10 அடிப்படை யோக முத்திரைகள்
தொப்பையைக் குறைக்க உதவும் யோகாசனங்கள்! ஒவ்வொரு யோகாசன முத்திரையும் தனித்துவம் பெற்றது. அதனால் அவைகளை சரியான வழியில் செய்திட வேண்டும். இந்த ஒவ்வொரு முத்திரைகளுக்கும் உள் அர்த்தங்கள் உள்ளது. உதாரணத்திற்கு, க்யான் முத்திரை பொதுவான ஒன்று. இந்த முத்திரை அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும். அதே போல் வாயு முத்திரை காற்றை குறிக்கும். உடலில் உள்ள காற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அது சமநிலைப்படுத்தும்.
தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு 5 அட்டகாசமான யோகாசனங்கள்!!! அனைத்து யோகாசன முத்திரைகளும் கை அசைவுகளே. அவைகள் உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கக்கூடிய நன்மைகளை அளிக்கும். ஆனால் இந்த முத்திரைகளை நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடாது. ஒவ்வொரு முத்திரையை செய்யவும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் இருக்கிறது. குறிப்பிட்ட வகையில் அமர்வது, நிற்பது, படுப்பது போன்றவைகளும் இதில் அடங்கியுள்ளது. உடல் நல பயன்களை பெறுவதற்கு இந்த விசேஷ கை சைகைகளை பயன்படுத்துங்கள்.
க்யான் முத்திரை அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோகாசன முத்திரை இதுவாகும். பத்மாசனா தோரணையில் அமர்ந்திருக்கும் போது காலையில் செய்ய வேண்டிய முத்திரை இது. இந்த முத்திரை உங்கள் ஒருமுனைப்படுதலை மேம்படுத்தி, தூக்கமின்மையை போக்கி, கோபத்தை கட்டுப்படுத்த உதவும்.
வாயு முத்திரை உடலில் உள்ள காற்று தனிமத்தை சமநிலைப்படுத்தவே இந்த முத்திரையாகும். உட்காரும் போது, நிற்கும் போது அல்லது படுக்கும் போது, அந்த நாளில் எந்நேரம் வேண்டுமானாலும் இதை செய்யலாம். உடலில் உள்ள அளவுக்கு அதிகமான காற்றை வெளியேற்றி, வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வழியை குறைக்க இது உதவும்.