எளிமையாய் வாழ்ந்திட தீர்மானியுங்கள்!

எளிமையாய் வாழ்ந்திட தீர்மானியுங்கள்!

மநுஷ்யனின் ஆத்மா விருத்திக்கு பிரதிகூலமாக வெறும் லௌகிக ரீதியில் எந்த உபகாரமும் உபகாரம இல்லை, அபசாரம் தான். எத்தனைக்கெத்தனை எளிமையாக வாழ்கிறோமோ அத்தனைக்கு அத்தனை ஆத்மக்ஷேமம். ஆனதால், மற்றவர்கள் எளிய வாழ்க்கையில் இருக்கும் படியாகப் பண்ணுவதுதான் நிஜமான உபசாரம். இதை எப்படிப் பண்ணுவது? நாம் டாம்பீகமாக வாழ்ந்து கொண்டு அவர்களுக்கு உபதேசம் செய்தால் நடக்குமா? ஆகையால் நாமே அப்படி எளிமையாக வாழ்ந்து காட்ட வேண்டும். ஆகையால் “நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படி மற்றவர்களும் வாழ வேண்டும்” என்று நினைப்பதற்கு முந்தி “நாம் எப்படி வாழ வேண்டும்” என்பதையும் தீர்மானம் பண்ணிக் கொள்ள வேண்டும். “மற்றவர்கள் எல்லோரும் எப்படி வாழ முடியுமோ, எப்படி வாழ்ந்தால்தான் ஆத்ம விருத்திக்கு நல்லதோ அப்படித்தான் நாமும் வாழ வேண்டும். அதாவது ரொம்ப சிம்பிளாக வாழ வேண்டும்” என்று முதலில் தீர்மானம் பண்ணிக் கொள்ள வேண்டும்.
 
ஒருத்தர் செத்துப் போன உடனே பித்ருலோகம் போய் விடுவதில்லை. இன்னொரு ஜென்மா எடுத்து விடுவதில்லை. இறந்து போனவனின் ஜீவன் ஒரு வருஷம் பிரயாணம் பண்ணித்தான் பித்ரு ஸ்தானத்தை அடைகிறது. இதை நாம் சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற மாதிரியே கிரிக் மைதாலஜி முதலான மத க்ரந்தங்களிலும் சொல்லியிருக்கிறது. ஜீவன் வைதரணி நதியைக் கடந்து எம பட்டணம் போக வேண்டும் என்று நாம் சொல்கிற மாதிரியே அவர்களும் ஒரு நதியைச் styx சொல்லி அதைத் தாண்டி மறு லோகத்துக்குப் hades போக வேண்டும் என்கிறார்கள். நாம் சொல்கிற மாதிரியே எம பட்டணத்தில் இருக்கிற காவல்நாய் போ அவர்களும் ஒன்றைச் cerberus சொல்கிறார்கள். ஒரு ஜீவன் பரலோகம் செல்வதற்குப் பிடிக்கிற இந்த ஒரு வருஷத்தில் தான் அதன் திருப்திக்காக மாதா மாதம் சில சடங்குகளைச் செய்வது இம்மாதிரி பரலோக யாத்திரையில் வழிக்கு உணவு தருவதைக் கூட இதர மதங்களில் சொல்லி இருப்பதாகக் கேட்டிருக்கிறேன். பிள்ளை குட்டி இல்லாதவர்களுக்கும் நாம் கயை, பத்ரி போன்ற இடங்களில் பிண்டம் போடுவது போலவே, கிறிஸ்துவர்களும் (all souls day) என்று ஒரு நாளில் எல்லா ஆத்மாக்களின் திருப்திக்காகவும் வழிபாடு நடத்துகிறார்கள். லோகம் பூராவும் இப்படி ஒரு நம்பிக்கை, அபிப்பிராயம் இருக்கிறது என்றால் அது சத்தியமாகத் தான் இருக்க வேண்டும்.
 
- காஞ்சி மகா பெரியவர்