விசுவாவசு தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - கடகம்

சோதனைகளைக் கடந்து சாதிக்கும் கடக ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு உங்களின் மனவலிமையும், தைரியமும் உங்களை பல வழிகளில் வளர்ச்சியை அடைய உதவி செய்யும். ஆண்டு தவக்கத்தில் ராகு / கேது பெயர்ச்சியும், அடுத்த குரு பெயர்ச்சியும் வருவதும், ராசிக்கு தனஸ்தானத்தில் கேதுவும், அட்டமஸ்தானத்தில் ராகுவும் சனியுடன் இணைவதும் விரைய குருவாக அமர்வதும் நடைபெறுவதால் புதிய முயற்சிகளை கைவிட்டு, இருக்கும் விடயங்களை சீராக செய்து கொண்டு வருவதற்கான பாதையை தெரிவு செய்தால் வளம் பெறுவீர்கள்.
வரும் 26-04-2025 முதல் ராகு / கேது பெயர்ச்சியாகி, தனஸ்தானத்தில் கேது அமர்ந்து ஞான மார்க்கத்தில் உங்களின் செயல்பாடுகளை ஊக்குவிப்பார். ஆன்மீக அன்பார்களின் தொடர்புகள் மூலம் மேன்மை பெற செய்வார். காலத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல், புதிய நண்பர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல், வெற்றியின் இலக்கை மட்டும் நினைத்து செயல்படுவது உங்களுக்கு நன்மையை தரும். அட்டம ராகு சனியுடன் சேருவது தடைகள் இருந்தாலும் உங்களின் பலம் நன்மையையே தரும்.
விரைய குரு ராசிக்கு பணிரெண்டில் ஆறாம் இடத்து அதிபதி அமர்வது கெட்டவன் கிட்டில் கிட்டிடும் ராஜயோகம் என்பது உங்களுக்கு ஊக்கத்தை தரும். மேலும் குரு பார்க்க கோடி நன்மை என்பது போல அட்டம சனி, ராகுவை பார்ப்பதால் அடுத்த குரு பெயர்ச்சி வரையிலும் உங்களுக்க எந்த விதமாக குறைகளுமின்றி நன்மையையே குரு தருவார். அதனால் இந்த ஆண்டு முழுவதும் அதிகபட்ச நன்மையே உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், செவ்வாய், வியாழன்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, சிவப்பு, மஞ்சள்,
அதிர்ஷ்ட எண்கள்:
1, 2, 3.
பரிகாரங்கள்:
ஞாயிறுக்கிழமை மாலை 04.30 - 06.00 மணிக்குள் நவகிரக வழிபாடும், பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கி சிவப்பு அரளி பூ மாலை இட்டு வர சகல காரியமும் தடையின்றி வெற்றியை தரும்.