அக்டோபர் மாதம் ராசி பலன்கள் 2025 - மீனம்

அன்பாலும், ஆதரவாலும் அனைவரிடம் பழகும் மீன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுகஸ்தானத்திலிருந்து பார்க்குமிடம் சிறப்பாக அமையும். உங்களின் ராசியை சூரியன் பார்வை இடுவது மனவலிமையும், செயல்திறனும் அதிகரிக்கும். எதையும் அவசரபட்டு செய்யமாட்டீர்கள். கருத்துகளை சொல்லும் போது அதில் ஆழமாக எதையும் சொல்வீர்கள். புதிய திட்டங்களை கவனமுடனும், ஆலோசனைகளுடனும் செய்வீர்கள்.
சூரியனை தவிர்த்து பிற கிரகங்கள் அனைத்தும் மறைவு ஸ்தானங்களில் மறைவு பெறுவதும் உங்களின் செயல்பாடுகளில் முடக்கம் உண்டாகும். எதற்கும் பிறரின் உதவியை நாட வேண்டிவரும். ஒரு செயலை செய்யும் போது அதற்கு தகுந்த வழிகளை ஆய்வு செய்யாமல்… குற்றம் சொல்லி கொண்டிருக்காமல்… இருப்பது நல்லது. 8-ந் திகதி முதல் அதிசார குரு உங்களின் ராசியை பார்ப்பது உங்களுக்கு மேலும் ஊக்கத்தை தரும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். உடல் நலனின் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சந்தோசம் நினைத்தபடி சில காரியம் நடந்த மகிழ்ச்சி உங்களை ஊக்கபடுத்தும்.
கலைத்துறையினருக்கு இம்மாதம் மிக சிறப்பாக இருக்கும். இசை கலைஞர்களுக்கு அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆறாமிடத்தில் எட்டிற்குரியவர் அமர்வதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல உங்களின் கலை ஞானம் மேன்மை அடையும். எதிர்பாராத பாராட்டுகளும், பரிசுகளும் கிடைக்க பெறுவீர்கள். விரைய சனி காலம் என்பதால் சுப விரையமாக காலி மனை வாங்கி போடுவது. பிள்ளைகளுக்கு திருமணம் செய்தல், வீட்டு பராமரிப்பு பணிகளை செய்வது நல்லது. ஆன்மீக தேடலில் உங்களுக்கு பொக்கிஷம் போல சில அரிய பயிற்சிகள். அரிய நூல்கள் கிடைக்கப் பெறுவீர்கள். குழந்தை வேண்டுபவர்களுக்கு குழந்தை கிடைக்கும். புனித யாத்திரை செல்தல். முன்னோர் வழிபாடுகள் சிலருக்கு கிடைக்கும். ஆன்மீக விடயங்களை அறிந்து கொள்வீர்கள். பொருளாதாரத்தில் தேவைகள் பூர்த்தியாகும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், சிவப்பு, வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி, ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
21-10-2025 செவ்வாய் காலை 10.33 முதல் 23-10-2025 வியாழன் இரவு 10.01 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய் கிழமை சுப்ரமணியருக்கு சிவப்பு பூ மாலையும், இலுப்பெண்ணெய் தீபமும் ஏற்றி வணங்கி வர சகல காரியமும் கைகூடும். தொழில் விருத்தி உண்டாகும்.
கணித்தவர்:
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
செல் நம்பர் - 0091-9789341554