ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2022 - மேஷம்

ராகு - கேது பெயர்ச்சிப் பலன்கள் 2020 - 2022 - மேஷம்

விதியை பற்றி கவலைப்படாமல் எதையும் எதிர்கொள்ளும் மே ராசி வாசகர்களே!

இதுவரை உங்களின் ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமர்ந்த ராகு இனி தனஸ்தானத்திலும், ஒன்பதாம் வீட்டில் இருந்த கேது எட்டா மிடத்திலும் வரும் 01.09.2020 முதல் ஒன்றரை ஆண்டு காலம் அமரவிருப்பது உங்களின் ராசிக்கு பொதுவாக நாகதோசம் என்பதாகும். எனினும் முதல் ஆறு மாதம் உங்களின் ராசி நாதன் பாதிப்பிலிருந்து குறைத்து கொள்ள செய்வதும் சில மாதம் குருபார்வை பெறுவதும் சற்று ஆறுதலாக அமையும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு பொருளாதார சிரமங்கள் இருந்து வந்தாலும் படிப்படியாக சரி செய்து கொள்வீர்கள். கணவன் மனைவி உறவுகளில் சச்சரவு ஏற்படும் என்பதால் சற்று நிதானமாக பேசுவதன் மூலம் தவிர்க்கலாம்.

 
ராகு மிருகசீரிட நட்சத்திரத்தில் இருக்கும் காலம் கண்களை கவனமாக பார்த்து கொள்வது அவசியம். பெண்களுக்கு ரத்தத்தின் அளவு குறைந்து உடல் தளர்ச்சி உண்டாகும். உணவு பழக்கங்களை மாற்றி ரத்த குறைவு வராமல் உணவு எடுத்து கொள்வது நல்லது. உளுந்து வடை துவரைபருப்பு சாதம் செய்து உண்பதன் மூலம் நன்மை உண்டாகும். நாகதோச பாதிப்பிலிருந்து நலம் பெறலாம். ராகு, ரோகிணியில் இருக்கும் காலம் தாயார் உடல் நலனின் கவனம் செலுத்த வேண்டி வரும்.
 
பெண்கள் மூலம் சிலருக்கு பாதிப்பை தரும் என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிலருக்கு சக்கரை அளவு அதிகரிக்கும் என்பதால் உணவு கட்டுபாடு செய்து கொள்வது நல்லது. சக்கரை குறைவான உணவுகளை எடுத்து கொள்வதும், சிறு குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியும். கார்த்திகையில் ராகு வரும் காலம் தந்தைக்கு உடல் நலமில்லாமல் போகும். தந்தை வழி சொத்து சம்மந்தமான பிரச்சனைகள் உண்டாகும் எதையும் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது அரசியலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள்.
 
கேது, கேட்டை நட்சத்திரத்தில் இருக்கும் போது கல்வியில் நாட்டமில்லாமல் போவதும். படித்தவற்றை மறந்துவிடுவதும் உண்டாகும். புத்திரிகளுக்கு திருமணத்தில் தடை உண்டாகும். வேண்டிய வசதிகள் இருந்தும் முயற்சிகள் கைகூடாமல் போகும் என்பதால் கோவில் திருவிழா நடக்கும் போது சுமங்கலிகளுக்கு தாலியுடன் வளையல் வாங்கி கொடுத்து வந்தில் நன்மை உண்டாகும். நினைத்தை அடைவீர்கள். அனுச நட்சத்திரத்தில் கேது அமரும் போது நரம்பு சம்மந்தமான வருத்தம் வரும். அதற்காக மருத்துவம் பார்க்க வேண்டி வரும். 
 
புதிய முயற்சிகளை கைவிட்டு இருக்கும். தொழிலை செம்மைபடுத்திக் கொள்வது நல்லது. காது சம்மந்தமான பிரச்சனைகள் வரும் தொழிலாளர்களுக்குள் ஒற்றுமையின்மையும், பிரித்தாளும் தன்மையும் உண்டாகும். வியாழக்கிழமைகளில் விநாயகருக்கு தேங்காய் எண்ணெயில் விளக்கு போட்டும், கதம்ப மாலை சாத்தியும் ஊனமுற்றோருக்கு உதவிகள் செய்து வந்தால் இந்த பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
 
விசாக நட்சத்திரத்தில் கேது வரும் காலம் திருமண தடை, காரிய தடை, வியாபாரத்தில் மந்தநிலை. பணத்தட்டுபாடு உண்டாகும். குடும்பத்தில் சச்சரவு உண்டாகும். பன்னீரில் குழைத்த மஞ்சள் பிள்ளை யாரை நீர் நிலையில் பூசித்து கரைத்து விட்டு விநாயகருக்கு நெய் தீபமேற்றி வணங்கி வர சகலமும் சரியாகும்.

Featured Video

மாத பலன்கள்

Newsletter Sign Up

Sign up to our newsletter and get exclusive deals you will not find anywhere else straight to your inbox!