மந்திர சக்தி!

மந்திர சக்தி!

கணிதத்திலோ அல்லதுபௌதீகத்திலோ உள்ள 3த்திரங்கள் அதில் பழக்கப்படாதவனுக்கு ஒன்றும் புரியாது. அது போலவே சாதாரண மனிதர்களுக்கு “ஓம்” “ஹ்ரீம்” போன்ற சக்தி வாய்ந்த மந்த்ரங்கள் பொருளற்ற வெறும் சொற்களாகவே தோன்றும்.
 
ஆனால் மந்த்ரத்தின் சக்தியோ, அதன் மூலம் நாம் உபாசிக்கும் தெய்வம் நம் ஜபத்திற்கு பயனளிப்பதோ, அதன் மூலம் நாம் ஆத்ம சாக்ஷாத்காரம் பெறுவதோ இவையாவும் உண்மையே.
 
பல மந்த்ரங்களில் அர்த்தத்தைவிட சப்தத்துக்கு முக்யத்துவம் அதிகம். அவற்றின் அக்ஷரத்துக்கும். அவற்றைச் சொல்ல வேண்டிய ஸ்வரத்துக்குமே விசேஷ சக்தி உண்டு. அர்த்த்துக்கு அந்த அளவு விசேஷம் இல்லை. உதாரணமாக தேள் கொடு்டுவதால் ஏற்படும் விஷத்தை இறக்க நாம் சொல்லும் மந்த்ரத்தை எடுத்துக் கொண்டால், அதற்கு அர்த்தம் ஒன்றும் விசேஷமாக இருக்காது. அர்த்தத்தைச் சொல்லவும் கூடாது. ஆனால் அந்தசப்தக் கோவையை சரியாக ஜபித்தால் அதனால் ஏற்படும். ஒலி அதிர்வுகளிலேயே அதாவதுஅக்ஷரம் - ஸ்வரம் இவற்றின் சக்தியிலேயே விஷம் இறங்கி விடுகிறது.
 
வருணஜபம் செய்தால் மழை பெய்யும். ஆனால் சில நேரங்களில் வருணஜபம் பண்ணியும் மழை பெய்யாமல் இருக்கலாம். ஆனால் வருண ஜபம் சக்தியற்றது் என்று தள்ளிவிட முடியாது. மருந்துகளை சாப்பிட்டு உடம்பு குணமாகிறவர்களும் இருக்கிறார்கள். குணம் ஆகாதவர்களும் இருக்கிறார்கள்.
 
அதனால் மருந்து உபயோகமில்லாதது என்று தள்ளிவிடமாட்டோம் அல்லவா?
 
சிலருடைய வியாதி முற்றிய நிலையில் இருந்தால், மருந்து பலன் தராது. அதுபோல கர்மாவின் பலம் அதிகம் இருந்தால் மந்த்ரமும் பலன் தராமல் போகலாம். பத்தியம் தப்பினாலும் மருந்து பலனளிக்காது. அதுபோல மந்த்ர சக்திகள் பலன் தருவதற்கு சில நியமங்களை ஜபம் செய்கிறவர்கள் அனுஷ்டிக்க வேண்டும். இந்த நியமங்களில் தப்பு வந்து விட்டால் மந்த்ரங்களிலிருந்து உத்தேசித்த பலன் கிடைக்காது.
 
ஆகவே நியமத்தோடு கூடியவர்கள் ச்ரத்தையோடு செய்யும் அக்ஷர சுத்தமான, ஸ்வர சுத்தமான மந்த்ரங்கள் பலன்களைத் தந்தே தீரும். இதில் சந்தேகமில்லை.
 
ஜபம் எப்போது செய்யலாம்
 
லக்ஷக்கணக்கான மந்த்ரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்டகாலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது.
 
எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.
 
சுக்லபக்ஷம், க்ருஷ்ணபக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்தசி திதியிலோ சூர்யோதயம் தொடங்கி மறுநாள் சூர்யோதயம் வரை இடைவிடாது மந்த்ரத்தை ஜபிப்பதால் மந்த்ரம் சித்தியாகிறது.
 
மனதை ஒரு நிலைபப்டுத்தி நிமிர்ந்து உட்கார்ந்து உள்ளங்கையை நிமித்தி வைத்துக் கொண்டு விரல்கள் புத்திரேகையைத் தொடுவது போல வைத்துக் கொண்டு, மந்திரத்தை ஐந்து நிமிஷங்கள் ஜபித்தால் உடமிபிலுள்ள ஆறு ஆதாரச் சக்கரங்களுடன் தொடர்பு ஏற்பட்டு மின்காந்த சக்தியுண்டாகும். இப்படி பத்து நிமிட ஜபத்திற்குப் பின் கண் விழித்துப் பார்த்தால் உடம்பில் புதுத் தெம்பு ஏற்படும்.
 
சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்துமனதை ஒருமுகப்படுத்தி, இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்ய வேண்டும், பூஜையறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.
 
ஒரு நாளில் இரண்டு “ஸந்த்யா”க்கள் உண்டு. “ஸந்த்யா” என்பது இரவும் பகலும் கூடும் வேளையாகும். நமது சாஸ்த்ரங்களில் இந்த இரண்டு வேளைகளையும் தான்ஜபத்திற்கு உரியதாகக் கூறப்பட்டிருக்கிறது.
 
விடியற்காலையில் வைகறை ஒளி பிரியும் வேளையில் காலை நாலரை மணி அளவில் எழுந்து மலஜலம் கழித்து நீராடி ஜபம் செய்ய வேண்டும். மாலையில் சாயம் ஸந்த்யா எனப்படும் ஜுர்ய அஸ்தமனத்திற்கு இரு நாழிகைகள் முன்னதாகவும் இருநாழிகைகள் பின்னதாகவும் ஜபம் செய்யலாம்.
 
மனுஸ்ம்ருதி இதைப் பற்றி விரிவாகச் சொல்லி இருக்கிறது.
 
கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கில் வசியமும், அக்னிமூலையில் கடந் நிவாரணமும், மேற்கு நோக்கி ஜபம்செய்தால் மோக்ஷம் சித்திக்கும் கிழக்கும் வடக்கும் நிஷ்காமியமானது.
 
எண்ணிக்கை இல்லாமல் ஜபித்தால் பலனில்லை. எதற்கும் ஒரு கணக்கு வேண்டும். ஒரு மந்திரத்தில் எவ்வளவு அக்ஷரங்கள் உண்டோ அவ்வளவு கோடி ஜபித்தால் மந்த்ர சித்தி ஏற்படும். இயலாத பக்ஷத்தில் அவ்வளவு லக்ஷம் ஜபிப்பது நன்று.
 
ஜபமாலை மூலமோ அல்லது கரமாலா எனப்படும் கைவிரல் எண்ணிக்கை மூலம் ஜபம் எவ்வளவு செய்தோம் என்று கணக்கு வைத்துக் கொள்ளலாம்.
 
- ஆர்.பி.வி.எஸ். மணியன்