ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - தனுசு
தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கிக்கொள்ளும் தனுசு ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஆரம்பத்தில் உங்களின் ராசிநாதன் குரு ராசியை பார்வை இடுவதும், மூன்றாமிடத்தில் சனி இருந்து மனவலிமையை தருவதும் உங்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையும் அமையும். 06.03.2026 சனி சுகஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆவதால் தாயார் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். 26.05.2026 முதல் குரு அட்டம ஸ்தானத்தில் அமர்வது பொருளாதார நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டி வரும்.
மூன்றாமிடத்திற்குரிய சனி ஆட்சி பெற்று அமர்ந்தாலும் இதுவரை அதனால் எந்த பலனும் கிடைக்க பெறவில்லை என்ற நிலை இருந்து வந்தது. மேலும் இனி 06.03.2026 முதல் சுகஸ்தானத்தில் சனி அமர்வது ஒரு புறம் வாகன வசதிகளையும், வீடு கட்டும் வாய்ப்பும் பெற்று தருவார். எனினும் தாயார் உடல் நலனில் கவனம் செலுத்துபடி அமையும். உங்களின் உடல் நலனிலும் அடிக்கடி கவனம் செலுத்த வேண்டி வரும். எதை செய்தாலும் அதில் சிக்கல் வந்து மறையும்.
குரு பார்வை இருக்கும் வரையில் உங்களுக்கு எதையும் சமாளிக்கும் வாய்ப்பு அமையும். அட்டம ஸ்தானத்தில் உச்சம் பெற்று குரு அமர தொழிலும், கொடுக்கல் வாங்கலிலும் கவனமுடன் இருப்பது நல்லது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வளம் பெறுவது நல்லது. புதிய முயற்சிகளையோ, தொழில் துவங்குவதையோ தவிர்ப்பது நல்லது. தங்க நகை அடவுக்கு போகும் நிலை உண்டாகும். சேமிப்பு கரையும்.
19.11.2026 முதல் ராகு / கேது பெயர்ச்சி ஆவது தனஸ்தானத்தில் ராகு அமர்வதும் குருவுடன் கேது இணைவு பெறுவதும் உங்களின் பொருளாதார நிலை தேவைகளை உணர்த்தும் போது கஷ்டமும், நஷ்டமும் சேர்ந்த உண்டாகும். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், ஆரஞ்சு, வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட எண்கள்:
3, 6, 9.
அதிர்ஷ்ட மாதம்:
ஜனவரி, ஏப்ரல், மே, ஜுலை.
பரிகாரங்கள்:
சனிக்கிழமைகளில் பைரவருக்கு மூன்று வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவப்பு அரளி பூ சாற்றி, வேண்டிக் கொள்ள உங்களின் அனைத்து விடயத்திலும் தடை நீங்கி நற்பலன்களை பெறுவீர்கள்.

















