தரிசூலம்

தரிசூலம்

இந்து மதத்திம் புத்த மதத்திம் பண்டைய காலத்திலிருந்தே கடவுளர்களது ஆயுதமாக திரிசூலம் வெகு காலத்துக்கு முன்பே ஆன்மிக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ந்து சயமத்தின் பிரதான தெய்வங்களான சிவன், காளி, துர்க்கை ஆகிய தெய்வங்களின் கைகளில் திரிசூலம் இருக்கிறது. ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்று வித இருளை நீக்கும் அடையாளமாகவும், தீய சக்திகளை அழிக்கும் என்ற தத்துவமாகவும் திரிசூலம் உள்ளது. தரிசூலத்தில் உள்ள மூன்று கூர்மையான பகுதிகள், மனித வாழ்வின் மூன்று நிலைகளான விழிப்பு கனவு மற்றும் தூக்கம் ஆகிய நிலைகளையும் மனம், வாக்கு, உடல் ஆகியவற்றையும் மறை பொருளாக குறிப்பிடுகிறது என்ற ஆன்மிக உள்ளர்த்தம் சான்றோர்களால் குறிப்பிட்டுள்ளது. அந்த மூன்று நிலைகளிலும் மனிதர்கள் எப்போதும் ஒன்றுபட்ட நிலையில் இருக்க வேண்டும் என்பதை சூலத்தின் வடிவம் எடுத்துக்காட்டுகிறது.

 
அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை முறையாக கடைப்பிடித்து வருபவர்களுக்கு அம்பிகையின் அருளால் வீடு பேறு என்ற முக்தி கிடைக்கும் என்பது ஆன்மிக தத்துவமாகும். இச்ச சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்றும் நமக்கு சித்திக்க வேண்டும் என்பதை சூலம் குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம். அதன் காரணமாக சூலத்தை கைகளில் வைத்திருக்கும் அம்பிகை “திரிவர்க்க தாத்ரீ” என்று போற்றப்படுவது வழக்கம், பொதுவாக, சாக்த நெறிமுறையை கடைப்பிடிப்பவர்கள். தங்கள் இருப்பிடங்களில் திரிசூலத்தை ஒரு அடையாளமாக வைத்திருப்பதும், வீடுகளின் பூஜையறை மற்றும் கதவுகளில் அவற்றை பொருத்தி வைத்திருப்பதும் வழக்கம். அதன் மூலம் தீய சக்திகளின் தாக்கம் வீடுகளுக்குள் வராமல் காப்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள்.