சனி பெயர்ச்சி பலன்கள் - 2026 - கன்னி
அறிவும், ஆற்றலும் நிறைந்து எதையும் சாதிக்கும் கன்னி ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு பஞ்சம ஸ்தானாதிபதியும், சத்ரு ஸ்தானாதிபதியுமான சனி பகவான் 06-03-2026 முதல் களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து ராசியையும் சுகஸ்தானத்தையும் பாக்கிய ஸ்தானத்தையும் பார்வை இடுவது உங்களின் வாழ்க்கையில் பல்வேறு விதமான விடயங்களை நிதானமாக செயல்படுத்தும் திறமையை வளர்த்து கொள்வீர்கள். சனி கொடுத்தால் யார் தடுப்பார். சனி கெடுத்தால் யாரும் தருவார்.
உங்களின் ராசிக்கு நட்பு சிரகமான சனி உங்களுக்கு நன்மையும், தீமையும் வழங்குவார். இனி எதை செய்தாலும் நன்கு ஆய்வு செய்து அதற்கு பின் எதை செய்தாலும் நல்லது. சிறு விடயங்களாக இருந்தாலும் அதனை கையாளும் விதத்தை பொறுத்து நற்பலன்கள் கிடைக்கும். அவசர கோலத்தில் செய்யும் எந்தவித காரியமும் பலன் தராது. இதனை புரிந்து செயல்படுவது நல்லது. அரசியல் ஈடுபாடு சில நேரம் சரியாக அமையாமல் போகும். உங்களின் வளர்ச்சி உங்கள் கையில் உள்ளது என்பதை உணர்ந்து கொள்வது அவசியம். பசித்தவருக்கு உணவு அளித்தல், ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்தல், பறவைகளுக்கு இறை இடுதல் இதுபோல காரியங்களை தொடர்ந்து செய்து வருதல் மிக்க சிறப்பான நற்பலனை தரும்.
பணமே உங்களுக்கு சில நேரம் பகையை உண்டு பண்ணும் என்பதால் பணத்தை கையாளும் விதம் மிக சிறப்பாக அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி உறவுகளில் சில நேரம் பிரச்சனை வரலாம். அதிகம் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. குடும்ப பிரச்சனையை கையாளும் போது நிதானம் மிகவும் முக்கியம். சோதனையை கண்டு பயப்படாமல் அதற்கு தீர்வுகளை யோசித்து செயல்படுவது நல்லது. எந்த ஒரு காரியமும் மனவருத்ததை தராமல் செய்து வர பழகிக் கொள்வது இந்த காலத்திற்கு நல்லது. நண்பர்களிடம் பழகும் போது பணம் சார்ந்த விடயங்களில் கவனமாக இருப்பது உங்களுக்கு நல்லது.
வாகனம் இயக்கும் போது சாலையில் நிதானமும், கவனமும் அவசியம். இதனால் சில நேரம் மனகஷ்டம் படவேண்டி வரும். வாக்குறுதி நிறைவேற சில நேரம் போராட வேண்டியதிருக்கும். கணிணி துறையில் சிறந்து விளங்குவீர்கள். உங்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். குரு பார்வை பெறும் காலம் நன்றாக இருக்கும்.
பரிகாரங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் (09.00 - 10.30) பைரவருக்கு எட்டு நல்லெண்ணெய் தீபமிட்டு மிளகு அதில் போட்டு ஏற்றி வேண்டிக் கொள்ள உங்களின் பிரச்சனைகள் விரைவில் தீரும். அன்னதானத்தை செய்து வர வரும் துன்பம் முழுமையாக தீரும்.
















