ஸ்ரீ பராபவ தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - மிதுனம்

ஸ்ரீ பராபவ தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - மிதுனம்

சிறிய செயலாக இருந்தாலும் சிரத்தை எடுத்து செயல்படும் மிதுன ராசி வாசகர்களே!
 
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து தொழில் இல்லாதவருக்கு நல்ல தொழிலும் வேலையும் அமைய பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிக் கொள்வீர்கள்.
 
இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து உங்களுக்கு பல காரியங்கள் தானே செயல்பட துவங்கும், பூட்டிய தொழிற்சாலை இயங்க வேண்டிய உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் நல்ல முடிவை எட்டும். சனி கொடுத்தால் யார் தடுப்பார். செயலிலும், சொல்லிலும் வலிமையை பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர் சீக்கிரம் நல்ல வேலை கிடைக்க பெறுவீர்கள். முக்கிய நபர்களின் சந்திப்பால் உங்களின் விருப்பம் போல நன்மைகளை பெறுவீர்கள். யோகபலன் உள்ள ஜாதகருக்கு பதவி உயர்வு. அரசியலில் முக்கிய பதவிகள் கிடைக்க பெறுவீர்கள். பொதுவாக மிதுன ராசிகாரர்களுக்கு எதிர்பாராத பதவிகள் கிடைக்க பெறுவதுடன் முன்னைவிட சிறப்பாக நலன் பெறுவீர்கள். சுமையாக இருந்த பல விடயங்கள் இனி சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும்.
 
ஜென்ம குருவாக இருந்த குரு வைகாசியில் தனஸ்தானத்தில் அமர்ந்து மறைவு ஸ்தானங்களையும், தொழில் ஸ்தானத்தையும் பார்வை இடுவது தடைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். தங்க நகை வாங்குவது கனவாக இருந்த உங்களுக்கு தங்க நகை வாங்குவீர்கள். கல்விக்கு தேவையான வசதிகளை பெறுவீர்கள். எந்த முடிவையும் உடனே எடுக்காமல் சில காலம் யோசித்து செய்வீர்கள். தொழிலில் இதுவரை பல சிரமங்களை சந்தித்து வந்த நிலைமாறி வங்கி மூலம் கடன் பெற்று தொழிலை விருத்தி செய்து கொள்வீர்கள். கலைதுறையில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளிநாட்டு தொழில் செய்பவருக்கு மேலும் தொழில் விருத்தி பெறுவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி பயில வசதி வாய்ப்புகள் அமையும். எதையும் எதிர்கொள்ளும் மனவலிமையை பெறுவீர்கள்.
 
வரும் கார்த்திகை மாதத்தில் ராகு / கேது பெயர்ச்சியாகி தனஸ்தானத்தில் கேது குருவுடன் இணைவதும், ராகு அட்டமஸ்தானத்தில் அமர்வதும் திருமண தடைகள் இருந்தாலும் குரு பார்வையால் திருமண தடைகள் நீங்கும் சிலருக்கு தடைகளை நீக்க பரிகாரம் செய்து சரி செய்து கொள்வீர்கள். அதிக வயதான ஆண் / பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கும். வெளிநாடு செல்ல விருப்பம் உள்ளவர்களுக்கு விரைவில் நல்ல வேலை கிடைக்கும். உங்களின் எண்ண கனவுகளை  விரைவில் நிறைவேற்றி கொள்வீர்கள். பொருளாதாரம் மேன்மை அடையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
பச்சை, மஞ்சள், நீலம், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட எண்கள்:
 
3, 5, 8.
 
பரிகாரங்கள்:
 
ஞாயிறு அன்று மாலை 04.30 - 06.00 மணி ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய், சிவப்பு வண்ண திரி போட்டு தீபம் ஏற்றி தயிர் அன்னத்தை நைவேத்தியம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.