அக்டோபர் மாத ராசி பலன்கள் - 2026 - மேஷம்
வாழ்க்கையை வளமாக வைத்து கொள்வதற்காக பாடுபடும் மேஷ ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் கடகத்தில் நீசம் பெற்ற உச்ச குருவோடு இணைவது நல்ல வளமும், நலமும் பெற்று மேன்மையையும் செல்வாக்கும் பெற்று திகழ்வீர்கள். சொல்லும், செயலும் வல்லமை பெற்று, செலவுகள் ஏதுமின்றி நலம் பெறுவீர்கள். அரசியலில் கொஞ்சம் ஈடுபாடுகள் இருக்கும்.
உங்களின் ராசிநாதன் நீசமாகி உச்ச குருவுடன் இணைவு பெறுவது பூமி சார்ந்த நல்ல பலன்களைக் கிடைக்கப் பெறுவீர்கள். பாதுகாப்புத் துறையில் பணி செய்பவருக்கு வெகுமதிகளும், பதவி உயர்வும் கிடைக்கும். கப்பல் சார்ந்த துறையில் வேலைக்கு முயற்சி செய்து வருபவருக்கு வேலை கிடைக்கும். உணவு தயாரிப்பு சார்ந்த கல்வி பயில.. நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதையும் கேட்டு பெறுவது உங்களின் வாழ்க்கையில் கிடையாது.
கேட்காமல் கிடைப்பதையே விரும்புவீர்கள். உங்களின் சம அந்தஸ்து உள்ளவர் களிடம் தான் அதிகம் பழகுவீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது அமர்ந்து உங்களின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தாலும் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனைத் தருவார். குருவோடு இணையும் காலம் யோக காலமாக அமையும். கிடைக்காது என்று இருந்த பொருளோ, சொத்தோ உங்களுக்கு கிடைக்க வாய்ப்புகள் அமையும்.
பூர்வ புண்ணியாதிபதி சூரியன் ஆறில் அமர்ந்து சத்ரு தொல்லைகளை போக்குவார். மறைமுகமாக இடையூறுகளை செய்பவருக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். களத்திர ஸ்தானத்தில் புதனுடன், சுக்கிரன் இணைவு பெறுவது சிலருக்கு பெண்களால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். கலைத்துறையினருக்கு நல்ல தொழில் முன்னேற்றமும் தொடர்ந்து கலைத்துறையில் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பும் அமைய பெறுவீர்கள்.
லாபஸ்தானத்தில் ராகு ராசிநாதன் நட்சத்திரத்தில் அமர்வது உங்களின் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். கொடுத்ததை திரும்ப பெறும் வசதியை பெறுவீர்கள். விரைய சனியை உச்ச குருவின் பார்வை பெறுவதால் சனியால் எந்த தொல்லையும் இருக்காது நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் தெளிவான முடிவுகளை எடுக்கும் இடத்தில் நீங்கள் இருப்பீர்கள். சுமைகளை இறக்கி வைப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஆரஞ்சு, வெண்மை, பச்சை.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், புதன், வெள்ளி.
இம்மாதம் உங்களின் சந்திராஷ்டம நாட்கள்:
13-10-2026 செவ்வாய் இரவு 08.16 முதல் 16-10-2026 வெள்ளி காலை 07.21 மணி வரை.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமை காலை 06.00 - 07.00 மணிக்குள் விநாயகர் வழிபாடு செய்து எருக்கம்பூ மாலை போட்டு தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள சகல தடைகளும் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
















