ஸ்ரீ பராபவ தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - சிம்மம்
சுய விருப்பத்துடன் வீரியமாக செயல்படும் சிம்ம ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு அட்டம சனியாக அமர்ந்து நற்பலன்களை செய்வார். லாப ஸ்தானத்தில் குரு வைகாசியில் விரைய குருவாக அமர்வதும் உங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை மாற்றி அமைய போகும் காலமாக அமையும்.
பொதுவாக சனி அட்டமத்தில் அமரும் போது கடுமையான சோதனைகளை தருவார். ஆனால் உங்களுக்கு ஆறாமிடத்து அதிபதியான சனி எட்டில் அமர்வது சிறப்பான நற்பலன்களை தருவார். அவரே உங்களுக்கு ஏழாம் அதிபதியாக இருப்பதால் கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு மனஉளைச்சலை தருவார். முதல் கட்டமாக ஓராண்டுக்கு சனி ஆறாமிட பலனை தருவதால் இந்த தமிழ் புத்தாண்டு நல்ல பலனை மட்டுமே தருவார். தீராத கடன்களை தீர்த்து வைப்பது. மேல் முறையீடு செய்து வழக்கில் நல்ல தீர்ப்பை பெறுவது போன்ற நன்மைகளை பெறுவீர்கள்.
எதிர்வரும் வைகாசி முதல் குரு விரைய ஸ்தானத்தில் அமருவது ஆண்டின் முதல் பகுதியில் பஞ்சமாதிபதி குரு பண விரையமும், தங்க நகை அடவு வைத்தல் போன்ற சோதனைகளை தருவார். ஆண்டின் பாதிக்கு மேல் அட்டம ஸ்தானாதிபதியான குருவால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்பது போல நற்பலன்களை பெற்றுத் தருவார். இனி எல்லாம் சுபமாக அமையும். குரு பார்வை பெறும் இடங்களும் நன்மையை கிடைக்கும்.
கார்த்திகை மாதம் முதல் ராகு / கேது பெயர்ச்சியில் ஆறாமிடத்தில் ராகு அமர்ந்து நோயிலிருந்து விடுதலையும் கேது குருவுடன் இணைந்து போயக பலன்களையும் தந்து இந்த ஆண்டின் சிறப்பான வாழ்க்கை சூழ்நிலைகளையும் தொழில் வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும் கிடைக்க பெறுவீர்கள். வராத தொகைகள் வந்து உங்களுக்கு கிடைக்க பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்:
1, 3, 6.
பரிகாரங்கள்:
சனிக்கிழமை, ஞாயிறுகளில் பைரவருக்கு செவ்வரளி பூ சாற்றி நல்லெண்ணெய் தீபமேற்றி தயிர் அன்னம் வைத்து வேண்டிவர சகல காரியமும் நன்மையையும், வெற்றியையும் பெற்று தரும்.
















