செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - மேஷம்

விருப்பத்தை அடைய எதையும் செயல்படுத்தும் மேஷ ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதால் பொது எதிரிகளிடமிருந்து விடுதலை பெறுவீர்கள். மூன்றாமிடத்தில் குரு அமர்ந்து உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து செயல்படுவார். தனஸ்தானாதிபதி சுக்கிரன் சுகஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவது தொழில் மேன்மை உண்டாகும்.
பூர்வ புண்ணியாதிபதி ஆட்சி பெற்று பலம் பெறுவதால் பூர்வீக சொத்து சம்மந்தமான செயல்பாடுகள் சிறப்பாக பேசி முடிக்கும் நல்ல வாய்ப்புகள் அமையும். பேச்சு வார்த்தைக்கு முன் விநாயகரை வழிபட்டு சிதறு காய் அடித்து சென்று பேச ஆரம்பித்தால் சகல தடைகளும் நீங்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு சுயசெல்வாக்கை தக்க வைத்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளுக்கு சில தடைகள் வரும். உடல் நலனின் கொஞ்சம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டி வரும்.
பண வர வேண்டிய இடத்தில் உடனே வராமல் சில தடைகள் வந்து சிரமத்தை தரும் எனினும் உங்களின் விடாமுயற்சிகளுக்கு நல்ல பலனை பெற்று தரும். சுமைகளாக இருந்து வந்த பல கஷ்டங்கள் படிப்படியாக விட்டு விலகும். உடன் இருந்த நண்பர்கள்கூட சில நேரம் உங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பது மனவருத்தத்தை தரும். எனினும் நல்லபடியாக எல்லாம் சிறு தாமதத்திற்கு பின்பு நடக்கும். உங்களின் பேச்சில் துடிப்பான வார்த்தைகளை பயன்படுத்தாமல் இனிய வார்த்தைகளால் பேசினால் எல்லாமே சுமூகமாக அமையும். வெற்றி பாதையில் செல்ல வழி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வியாழன், வெள்ள.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
26-09-2025 வெள்ளி மாலை 03.00 முதல் 28-09-2025 ஞாயிறு இரவு 02.24 மணி வரையும்.
30-08-2025 சனிக்கிழமை காலை 09.56 முதல் 01-09-2025 திங்கள் இரவு 07.12 மணி வரையும்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழன் காலை 06.00 - 07.00 மணிக்கு கொள்ளு பயிறை விநாயகருக்கு முன் வைத்து தேங்காய் எண்ணெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள சகல தடைகளும் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
செப்டம்பர் மாதம் ராசி பலன்கள் 2025 - ரிஷபம்

நிறைவான வாழ்க்கைக்கு சரியானதை தெரிவு செய்யும் ரிசப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுக்கிரன் முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியஸ்தானத்தை பார்வை இடுவதால் உங்களின் எண்ணம் போல காரியம் நிறைவேறும் லாபாதிபதி குரு தனஸ்தானத்தில் இருப்பது நல்ல வாய்ப்பாக அமையும். எதிர்காலத்திற்கு தகுந்த நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். சரியான தெரிவுகளை உருவாக்கி கொள்வீர்கள்.
தனாதிபதி புதன் வீட்டில் குரு அமர்ந்து உங்களுக்கு சேர வேண்டிய பொருளாதார வளங்களை கிடைக்க செய்வார். சரியான நேரத்தில் செயல்பாடுகளை ஊக்கபடுத்தி மேன்மையை அடைவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவருக்கு குழந்தை உண்டாகும். நெருக்கடியான சில சூழ்நிலை மறையும். வேறு வாய்ப்புகளை தேடி போகாமல் உங்களுக்குரிய தொழிலில் ஆர்வமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.
சுகாதிபதி சூரியன் ஆட்சி பெற்று புதனுடன் இணைவு பெறுவதால் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். ஆராய்ச்சி, அறிவாற்றல், பேச்சு திறமை, மனவலிமை பெற்று திறம்பட செயல்படுவீர்கள். காரண காரியமில்லாமல் யாரையும் தொடர்பு கொள்ள மாட்டீர்கள். எந்த வாக்குறுதியும் தர மாட்டீர்கள். கொடுத்தால் அதை காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமோ.. அதை செய்வீர்கள். அரசியலில் முழு ஈடுபாடுகளை குறைத்து கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு உங்களின் சொந்த முயற்சியால் உங்களுக்கு பல வழிகளில் வெற்றி கிடைக்கும். கொடுத்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். உறவுகளில் இருந்த மனகசப்பு நீங்கி, சுபிட்சம் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, சனி, ஞாயிறு.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
01-09-2025 திங்கள் இரவு 07.13 முதல் 04-09-2025 வியாழன் அதிகாலை 04.46 மணி வரையும்.
28-09-2025 ஞாயிறு இரவு 02.25 முதல் 01.10.2025 புதன் பகல் 12.06 மணி வரையும்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி அரளி பூ வைத்து மிளகு கலந்து அன்னம் நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ள நீங்கள் நினைத்த காரியம் கைகூடும்.