வைத்து வேண்டிக் கொள்ள நல்ல காரியங்கள் சிறப்பாக நடக்கும்.