சந்தன அபிஷேகம் - திருச்செந்தூர்

 
ஆன்மீக சேவைகள்: 2000Book Now
சந்தன அபிஷேகம் - திருச்செந்தூர்

ஷண்முகர், ஜெயந்திநாதர், குமரவிடங்கர், அலைவாய்ப் பெருமாள் என்று 4 உற்சவர்கள் தனி தனி சன்னதிகளில் அருளுகின்றனர். குமரவிடங்கரை, "மாப்பிள்ளை சுவாமி" என்றழைக்கின்றனர். இங்கு மூலவர் கிழக்கு நோக்கி கடலைப் பார்த்த படி அருளுகிறார். ராஜ கோபுரம் மேற்கு நோக்கிய திசையில் உள்ளது. கிழக்கே கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும் எனினும் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

ஆறுபடை வீடுகளில் உயரமான ராஜ கோபுரம் இங்கு மட்டுமே உள்ளது. இங்கு முருகன் தவக்கோலத்தில் அருள் புரிகிறார். இங்கும் முருகனுக்கு பிரகாரம் இல்லை. இந்த மூலவரின் உற்சவர் அருகில் தெற்கு நோக்கி அருளுகிறார். அவருக்கு பிரகாரம் உள்ளது. மூலவருக்கு செய்யும் அனைத்து பூஜைகளும் இவருக்கு உண்டு. இங்கு மூலவராகிய முருகனுக்குப் பின்புறம் முருகன் வழிபட்ட 5 லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களுக்கு பூஜை முடிந்த பிறகே மூலவருக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன. இங்கு முருகனுக்கு 9 கால பூஜை நடத்தப்படுகிறது. இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறு குன்று போல புடைப்பாக இருக்கிறது. இது செந்தூரும் மலை கோவில் என்பதற்கு சான்று.