2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - துலாம்

2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் - துலாம்

எல்லாமும் மகிழ்ச்சியுடன் இருக்க நினைக்கும் துலாம் ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஆண்டு துவக்கத்தில் ராசிநாதன் பஞ்சம ஸ்தானத்தில் யோகாதிபதியுடன் இணைந்து லாபஸ்தானத்தை பார்ப்பதால் தொழில் மிக சிறப்பாக வளம் பெறுவீர்கள். ஆடம்பர பொருட்கள் விற்பனை நல்ல வருமானத்தை பெற்று தரும். ராசி மூன்றாமிடத்தில் லாபாதிபதியுடன் தொழில் ஸ்தானாதிபதி இணைவு பெற்று இருப்பதால் தொழிலில் தடையற்ற வருமானம் பெறுவீர்கள்.
 
மேலும் ஆன்லைன் வர்த்தக வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். உங்களின் ராசிக்கு களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து ராசிநாதனை பார்ப்பதால் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். கருத்து வேறுபாடுகளை கலைந்து உறவுகளை பலபடுத்திக் கொள்வீர்கள். எட்டாமிடத்தில் குரு மே மாதம் வரை இருப்பதால் பொருளாதார வளர்ச்சி சற்று குறைவாக இருக்கும் ஆண்டு மத்தியில் வளமான வளர்ச்சியையும் பொருளாதார மேன்மையும் அடைவீர்கள்.
 
கலைத்துறையின் தன் சார்ந்த தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். காலத்தையும், நேரத்தையும் வீண்ணடிக்காமல் செயலில் திறம்பட செய்வீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு பக்கபலமாக எல்லாம் நடக்கும். பதிய முயற்சிகளுக்கு நல்ல பலன் உண்டாகும். தொழிலில் புதிய முதலீடுகளை சில காலம் தவிர்ப்பது மிக நல்லது. பொது வாழ்வில் பிறர் நன்மை அடைய வேண்டும் என்று நினைக்கும்.
 
உங்களின் எண்ணம் நினைத்தபடி நல்ல காரியங்களை சிறப்பாக அமையும். மாணவர்களுக்கு கல்வி விருப்பபடி அமையும். திருமணம் தமிழ் புத்தாண்டி பிறந்த பிறகு சிறப்பாக அமையும். ஆற்றலுக்கு தகுந்தபடி எந்த செயலையும் தள்ளி போடாமல் உடனே செய்து முடிப்பீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கு எல்லா விதமான வழிகளில் வளர்ச்சியை பெற்று தரும்.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
6, 7, 9.
 
அதிர்ஷ்ட மாதங்கள்:
 
ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், ஜுலை, செப்டம்பர், நவம்பர்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
வெண்மை, நீலம், மஞ்சள்.
 
பரிகாரங்கள்:
 
வியாழக்கிழமைகளில் நவகிரக குருவுக்கு மூன்று நெற் தீபம் ஏற்றி மஞ்சள் வஸ்திரம் சாத்தி வேண்டிக் கொள்ள இந்த ஆண்டு முழுவதும் சிறப்பான நற்பலன்கள் உண்டாகும். பொருளாதார மேன்மை கிடைக்கும்.