ஸ்ரீ பராபவ தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் - 2026 - கடகம்
அனைத்து விடயங்களில் ஆர்வம் காட்டி செயல்படும் கடக ராசி வாசகர்களே!
இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவான் அமர்ந்தும் அடுத்து குரு ராசியில் வந்த அமர்வதும் உங்களின் செயல்களில் வீரியத்தையும், மனவலிமையும் பெறுவீர்கள். சரியான பாதையை தெரிவு செய்து நல்ல பலனை பெறுவீர்கள்.
அட்டம சனியாக இருந்து உங்களின் செயல்பாடுகளை முடக்கிய சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை மாற்றி அமைத்து தருவார். இதுவரை அட்டம சனியில் என்ன விதமான கஷ்டங்களை தந்தாரோ அதனை அவரே நல்லபடியாக முடித்து அதிலிருந்து விடுதலை பெற செய்வார். எதையும் முன்கூட்டியே செய்யும் உங்களின் பழக்கம் மீண்டும் செயல்படதுவங்கும். பொது விடயங்களில் உங்களின் தயக்கம் இனி துணிச்சலாக மாறும். எதையும் துணிவுடன் செயல்பட துவங்குவீர்கள். உங்களை மதிப்பவரை நீங்களும் மதித்து நடப்பீர்கள். செய்யும் காரியத்தை திருத்தமாக செய்வதையே விரும்புவீர்கள். பார்க்கலாம், யோசிப்போம் என்பதற்கு இடம் தரமாட்டீர்கள். கூட்டு முயற்சிகளுக்கு முன்னுரிமை தருவீர்கள்.
ஜென்ம குருவாக ராசியில் உச்சம் பெற்று குரு அமர்வது உங்களின் சகல காரியங்களும் அனுகூலமாக அமைய பெறுவீர்கள். லட்சியத்தை அடைய எத்தகைய தியாகமும் செய்ய தயங்க மாட்டீர்கள். பொருள் செலவுகள் இல்லாமல் எதையும் அறிந்து கொள்ள முடியாது. அதனை அறிந்த பின்பு எதையும் தேடிக் கொண்டு செல்லாமல் உங்களை உணர ஆரம்பிப்பீர்கள். உங்களை பற்றி அறிந்த பின்பு ஆராய்ச்சி செய்து வெற்றி பாதையை நோக்கி பயணம் செய்வீர்கள். பல வழக்குகள் போட்டிகளிலிருந்து படிப்படியாக வெளியில் வருவீர்கள். கற்பனையான காலம் போய் நிஜ வாழ்க்கையில் பயணம் செய்வீர்கள். சொல்லும் செயலும் ஒருமித்து செயல்படுத்துவீர்கள். எதை சாதிக்க நினைத்து செயல்பட்டீர்களோ அதனை அடைவீர்கள். குரு பார்வை பெறும் இடங்கள் சிறப்பான பலனை பெற்று தரும்.
கார்த்திகையில் ராகு / கேது பெயர்ச்சியாகி ஜென்ம கேது குருவுடன் இணைவதும், களத்திர ஸ்தானத்தில் ராகுவும் அமர்வது திருமண தடைகளை குரு பார்வையால் நீங்கும். பல வருடம் திருமணம் நடக்காமல் இருந்த ஆண் / பெண்களுக்கு பரிகாரம் மூலம் விரைவில் திருமணம் நடக்கும். கூட்டுத் தொழிலில் மேன்மை அடைவீர்கள். ஒரு செயலில் ஈடுபடும் போது வேறு செயல்பாடுக்கு முக்கியத்துவம் தராமல் தவிர்ப்பீர்கள். பொருளாதார நிலை வளர்ச்சியை தரும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், பலவர்ணம்.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 3, 6.
பரிகாரங்கள்:
வெள்ளிகிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வெள்ளை நிற பூ வைத்து இரண்டு நெய் தீபமேற்றி இனிப்பு பொங்கல் வைத்து வேண்டி வர உங்களின் அனைத்து காரியமும் சிறப்பாக அமையும்.
















